Showing posts with label எனது பக்கம். Show all posts
Showing posts with label எனது பக்கம். Show all posts

Monday, November 25, 2013

SUPERSTITION ??!!


Superstition, belief in supernatural causality: that one event leads to the cause of another without any natural process linking the two events, such as astrology, religion, omens, witchcraft, etc., that contradicts natural science.

-Courtesy Wikipedia 

மூட நம்பிக்கை என்றால் என்ன. பகுத்தறிவாதி என்பவர் யார். மதம், கடவுள் பக்தி, சோதிடம் இவைகளில் நமிபிக்கை வைப்பவர்களை மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்பவரா? 

பகுத்தறிவாதிகள் என்பவர்கள் விஞ்ஞானத்தில் கரைகண்டவர்களா? அப்படிஎன்றால் அவர்கள் உலகரீதியில் மிகவும் புத்திசாலிகளா என்ற பல ஐயங்கள் நமக்கு வருகிறது. பரமாச்சார்யார்  மூடனம்பிக்கையைப்   பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றியுள்ளார். கே.என்.ஆர்.ரமேஷ் என்பவரது ப்ளாகில் நான் படித்தது.

பகுத்தறிவு - மூட நம்பிக்கை பற்றி  மகாபெரியவா கூறியது 


Tuesday, October 15, 2013

Jeevathma and Paramathma Relation - By Naradha

சிறு ப்ராயத்தில் நமது பெற்றோர்கள் நமக்கு பல நீதிக் கதைகளைச் சொல்லி நம்மை நல் வழிப்படுத்தினர். நாமும் நமது குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நன்நெறி போதிக்க இதிஹாஸத்திலிருந்து பல கதைகளைச் சொல்லி நீதி, தர்மம், நல்வழி என்ற நல்ல செய்திகளை சொல்கின்றோம். கதைகள் மூலம் நல்ல செய்திகளைச் சொல்லி மனதில் பதியவைப்பது என்பது தொன்று தொட்டு வரும் வழிமுறையாகும். நாரத மகரிஷி ப்ராசீனபர்ஹீ என்ற அரசனுக்கு ஆத்மா, ஜீவன், ப்ரம்மம், ஜன்மம், மரணம், ஸமாதி நிலை, முக்தி என்ற பல அறிய விஷயங்களை ஒரு கதை மூலம் சொல்லி, இவைகளுக்குள் உள்ள சேர்க்கைகள் என்ன என்று விளக்குகிறார்.
வெளி நாட்டவர் நமது புத்தகங்களை அலசி அதிலிருந்து பல அறிய செய்திகளை, ஆங்கிலத்திலும், எனைய பிற மொழிகளிலும் அச்சிட, அந்தப் புத்தகங்களை நாம் வாங்கிப் படித்து, நமது சமூகத்தில் நம்மை மதிக்க வேண்டி அந்தப் புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டி நம்மையே நாம் உயர்த்திக் கொள்ள முயற்சிக்கிறோம். என்னே அவலம். 
கீழ் வரும் பாகத்தில் அந்தக் கதையையும், அந்தக் கதையின் நாயகர்கள் நாயகிகளை சிவப்பு வண்ணத்தில் கவனயீர்ப்பு செய்துள்ளேன். சிவப்பு வண்ணத்தில் இருப்பதைச் சேர்த்தால், பிறப்பு, இறப்பு, ஜீவாத்மா, பரமாத்மா உயிர்தத்துவம் எல்லாம் விளங்கும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் 4-28-65 ஸ்லோகம் வழியாக நாம் அறியலாம்.
பர்ஹிஷ்மன்னேத தத்யாத்மம் பாரோலக்ஷ்யேண ப்ரத்ர்ஸிதம்
யத்பரோக்ஷ ப்ரியோ தேவோ பகவான் விஸ்வபாவன:
புரஞ்ஜனன் (ஜீவாத்மா) என்ற ஒரு அரசன் அவனது நண்பன் அவிஜ்ஞதனுடன் (பரமாத்மா) அவர்கள் இனிதே வாழ நல்ல அரண்மனையைத் தேடி அலைந்தனர். பல பட்டணங்களைப் பார்த்து அவைகள் பிடிக்காமல் இமயமலை நோக்கிச் சென்றனர். அங்கு ஒன்பது வாயிற்படிகள் உள்ள ஒரு பட்டினத்தைக் (மனித சரீரம்) கண்டனர். அங்கிருந்து ஒர் அழகிய பெண் (புத்தி) வெளி வந்தாள். அவளைப் பின் பற்றி பத்து வேலக்காரர்கள் (ஐந்து ஞனேந்த்ரியம் + ஐந்து கர்மேந்திரியம்) வந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கான வேலைக்காரிகள் (இந்திரியங்களின் வ்ருத்திகள்) இருந்தனர். அப்பட்டணத்தை ஒர் ஐந்து தலை நாகம் (ஐந்து ப்ராணன்) காவல் புரிந்துவந்தது. புரஞ்ஜனன் (ஜீவாத்மா) என்ற இந்த அரசன் அவளை (புத்தி) மணந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அப்பட்டணத்தில் சுகவாழ்வு வாழ்ந்து வந்தனர்.
அப்பட்டணத்திற்கு மேலே ஏழு வாசற்படிகளும், கீழே இரண்டு வாசற்படிகளும் இருந்தன. தன் மனைவி கோருபவற்றை நிறைவேற்றி வைப்பதுடன், தன் தோழனை (பரமாத்மா) மறந்து வாழ்ந்து வந்தான். தேவர்கள், பித்ருக்கள் முதலியவர்களை, பல பொருள்களை வேண்டி, யாகம் முதலியவற்றால் திருப்தி செய்வித்தான்.
இவ்வாறு இருக்கையில், ஸ்திரீகளிடத்தில் அன்பு வைத்தவர்களுக்கு அப்ரியமான காலம் ஏற்பட்டது. சண்டவேகன் என்ற அரசன் அப்பட்டணத்தை பலசாலியான 360 கந்தவர்களுடனும் (பகலும்), அதே எண்ணிகையுள்ள கந்தர்வ ஸ்த்ரீகளுடன் (இரவு) முற்றுகையிட்டு அப்பட்டணத்தை அழிக்க ஆரம்பித்தான். ப்ரஜாகரன் (ப்ராணவாயு) என்ற அரசனும் எதிர்த்து போரிட்டான்.
காலனின் பெண் துர்பகை (ஜரை – கிழ்த்தன்மை அடைதல்) என்பவள் எங்கு தேடியும் தனக்கு மணாளன் கிடைக்காத்தால், யவனர்களின் தலைவனான பயம் (ம்ருத்யு), உன்னை ஒருவரும் தெரிந்து விவாஹம் செய்து கொள்ளமாட்டார்கள். மனிதர்கள் உன்னை அறியமாட்டார்கள். ஆகையால் அவர்களுக்குள் புகுந்து அனுபவி. அதற்கு உதவியாக எனது சைன்யாமான யவனர்களை (சரீர வ்யாதியும் மனோ வ்யாதி) அழைத்துச் செல். எனது சகோதரன் ப்ரஜாவரனை (ஜ்வரம்) உடன் அழைத்துச் செல். எங்கள் இருவருக்கும் நீ சகோதரியாவாய். நாம் மூவரும் சைன்யத்துடன் சென்று அப்பட்டணத்தை முற்றுகையிடலாம். அங்குள்ள மனிதர்களை அனுபவி என்றான். துர்பகை ப்ரஜ்வரன், யவனர்கள், கந்தர்வர்கள், கந்தர்வ ஸ்த்ரீகள் என்ற பலரால் பீடிக்கப்பட்டு அந்த பட்டணம் தீயிட்டு அழிக்கப்பட்டது. (ஜரை வந்து, சரீர வ்யாதியும், மனோ வ்யாதியும் வந்து, ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டு, ப்ராணவாயு நின்று, ம்ருத்யவை தழுவினான்) புரஞ்சனன் அப்பட்டணத்தை (உடலை) விட்டுவிட முயன்றான். ஓடினான்.
அப்பொழுது யவனர்கள் அவனை ம்ருகத்தை இழுத்து வருவது போல் இழுத்து வந்து யவர்னகளின் தலைவனான பயத்திடம் ஒப்படைத்தனர். அப்பட்டணம் முழுமையாக எறிந்தது. உடனிருந்தவரும் மாண்டனர். அப்பட்டணத்தைக் காத்து வந்த பாம்பும் (ஐந்து ப்ராணன்) வெளியேறியது. அப்பொழுதும் தன்னுடன் வந்த நண்பனை (பரமாத்மா) நினைக்கவில்லை. மாறாக தன் மனைவியை நினைத்து வருந்தினான்.  அதனால் மறு ஜன்மத்தில் விதர்ப்பன் என்ற அரசனுடைய வீட்டில் பெண்ணாகப் பிறந்து மலயத்வஜன் என்ற அரசன் விவாஹம் செய்து கொண்டான். வெகு காலம் இல்லறத்தில் இருந்து பிறகு ஸ்ரீகோபாலனை ஆராதித்து தன் ஆத்மாவைப் பகவானிடத்தில் கலக்கச் செய்தான். சரீரத்தை விட்டுப் பிரிந்த ஆத்மா ப்ரம்மத்தினடத்தில் கலந்ததை வைதர்ப்பி உணரவில்லை. பர்த்தா விதேஹ கைவல்யமடைந்ததை அறிந்து அழுது புலம்பினாள். மேலும் சிதை தயாரித்து பர்த்தாவுடன் சிதையில் ஏறத் தொடங்கினாள்.
அப்பொழுது பழய நண்பன் அங்கு வந்து இந்த ஜன்மம் போன ஜன்மம் இரண்டையும் நினவுபடுத்தி மேலும் கூறலானான். நான் இருவரும் ஒன்று. நமக்குள் பிரிவு ஏற்பட்டு பிரிந்தோம். அற்பஸுகங்களைக் கோரி மறந்துவிட்டாய். உலகெல்லாம் திரிந்து ஒரு பெண்ணினால் நிர்மாணிக்கப்பட்ட ஒன்பது வாயில்கள் உள்ள ஒரு பட்டணத்தை அடைந்தாய். அங்கு அப்பெண்ணுடன் விஷய போகங்களில் ஈடுபட்டு என்னை மறந்து, இந் நிலையை அடைந்தாய். நீ விதர்பனின் பெண்ணும் அல்ல. மலையத்வஜனின் மனைவியும் அல்ல. நீ புருஷனுமல்ல, ஸ்த்ரீயும் அல்ல. நானே நீ; நீயே நான் என்றான்.
சரீரம் பொய்யானவை; அது அழியக்கூடியது; ஆத்மா ஒன்றே அழிவற்றது. சரீரம் அழிவதால் ஏற்படும் துக்கத்தைப் போக்க ஸ்ரீபகவானை உபாஸிப்பது ஒன்றே வழி என்று நாரத மகரிஷி ப்ராசீன பர்ஹிஸிற்கு புலப்படுத்த ஒரு கதையினைக் கூறி விளக்குவதே இதன் உட்கருத்து.

Sunday, July 7, 2013

Fate or Fatal

வலைத்தளத்தில் குழந்தைகளுக்கான பகுதியில் இந்தச் சிறுகதையினைப் படித்தேன். இது பெரியவர்களும் அறிய வேண்டிய அற்புதமான பாடம். எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதை நாம் நன்கு அறிந்தாலும் நம் பேராசை, பல சமயங்களில் நம் கண்களை அஞ்ஞானம் மறைத்து விதியை மதியால் வெல்ல்லாம் என்ற பழமொழியை முன் உதாரணம் காட்டி, அதன் பலா பலன்களை நாம் அனுபவிக்கிறோம். 
அது தான் மனிதன். மனிதன் பிறக்கும் பொழுதே அவனது வாழ்க்கையின் முழு புத்தகத்தையும் கடவுள் எழுதி அனுப்பிவிடுகிறார். இந்தப் பிறவியில் செய்யும் நற்பயன்கள் அடுத்த புத்தகத்தை சரியாக எழுத வகைப்படுத்துகிறது.
 

காட்டில் ஒருவன் தன் மனைவி, மகனுடன் வசித்து வந்தான்.அவர்கள் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு உடைமைகள் எதுவுமில்லை.அவர்கள் பகலில் நிர்வாணமாக இருந்து வந்தார்கள். எனவே, பூமியில் மூன்று குழிகள் வெட்டி அதில் கழுத்தளவு நிற்பார்கள். பகல் மறைந்த பிறகு இரவு நேரத்தில் குழிகளிலிருந்து வெளியே வந்து ஏதாவது உணவைத் தேடிக் கொள்வார்கள்.ஒருநாள், இவர்களின் நிலையைப் பார்த்து வருந்திய ஒரு மகான் இறைவனிடம், “இந்த அனாதைகளுக்கு நல்வாழ்வு அளிக்க வேண்டும்என்று வேண்டினார்.

அதற்கு இறைவன், “அவர்கள் விதியில் நீங்கள் குறுக்கிட வேண்டாம்என்றார்.

ஆனால் அந்த மகான் பிடிவாதம் செய்யவே இறைவனும் அந்த மூன்று பேருக்கும், மூன்று வரங்கள் அளிப்பதாகத் தெரிவித்தார்.இறைவனின் நற்செய்தியை அந்த மூன்று பேரிடமும் சொல்லி, “நல்ல வாழ்க்கை வாழுங்கள்என்று அருளிச் சென்றார்.

அவன் மாலையில் குளிக்கச் சென்றான். குளித்து முடித்த பிறகு இறைவனிடம் நிறைய செல்வம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

இதற்குள் அவன் மனைவி இறைவனிடம், “நான் அழகியாக வேண்டும்என்று கேட்டாள்.

உடனே அவள் தேவதை போன்ற பெண்ணாக மாறினாள்.அப்போது அங்கு இளவரசன் ஒருவன் அங்கு வந்தான். அவன் அவளது அழகில் மயங்கி அவளைத் தன் குதிரையில் ஏற்றிச் சென்றான்.அவள் நிர்வாணமாக இருந்ததால், இளவரசன் அவனது உடையால் அவளது உடலை மூடினான்.இதைக் கண்ட அவளது கணவன், “என் மனைவிக்குப் பன்றியின் முகம் வர வேண்டும்என்று இறைவனிடம் ஒரு வரம் கேட்டான்.

அவள் முகம் பன்றியாக மாறியது. இதைக் கண்டு பயந்து போன இளவரசன், அவளைக் குதிரையிலிருந்து கீழே தள்ளிவிட்டுச் சென்றான்.அவர்களது மகன் நடந்ததை அறிந்து, தனக்கு அளிக்கப்பட்ட வரத்தால் தாய்க்குப் பழைய சுய உருவம் வர வேண்டும் என்று இறைவனிடம் வரம் கேட்டான்.அவனது தாயும் சுயஉருவம் அடைந்தாள்.இப்படி அவர்கள் மூவருக்கும் அளிக்கப்பட்ட வரங்கள் மூன்றும் வீணாகப் போயின.மீண்டும் அவர்கள் குழிகளுக்குச் சென்று பழைய வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.இதைக் கண்ட மகான், “விதியை மாற்றமுடியாது. அனைத்தும் இறைவன் செயல்படியே நடக்கும்என்ற உண்மையை உணர்ந்தார்.

Tuesday, June 25, 2013

What is Life? Where is God?

OH GOD ! Where are you? What is the purpose of Life?
-----------------------------------------------------------------------------------------
That everyone’s life has a purpose is something all wise men believe (because theirs had one) and unwise like me contest (because i am still to find mine). But as I go through the motions of everyday existence I sometimes wonder if i will ever find the unique purpose that my being is meant to deliver or is it a worthless search. Does it really matter that i am a common man with no “Publishable” and “Socially Shareable” purpose in life? Perhaps the main purpose of my life is to live as every day I live.  - UNKNOWN
 “Life” and “Purpose of Life” 
Pluto is pointing heavenwards to the sky and 
Aristotle is gesturing to the World. 
कर्मणयेवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि।
The meaning of life is in the philosophical and religious conceptions of existence, Social ties , consciousness and happiness, and borders on many other issues, such  as symbolic meaning , ontology, value , purpose, ethics, good and evil, free will, the Gods, conceptions, the soul, and the afterlife. Scientific contributions focus primarily on describing related empirical facts about the universe, exploring the context and parameters concerning the 'how' of life. 
Science also studies and can provide recommendations for the pursuit of well being and a related conception of morality. An alternative, humanistic approach poses the question "What is the meaning of my life?" The value of the question pertaining to the purpose of life may coincide with the achievement of ultimate reality, or a feeling of oneness, or even a feeling of sacredness.
Live Simply
Speak Kindly
Care Deeply
Love Generously
To find more see the following presentation !

Is Got there? If so, why He is not coming and attending the distress. ThenWhy go to Temple. 
----------------------------------------------------------------------
A ‘devotee’ wrote a letter to the editor of an indian newspaper and complained that it made no sense to go to the Temple . ‘I’ve gone for 30 years now, he wrote, and in that time I have heard something like 3,000 mantras. But for the life of me, I can’t remember a single one of them. So, I think I’m wasting my time and the Gurus are wasting theirs by giving services at all.

This started a real controversy in the ‘Letters to the Editor’ column, much to the delight of the editor. It went on for weeks until someone wrote this clincher: I’ve been married for 30 years now. In that time my wife has cooked some 32,000 meals. But, for the life of me, I cannot recall the entire menu for a single one of those meals. But I do know this… They all nourished me and gave me the strength I needed to do my work.

If my wife had not given me these meals, I would be physically dead today. Likewise, if I had not gone to the Temple for nourishment, I would be spiritually dead today! When you are DOWN to nothing…. God is UP to something! Faith sees the invisible, believes the incredible and receives the impossible!

Thank God for our physical AND our spiritual nourishment!
(Courtesy Sutramagazine/blog/culture) 

Sunday, June 2, 2013

Sampathi, the King of Vultures

Vijayakrishna Narapsetty, a post graduate from Clemson University works for a prestigious firm in Seattle. This religious minded gentleman is a famous artist who specializes in canvas paintings. In the face book you can see all his collection. To his credit a number of paintings on Ramayana stories are there. Following is a sample which speaks about his talent. When we see the painting we are taken to the days of Ramayana and the entire episode comes to our mind as if we are seeing a movie.
You can see from the following link how he has painted in steps
In Hindu Mythology Sampathi and Jatayu are the two sons of Aruna who is the Charioteer of Surya. Sampathi and Jatayu, when young, used to compete as to who could fly higher. On one such instance Jatayu flew so high that he was about to get seared by the sun's flames. Sampati saved his brother by spreading his own wings and thus shielding Jatayu from the hot flames. In the process, Sampati himself got injured and lost his wings. As a result, Sampati lived wingless for the rest of his life.
Sampati proved instrumental in Sita's search later on in the Ramayana. His role comes when the search party sent to the south, led by Angada with Hanuman and Jambavan, exhausted, thirsty and depressed, reach to the southern end of the land. They have the endless sea before them, and still no clue of Sita. Disappointed, everybody just collapses on the sand, unable as well as unwilling to move or act any further. Suddenly, they all hear a voice which says - "I will feast today. I shall be ever grateful to God for having such delicious meal walk to my doorsteps all by itself". Everyone looks in the direction of the voice, and see a huge vulture progressing towards them slowly, saying these words. At that moment, Jambavan says - "Life is so ironical. One is this vulture, who is planning to eat this disappointed lot, too exhausted to defend themselves - and defeated in this search for Seeta Mata; too guilty even to wish to live any further. And one was that Vulture Jatayu, who gave his life trying to save Sita Mata from the clutches of Ravana."
The vulture froze as soon as he heard the word "Jatayu". " Jatayu? Did you say Jatayu? What happened to him? Please tell me." Jambuvana told the story of Jatayu and his bravery. The vulture's eyes were moist at the end of the story. His throat choked; he said - "My name is Sampati. Jatayu was my brother. It has been ages since I have heard of any news from him. I hear a news now - news that he is no more!" Then, collecting himself, he says - "I am grateful to you, Sir! You have brought me the news of my brother. I shall return this favour. This lady Sita you are searching so fervently for; I know where she is."
Everybody jumped as soon as he said this. They listened with utmost concentration, as Sampati continued. " 100 Yojan from here is Lanka, the kingdom of Ravana. Some days ago, I had seen him flying in his Pushpak, landing at Lanka with a beautiful lady with him, forcibly being taken into Lanka and banished in one of the Vatika. I now know after listening to your story, She was Sita."
"Good you gentlemen came. Now she will be remedied of her agony. Everyday, I used to watch her, sitting beneath that tree in that vatika - distraught, waiting for someone. Her wait will end now."
Jambuvana asked - " It seems from your words that you .. You can see her !!" "Why, Of course I can!" Sampati said. "We - descendants of Garuda, are blessed with very superior vision. I am old now, but still, 100 Yojans in not much for me."
Griddhraj Parvat, situated in Satna district in Madhya Pradesh, is believed to be the birthplace of Sampati.
Courtesy Wikipedia 

Friday, May 17, 2013

UNCONDITIONAL LOVE OF MOTHERS


The palm on your fevered brow,
The soft kisses when you need them most
The grip that steadies you on rocky roads
The hand that feeds and nurtures you
The voice that tells you that you are loved
The shadow that walks beside you 
unconditional and enduring
Is that “MOTHERS LOVE”
Yes. But
That always flows from higher level to lower level
Can this be topsy-turvy ?

YOGA FROM VEDA

The oldest scriptures in the world are ancient texts of Vedas.  The praise of vedas otherwise praise of knowledge is known as rigveda in Sanskrit. Sanskrit a liturgical language or otherwise known as standard dialect of Indo-Aryan language is often called  vedic Sanskrit that can be traced as early as 1500-2500 BCE.
 A collection of hymns in praise of higher power is nothing but Rig Veda. The knowledge of sacrifice or the rituals we do is compounded in Yajur Veda. The sruthi or the chants depicting knowledge is Sama and  the knowledge of Atharvana is Atharvana Veda. Vedic masters were blessed with a vision of the Supreme Reality who saw the divine power or the Almighty spoke about the marvelous intuitions with these vedic hymns.
Archeologists define period earlier to 3000bc as pre-vedic time. Shiva idols and some of the paintings of this age depicted yoga is ageless and eternal one. This opened the secrets of our life, our breath, the anatomy of our body and functions and the passion that we have to live. The development of Yoga began here around 2000bc which we call as vedic period. The Aryans, a group of Indo-European travelers settle in the heart of the Indus River Valley Region mixing with the local inhabitants brought this finest art. The term Hindu came from Indus Valley civilization. The sages of this time heard divine teachings and illuminations directly from the Almighty on the Nature and way of being. These are the Vedas, first heard in deep meditation and passed on to students (Shruthi text – that which is heard). Over the time, the Vedantha (Veda + antha) came in vogue that which is the end of knowledge.  To have a good grasping of these hymns Brahma Sutras were written. As people could not grasp the Infinite with their limited thinking, the Ithihasa puranas were written viz. Mahabaratha and the Bagwath Geetha. Patanjali Yoga Sutras were attributed to the period around 600bc.  His yoga sutras were sub divided into four padas viz.  Samadhi, Sadhana, Vibhudi and Kaivalya.
During 1200bc the great teacher Rishaba, the nineth avathar of Mahavishnu who was the exponent of the tradition of Janism, emphasized  on efforts dedicated to the liberation of the spirit. It was during this time, that Yoga found its way into Buddhism too; Lord Buddha was the first Buddist to study Yoga. Buddist scriptures lay stress on meditation  and physical postures, which are yogic processes.
In the modern days commencing from 19th century, Sri Sivananda and Sri.Krishnamachrya were instrumental for transmitting Yoga throughout the world making Yoga a household name and practice.  Mr.S.Sridharan who is the Trustee of Krishnamacharya Yoga Mandiram is writing columns on Yoga regularly, gave an interesting lecture on Yoga and Veda at Raja Veda Kavya Patasala.  You can browse this interesting topic here.

Sunday, April 28, 2013

WHERE IS GOD? STONE OR SANCTITY?

கடவுள் எங்கே உள்ளார்? 
விக்ரஹத்திலா அல்லது அங்குள்ள ஸாந்நித்யத்திலா ?

நாம் எல்லோரும் ஆலயத்திற்குச் சென்று ஸ்ரத்தையாக பகவானை தரிசிக்கிறோம். அங்குள்ள மூர்த்தியில் பகவான் ப்ரத்யக்ஷம் என்று சிலரே அனுபவிக்கின்றனர். ஏனையோர் அதனை, தினம் நாம் செய்யும் பல செயல்களில் ஒன்றாக நினைக்கிறோம். இன்றய நிலைப்பாட்டில் நம்மில் பலர் ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்கள், சேவார்த்திகள் என்ற பலதரப்பட்ட வகைகளில் உள்ளோம். இந்த மூன்றுதரத்தாரும், உள்ளே இருப்பது கடவுள்தான் வெறும் விக்ரஹம் இல்லை என்று நினைத்தால், நிர்வாகிகள் கோவிலுக்கு வரும் செல்வத்தை ஒழுங்காகச் செலவிடுவர். அர்ச்சகர்களும் ஸ்ரத்தையாக பூஜை செய்வார்கள். சேவார்த்திகளும் கோவிலுக்குச் சென்று வம்பு பேசுவதைத் தவிர்ப்பார்கள். நடைமுறையில் மூவரும் தவறு இழைக்கின்றனர். ஒருவர் செய்யும் தவறுக்கு மற்றொறுவரைக் காரணம் சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம்.
பகவான் ஸ்ர்வ வ்யாபி. அங்குள்ள விக்ரஹத்தில் அவரது ஸாந்நித்யம் ஏற்படுகிறது. நாமும் ஹிரண்யகசிபுவைப் போல், இங்கே அந்தக் கடவுளை வரச் சொல் என்று நாத்திகம் பேசுதல் எவ்வளவு அறியாமை. அந்த ஸாந்நித்யம் ஆராதிப்பவரின் ஸ்ரத்தையையும் பக்தியையும் பொருத்தது. அவர்களது உதாஸீனத்தினால், நம்முடைய பெரியவர்களால் உண்டாக்கப்பட்ட ஸாந்நித்யம் அழிகின்றது. ஆகையால் வெறும் விக்ரஹமாய் மாறிவிடுகிறது. சிலை திருடுபவர்கள் அந்தச் செயலை நன்கு செய்து, அதனை ஒரு காட்சிப் பொருளாய் மாற்றி இருக்கும் இடத்தை மாற்றுகின்றனர் .
சிக்கல் சிங்காரவேலனின் க்ஷேத்திரத்தில் ஒரு வயதான மாது ஆலயதரிசனத்திற்கு வரும் ப்ராமணர்களுக்கு தினமும் போஜனம் செய்வித்து வந்தாள். அந்த மாதுவிற்கு இருந்த ஒரே சொத்து என்பது அந்தப் பெரிய சத்திரம் போன்ற வீடு ஒன்றுதான். அவர்களது நற்பணியைப் பாராட்டி அந்த ஊரிலுள்ள வியாபாரிகள் மற்றும் செல்வந்தர்கள் அவர்களால் முடிந்த உதவியை அந்த மாதுவிற்குச் செய்து, ப்ராஹ்மண அன்னதானம் தினமும் நடந்துவர ஏதுவாய் இருந்தனர். ஒரு நாள் போஜனத்திற்காக எல்லா ப்ராஹ்மணர்களையும் உட்கார வைத்து இருந்தார். திடீரென்று மணி அடிப்பதை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் ஒடினாள். “என்ன செய்தாய் என்று ஒரு அதட்டல். ஆவேசமான் ஒரு பேச்சு. அர்ச்சகர் பயந்துவிட்டார். "குளித்த ஜலத்தை சாப்பிடுவாயா" என்று சிங்காரவேலன் கேட்கிறார் என்று வினவி அந்த மூதாட்டி அந்த அர்ச்சகரை அதட்டினாள். அர்ச்சகர் தன் தவற்றை ஒப்புக் கொண்டார். அபிஷேகம் செய்த பாலை நிவேதனத்திற்கு வைத்திருந்தார். அந்த மூதாட்டிக்கு அங்குள்ள மூர்த்தி ஸாந்நித்யமுடையது மாத்திரமல்ல பேசக் கூடயதாகவும் இருந்தது. ப்ரதி தினம் ஆராதனை செய்யும் அர்ச்சகரிடம் இல்லாதது அந்த மூதாட்டியிடம் இருந்தது.  இறைவனின் அந்த வாஞ்சை அவளுக்கு உண்டு என்றால் அந்த பக்தியே காரணம். அர்ச்சகர் நினைத்த்து ஒருவிக்ரஹமாய். அவள் நினைத்து ஆராதித்தது அந்த ஸாந்நித்யத்தை. 
நம்பிக்கை என்பதை மூன்றாவது கையாக உணராவிட்டால், மனிதனுக்கு உள்ள இருகையும் உபயோகப்படாது. எல்லோரிடமும் நம்பிக்கை உள்ளது. மனிதனுக்கு மனிதன் அந்த விகிதாசாரம் மாறுகிறது.
ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராணம் என்ற தொகுப்பிலிருந்து நான் படித்து அனுபவித்தது. தொகுத்து புத்தகவடிவில் வழங்கியுள்ள நண்பர் சீதாராம ஸாஸ்த்ரி அவர்களுக்கு நன்றி. 




Saturday, April 27, 2013

OH GOD! WHERE ARE YOU?


பலன் கொடுப்பது கடவுளே
சிறிது நாட்கள் முன் நான் எனது பால்ய நண்பர் நாராயணன் என்பவருடனும், யோகா குரு ஸ்ரீதர் அவர்களுடனும் களஞ்சேரியில் உள்ள வேத வித்யா குருகுலத்திற்குச் சென்றிருந்தோம். 
வேதங்களைப் பற்றிய பல உண்மைகளை, விஷயங்களை அங்கு கற்று கேட்டு அனுபவிக்கலாம். திரு.நாராயணன் அவர்கள் திரு. சீதாராம ஸாஸ்த்ரி என்பவரை அங்கு எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.  “ஸ்ருதி, ஸ்ம்ருதி, புராண ஸாரத்தைப் பற்றி பல புத்தகங்களை ஸாஸ்த்ரி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். எந்தவிதமான ஆரவாரமோ விளம்பரமோ சிறிதும் இல்லாமல் ஒரு குருகுலத்தையும் நடத்தி பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மாதிரிக்கு ஒரு புத்தகத்தை எனக்கு அளித்திருந்தார்கள். இருநூற்று அறுபது பக்கங்கள் கொண்ட அப்புத்தகம், பல ஆண்டுகள் குருகுல வாசம் செய்து கற்க வேண்டிய பல விஷயங்களை எளிய முறையில் நமக்கு தெரிவித்துள்ளது.
அதில் வந்துள்ள ஒரு விவாதம். அதன் மூலம் நமக்கு ஒரு செய்தி. கடவுள் எங்கே காட்டு என்று சொல்லும் ஒரு படித்த மடையனை மாடு துரத்தியது. தற்காப்புக்காக கோவிலுக்குள் நுழைந்தான். பலநாட்களாய் ஏங்கி எதிர்பார்த்த ஒரு நல்ல விஷயம் நடந்தேறிற்று. மெதுவாக கடவுளை நம்ப ஆரம்பித்தான். ஈஸ்வரனே பலன் கொடுக்கிறாரென்றால் பலன் ஏற்படும் காலத்தில் அவரே நேரில் வந்து கொடுக்கட்டுமே என்று கேட்கக் கூடாது. அப்படியே அவர் நேரே வந்தாலும் நம்மால் அவரை அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாது. சில பக்தர்களுக்கு அவரவர் உபாஸ்யமூர்த்தியாக ஆவிர்ப்பவித்து அனுக்ரஹம் செய்திருப்பதாகவும் புராணங்களிலும் பக்த சரித்திரங்களிலும் தெரிந்துள்ளது. இதற்கு ஏற்ற ஒரு நிகழ்வினை வெகு நயம் பட தமிழில் கொடுத்துள்ளார். பலரும் படிக்க ஏதுவாய் அதனது ஆங்கில மொழி பெயர்ப்பை கீழே கொடுத்துள்ளேன். நான் ரசித்தேன். உங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Sunday, April 21, 2013

Music Links People Globally


Shri Thiruvaiyaru Krishnan, popularly known as TSR Krishnan in LA, who is regularly giving concerts, naamasankeerthanam and conducting group music of various renowned “Carnatic Vaagyeyakaras” in Chinmaya Misssion, Shiva Vishnu Temple, Livermore, Hindu Temple of Kern Country, SIMA Los Angeles, US has circulated a mail in praise of violinists viz. Arun and Shiva.
Dear Friends and family:
I felt that it is time I shared with you all, my immense happiness about two of my favorites in this part of the world - about children who are multi faceted/talented, (always) children in my heart but respected adults in the Global Music World.
Arun is already an accredited grand violinist and Shiva, his kid brother is effortlessly reaching the charts as a sought-after accompanist. 
Both boys are brought up with samskAram, soft spoken, and are blessed with humility which is becoming a rare trait (more so in India and to some lesser extent in the rest of the world).
Arun has been a software specialist and working in So Cal but globe-trots as a musician performing all over, especially about 20+ concerts in Madras Music annual Season; 
As a varsity student, he has been an A'capella hero and a fusion artist in demand; 
Very conventionally trained under the great M C and now under Delhi S, he also underwent rigorous western violin training for years - thus making him a sought after Violin Artist; 
He played music score in a Tamil movie and sang in it too; has a few albums in the carnatic music world...the list is long.
His younger sister VANi is already an up and coming vocalist often seen (with Ranjani/Gayatri) in the Madras Music Circuit for a couple of years now and occasionally visits the US! (settled in Chennai after her undergrad in the US).
Shiva is an UCLA student in hot demand (Best male solo violinist in Anahat 2011 and best vocalist in 2012 in the Bay area); similar pedigree and a young musician in great demand.
Arun was one of the grand accompanists in the South Indian Music Academy (LA) performance on December 1, 2012 (the full live recording will be posted onsankeertanam.com shortly).

Don't think that they are simply ordinary folk entrapped in self imposed confinement of 'purism'. They are avid learners and can enjoy and reproduce any music through their fingers.They are as much an ustAd in (Indian) Film music and western tracks, as facile as they could capture a large audience by their classical concerts.

The Rest is for the reading and listening - See below:


Friday, January 25, 2013

A Blissful Voyage Beyond Sixty

One of my E-mail Paul, 
explained through his forward about
“The Beauty & The Beast”
After sixty.
In thanking him, I am sharing with you all
who are in 60 or entering 60.
Don't worry about what will happen after you are gone, 
because when you return to dust, 
you will feel nothing about praises or criticisms.
Don't worry too much about your children 
for children will have their own destiny and find their own way. 
Don't be your children's slave.

Don't expect too much from your children. Caring children, though caring, would be too busy with their jobs and commitments to render any help.
Uncaring children may fight over your assets even when you are still alive, and wish for your early demise so they can inherit your properties.
Your children take for granted that they are rightful heirs to your wealth; but you have no claims to their money.

60-year old like you, don't trade in your health for wealth anymore; 

because your money may not be able to buy your health……… 
When to stop making money, and how much is enough 
(hundred thousands, million, ten million)?
Out of thousand hectares of good farm land, 
you can only consume three quarts (of rice) daily; 
out of a thousand mansions, 
you only need eight square meters of space to rest at night.

So as long as you have enough food and enough money to spend, 

that is good enough. So you should live happily. 
Every family has its own problems. Just do not compare with others for fame and social status and see whose children are doing better, etc. but challenge others for happiness, health and longevity…. Don't worry about things that you can't change because it doesn't help and it may spoil your health.

You have to create your own well-being and find your own happiness; As long as you are in good mood, think about happy things, do happy things daily and have fun in doing, and then you will pass your time happily every day. One day passes, you will lose one day; One day passes with happiness, then you gain one day. 

In good spirit, sickness will cure; in happy spirit, sickness will cure fast; 
in good and happy spirit; sickness will never come.

With good mood, suitable amount of exercise, always in the sun, 

variety of foods, reasonable amount of vitamin and mineral intake, 
hopefully you will live another 20 or 30 years of healthy life. 
Above all learn to cherish the goodness around …and FRIENDS…… 
they all make you feel young and wanted"…
without them you are sure to feel lost!!
Wishing you all the best
Please share this with all your friends who are 60 plus;
Those who will be 60 plus after some time;

Thursday, January 10, 2013

Mahaperiyava's wish will always be God's wish


மஹா பெரியவாளைப் பற்றி தினமும் பல செய்திகளை பலர் பலவிதமான உபகரணங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். ஐம்பது மணிநேர ஒலித் தட்டுகள் தெய்வத்தின் குரலில் விரைவில் வர உள்ளது. சமீபத்தில் எனக்கு ஒருவர் அனுப்பிய ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்புறுகிறேன்.

ஆந்த்ராவில் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தபோது, பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு.  எந்தவிதமான படாடோபமோ, ப்ருதாவளியும் கிடையாது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது.  முன்னாடியே போய் பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது.  காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ………பெரியவா இங்க தங்கிக்கலாம்என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்!
வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார்.  கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக பெத்தச்ச தேவுடுவந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.

கோவில் அர்ச்சகர் வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் போல ! உச்சிக்கால பூஜை முடிந்ததும், பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலை பூட்டிக் கொண்டு போயே போய் விட்டார்! பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு  கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!
இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில் பெத்தச்ச தேவுடுஎங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …………இப்படியாக பாவம் பலவிதமாக எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன்மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும்தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்கள் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?
சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”
சிஷ்யர் பார்த்துவிட்டு ஆமாஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா” அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீ டக்குனு அந்த கல்லுல ஏறி  அங்க தொங்கற மணியை பலமா அடி!
மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர்.  காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்!  தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான பெத்தச்ச தேவுடுவைப் பார்த்து பரவசம் அடைந்தனர் ! எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.
பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதான்.