Sunday, December 30, 2012

திருப்பாவை 13.புள்ளின்வாய் கீண்டானை,

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
>

Welcome 2013 A Happy & Prosperous Year for All


நம்பிக்கை என்பது நாம் பிறந்த மண், நாம் இருந்த கருவறையின் விசேஷம். நம்மை வளர்த்த பெரியவர்கள் நமக்கு கொடுத்த சீதனம். அதனை பல சமயம் பகுத்தறிவு, சீர் தூக்கிப்பார்க்கும் முதிர்ச்சி என்ற தவறான போர்வையில் நம்மை மாற்றிக்கொள்கிறோம்; தவறு ஏமாற்றிக் கொள்கிறோம். நம்மில் சிலரிடம் கேட்டபொழுது, எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறுவார்கள். ஆனால் பிறர்க்குத் தெரியாமல் தன்னையும் தன் சுற்றார் நலன் பற்றி சோதிடரை அணுகி ஆராய்வார்கள். புது வருடம் பிறக்கப் போகிறது. இரண்டாயிரத்து பதிமூன்றாம் வருடக் குழந்தையின் க்ரஹ நிலையை கணித்து இங்கே கொடுத்துள்ளேன். நம்மில் தெரிந்தவர் பலனை எழுதலாம். அது மற்றவர்களுக்கு மனதிற்கு இதம் அளிக்கலாம். அது அவரவர் மனப்பக்குத்தைப் பொருத்தது.
(சென்னைப் பட்டினத்தின் விவரங்களை வைத்து குறிக்கப்பட்டுள்ளது)
எங்கள் குருநாதர் கூறுவார், “அதனை தெரிந்து கொள்வதால் தவறில்லை. எதிரே உள்ள பள்ளத்தில் எப்படி இருந்தாலும் விழுந்து அடி கிடைக்கப் போகிறது. அது அவரவர் வாங்கி வந்த வரன். க்ரஹ நிலை தெரிந்து அதற்குத் தக்கவாறு நடந்தால், அதனால் வரும் சிரமம் சிறிது குறைவாகத்தெரியும். அல்லது அதனின்று வெளிவர ஒரு வாய்ப்பை நமக்கு ஈசன் அருளுகிறான்என்பார்.
இதைப் பற்றி “இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியுள்ள ஒரு கட்டுரை என்னை மிகவும் கவர்ந்த்து. தினகரன் நாள் ஏட்டில வந்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி தினகரன்
2013 என்கின்ற புதுக்குழந்தையை 
நாம் எல்லோரும் வரவேற்கலாம்

நான் உங்களுடன் புது வருட வாழ்த்துக்களை பறிமாரிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னைவிட சிறியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாதம் நான் பாடிய திருப்பாவை திருவெம்பாவப் பாடல்களை இங்கே கேட்டு நீங்கள் ஆய்வு செய்யலாம். அனுபவிக்கவும் செய்யலாம்.





Saturday, December 29, 2012

திருவெம்பாவை 03.முத்தன்ன வெண்ணகையாய்


முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 12.கனைத்து இளங் கற்றெருமை

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

Friday, December 28, 2012

திருப்பாவை 11.கற்றுக் கறவை

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை 10.நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!

அபலையின் மானம் காத்த மகாபெரியவா

திரு.நடராஜன் எனபவர் எங்களது குருநாதரின் முக்கிய சீடர்களில் ஒருவர். அவர் பல நல்ல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். மகா பெரியவாளுடன் சேர்ந்து இருந்த பல அனுபவங்களை பலர் எழுதுவதை தொகுத்து வெளியிடுவதை அவர் மின் அஞ்சல் மூலம் அனுப்பினதை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன். இந்த பதிவிற்கு திருமதி வசந்தகுமாரி அவர்களின் உகபோகா மிகவும் பொருத்தமானது. அதனையும் உங்களுடன் சேர்ந்து கேட்டு மகிழ்கிறேன்.


கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.
எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !என்றார்.  யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள்.  பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்தாடா……….கொழந்தே! இங்க வா”  சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில் இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.> > அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!
ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!
இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை.   அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி கோவிந்தாஎன்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார்.  அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.

திருப்பாவை 9.தூமணிமாடத்து


தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்


மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்


ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?


மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!

ஏமப் பெரும்துயிலில் இருக்கும் தோழியின் காதில் எதுவும் விழாத காரணத்தினாலேஆண்டாள் கோபத்துடன், "உன் மகள் தான் உமையோ?  அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்கிறாள். மேலும் கோதை நாச்சியார், பரமனின் திருநாமங்களைச் சொன்னாலாவது எழுந்திருப்பாளோ என்று "மாமாயன் மாதவன் வைகுந்தனென்று" என்றனள். மாமாயனின் மாயத்தை புரிந்து கொண்டு நம்மாழ்வார் தம் பாசுரத்தில் "அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே?" என்று அருளியுள்ளார். வராக அவதாரத்தின்போது, பெருங்கடலானது பரமனின் கணுக்காலை மட்டுமே நனைத்ததுகிருஷ்ணாவதாரத்திலோ யசோதாவால் கண்ணனை கையளவு நீரிலே குளிப்பாட்ட முடிந்தது! ஏமம் என்ற சொல்லுக்கு இரவு,  இன்பம்,  உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி என்று பல அர்த்தங்கள் உண்டு.

திருவெம்பாவை 02 பாசம் பரஞ்சோதி



பாசம் பரஞ்சோதிக் கென்பாய் தீராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார்? யாம் ஆரேலோர் எம்பாவாய் ......(2) 

ஆருத்ரா தரிசனம்

தனுர் மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் நாள் இன்று. ஹரனை முதன்மயாக தொழுபவர்கள் வ்யாக்ரபாதரும் ஆதிசேஷரும் ஆவர். அவர்கள் இருவர் முன் சிவன் ஆடிய தேஜோமயமான சிவ தாண்டவத்தை ருத்ர கணங்கள், பூதகணங்கள் தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் என்று பலர் கண்டு ரசித்த நாள் இன்று. மாணிக்கவாசகருக்கு இருபது திருவெம்பாவையையும் பாடிமுடித்தவுடன் அவருக்கு தரிசனம் தந்த நாள் இன்று. மேலும் பார்வதி சிவனை நினைந்து தவம் இருந்து அவரது தரிசனம் கிடைத்து, ஆட்கொண்ட நாள் இது. ஆருத்ரா தரிசனத்தின் முக்கியத்துவத்தை PDF வடிவத்தில் அமைத்துள்ளார்கள். 

Thursday, December 27, 2012

திருவெம்பாவை 01.ஆதியும் அந்தமும்


மாணிக்கவாசகர் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவருக்குத் திருவாதவூரர் என்ற பெயரும் உண்டு. இவரின் நூல்களான திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டினுள் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.
 ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்! .......(1)
சங்கீத வித்வான்கள் விதூஷிகள் ஓதுவார்கள் கானாமுதமாய் தந்த இந்த திருவெம்பாவையை நானும், உட்பொருளை ஓதி உணர்ந்து பாட விழைகிறேன்.

Wednesday, December 26, 2012

Is it Hall Mark Virus or the caution is outdated ?

Virus

This forward is being circulated in mails.

If this news is true we can thank our friends.

If it is a false alarm never mind we can be cautious next time.

You should be alert during the next few days. Do not open any message with an attachment entitled POSTCARD FROM HALLMARK , regardless of who sent it to you. It is a virus which opens A POSTCARD IMAGE, which 'burns' the whole hard disc C of your computer. This virus will be received from someone who has your e -mail address in his/her contact list.This is the reason you need to send this e -mail to all your contacts. It is better to receive this message 25 times than to receive the virus and open it. If you receive an email entitled "POSTCARD," even though it was sent to you by a friend, do not open it! Shut down your computer immediately. This is the worst virus announced by CNN. It has been classified by Microsoft as the most destructive virus ever.  This virus was discovered by McAfee yesterday, and there is no repair yet for this kind of Virus. This virus simply destroys the Zero Sector of the Hard Disc, where the vital information is kept.

About.com Legends says

NOTE: Some versions of this hoax claim the information was "verified" on Snopes.com. This is NOT true. What has been verified on Snopes.com is adifferent e-card virus threat with a similar name. DO beware of phony "Hallmark" (or other) e-card notices — they may indeed carry a real virus. DON'T be confused by the false descriptions in the messages quoted below.

Monday, December 24, 2012

திருப்பாவை 8.கீழ்வானம் வெள்ளென்று


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!


திருப்பாவை 7.கீசு கீசு என்று

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
இந்தத் திருப்பாவை மூலம்  பல முக்கிய செய்திகளை அறியலாம்.

1. வலியன் குருவியை பாரத்வாஜப் பறவை என்றும் அழைப்பர். ஒரு முறை, வலியன் குருவி வடிவில் பாரத்வாஜ முனிவர், பெருமாளை வணங்கி வழிபட்டதாக ஒரு பழங்கதை உண்டு.
2.'காசும் பிறப்பும்' என்ற ஆபரணங்கள் இங்கே வேதங்களை (அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதியை) குறிப்பில் உணர்த்துகின்றன
3. காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம் ஆகிய மூன்று மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.
4. ஆனைச்சாத்தன் என்பது பரமனைக் குறிக்கிறது என்றும் கொள்ளலாம், அதாவது யானையைக் காத்தவன் என்றும் யானையை அழித்தவன் என்றும்! பரந்தாமன் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காத்து ரட்சித்தான், கம்சன் அனுப்பிய குவலயாபீடம் என்ற யானையை கண்ணன் அழித்தான்.
5. தேஜஸ் தாஸ்ய பாவமும், தாஸ்ய ஞானமும் உள்ளவருக்கே (பரமனே எஜமானன், அவனைச் சரண் புகுதலே உய்வதற்கான ஒரே உபாயம் என்று முழுமையாக உணர்ந்தவர்க்கே!) வாய்க்கும்! பூவுலகிலேயே தாஸ்ய ஞானம் வாய்க்கப் பெற்றவரில் அனுமன், பீஷ்மர், கோபியர் ஆகியோர் அடங்குவர்.
6. இப்பாசுரத்தில் பலவகையான செவிக்கினிமையான ஓசைகள் சொல்லப்பட்டுள்ளன.
1. ஆனைச்சாத்தன் குருவிகள் கூவும் ஓசை
2. ஆய்ச்சியரின் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கலகலவெனும் ஒலி
3. அவர்கள் தயிர் கடையும் சப்தம்
4. நாராயண சங்கீர்த்தனம்
(மின் வலையில் இருந்து எடுத்துத் தொகுத்த்து) –
             நன்றி பலாஜியின் மின்வலைத் தளம்

Saturday, December 22, 2012

திருப்பாவை 6.புள்ளும் சிலம்பின காண்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


Friday, December 21, 2012

திருப்பாவை 5. மாயனை மன்னு

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
தூமலர் தூவித் தொழுது - இங்கு மலர் என்பது அடியவரின் உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாக மலரும் எட்டுவகை குணநலன்களை குறிப்பில் உணர்த்துகிறதாம்!
1. அகிம்சை, 2. புலனடக்கம், 3. எல்லா உயிர்களிடத்திலும் நேசம், 4. சகிப்புத்தன்மை, பொறுமை, சமத்துவம், 5. ஞானம், 6. தியானம், 7. ஆன்மீக தவம், 8. சத்தியம்
எளிமையாகச் சொல்லவேண்டுமானால், பரமனைப் பற்ற, பெரிய அளவில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் எல்லாம் அவசியமில்லை என்கிறாள் ஆண்டாள்! கடைபிடிக்க வேண்டியதெல்லாம், அப்பரமனை மலர் தூவி வணங்கி, போற்றிப் பாடி, முடிந்த பொழுதெல்லாம் அவனை சிந்தித்த வண்ணமிருத்தலே! இந்த ப்ரபத்தி மார்க்கமே மோட்ச சித்தியை அருளவல்லது என்பதே இப்பாசுரத்தின் சாரம்.

Wednesday, December 19, 2012

Aazhimazhai Kanna 4- Tiruppavai (திருப்பாவை 4 -ஆழி மழைக்கண்ணா)


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோள் உடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்நாங்களும்
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்


Tuesday, December 18, 2012

Bhuthana, Is she a demon?

“ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிஎன்ற பாசுரத்தைப் பாடியவுடன், நான் படித்த ஒரு சுவையான அவதார மகிமையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். இதோ அந்த செய்தி.

அகிலம் என்ற நாடக மேடையை நிர்மாணிக்கும் இறைவன், அதற்கான கதா பாத்திரங்களை முதலில் உருவாக்கிய பின் அந்த அரங்கில் ப்ரவேசிக்கிறார்.  ராமாவதாரத்திற்கும், க்ருஷ்ணாவதாரத்திற்கும் உதவுமாறு, ப்ரம்மனின் அம்சமான ஜாம்பவானை வாராஹாவதாரதிலேயே கொண்டு வந்து நிறுத்தி உலகுக்கு அந்த சிரஞ்சீவியை அறிமுகப்படுத்தினார்.
க்ருஷ்ணாவதரத்தில் ப்ரவேசிக்கும் பூதனை என்ற அரக்கி ஏன் உருவானாள்? எப்படி உருவானாள் தெரியுமா?

மஹாபலியின் கல்யாணம் ஆன பெண் நிர்மலா தன் தகப்பனார் செய்யும் யாகத்திற்கு வருகிறாள். யாகசாலைக்கு வருகை தரும் வாமனனாக நடந்து வரும் அந்த பரந்தாமனின் முக காந்தியையும், ரூபத்தையும் பார்த்து, இவனைப் போல் தனக்கு ஒரு மகன் பிறந்து, அவனை மடியில் கிடத்தி ஸ்தன்யபானம் செய்ய வேண்டும் என்று நினைத்தாள். அந்த மாயாவி ததாஸ்து என்று வரம் அருளினார். மஹாபலியிடம் மூவடிமண் வேண்டிப் பெற்று தாரை நீர் நிலத்தில் விழுவதற்கு முன்
“ஆழி எழ, சங்கும் வில்லும் எழ,
திசை வாழி எழ, தண்டும் வாளும் எழ,
அண்டம் மோழை எழ, முடி பாதமெழ
அப்பன் ஊழி எழ உலகம் உண்டவூணே
என்று வளர்ந்து மஹாபலியை ஆட்கொண்ட்தோடு அல்லாமல், அங்கு வந்த மஹாபலியின் மகன் நமுசி வாமனின் காலைப் பிடித்து, பரந்தாமன் அவாமனனாகுவதைத் தடுக்க, நமுசியையும் தடுத்தாட் கொண்ட மாயைக் கண்டு, துணுக்குற்ற நிர்மலா “உன்னைப் பிள்ளையாகப் பெற்று ஸ்தன்யபானம் செய்ய நினைத்தேன். மாறாக உனக்கு விஷம் அல்லவா கொடுக்க வேண்டும் என்று அறற்ற அவாமனன் ததாஸ்து என்றான். க்ருஷ்ணாவதாரத்திற்கு ஒரு கதா பாத்திரத்தை அப்பொழுதே உருவாக்கி விட்டான். அவள் தான் பூதனை. என்னே அவன் மாயம் !