எனது வலைப்பதிவில் “ரம்யமான
ஹரிகாம்போதி” என்ற வலை அஞ்சலில் “முல்லைப் பண்” ஹரிகாம்போதி என்று குறிப்பிட்டுருந்தேன். அந்த
அஞ்சலைப் படித்த எனது நண்பர், பண்ணினைப் பற்றிய பல அறிய செய்திகளை என்னுடன்
பகிர்ந்து கொண்டார்.
அதன் தொகுப்பு --
முதன் முதலில் மோஹன ராகம் தான் முல்லைப் பண் என்று
அழைக்கப்பட்டுவந்தது. மூன்று ஸ்வரங்களில் இருந்து வந்த வேத கால சங்கீதம் ஐந்து
ஸ்வரங்களாக வடிவமைக்கப்பட்டு, பண் என்று சங்ககாலத்தில் சொல்லிவந்த சங்கீதம் பின்பு ராவணன்
தன் வீணையில் ஏழு ஸ்வரங்களில் ஸாமவேததினை இசைத்து சங்கீதம் ஏழு ஸ்வரமாக விடிவமைகப்பட்டதாகச் சொல்வர். பின்பு குறைத் தொனி (Flat Notes), நிறை தொனி (Sharp Notes) என்று ஸ்வரங்களை
வகைப்படுத்தி 12 ஸ்வரங்களாய் தமிழிசையை வடிவமைத்தனர். நாம் இன்று காணும் இசைக்
கருவிகளில் இந்த 12 ஸ்வரகளின் கோர்வையைக் காணலாம். கர்நாடக இசைவளர்ச்சியில் 4
ஸ்வரங்கள் சேர்க்கப்பட்டு பல புதிய ராகங்கள் வடிவமைக்கப்பட்டது. 72 மேளகர்த்தா
ராகங்கள் என்ற அஸ்திவாரத்துடன் இன்றய கர்நாடக சங்கீதம் பரிமளிக்கிறது.
இதற்கான செய்திகளை சேகரித்தபோது அறிதான கலைகளஞ்சியமான
விக்கிப் பீடியாவிலிருந்து நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று.
முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி,
அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண்.
இசையொலிக் கூறுகள் சுரம் என்றும்,
நரம்பு என்றும் வழங்கப்படும். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை
தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழின் இலக்கணம் போன்ற அடிப்படைகளில் ஒன்று பண்.
தற்காலத்தில் தென்னிந்திய
கர்நாடக இசை மற்றும், இந்துஸ்தானி
இசைகளில், வழங்கும்
இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார்
1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன.
உலகிலேயே தாளத்தோடும்,
பண்ணோடும்,
ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய்,
பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9
ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில்
அப்பர், சம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே
9295 பாடல்கள் ஆகும்.
உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை.
தேவாரப் பாடல்கள்,
வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு.200
- கி.பி.
200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன.
இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம்,
வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது.
பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது.
கி.பி.
200 - கி.பி.
400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன.
சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால்,
பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும்,
இசை,
நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது.
பண்கள் மொத்தம்
103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
தேவாரத்திலும் திருமுறைகளிலே குறிக்கப்பட்டுள்ள
24 பண்களைக் கீழே காணலாம்.
அவற்றுக்குச்சமமான தற்கால இராகங்கள் அருகே தரப்பட்டுள்ளன.
பண்
|
இராகம்
|
தேவாரம்
|
நட்டபாடை
|
"நத்தார்படை ஞானன்"
|
|
கொல்லி
|
எல்லையில் புகழானனும் இமை
|
|
இந்தளம்
|
முன்னிய கலைப்பொருளும்
|
|
குறிஞ்சி
|
கல்லால் நிழல்மேய கறைசேர்
|
|
செந்துருத்தி
|
||
யாழ்முறி
|
---
|
|
சீகாமரம்
|
சூலப் படையானை
|
|
நட்டராகம்
|
இத்தனையாம் ஆற்றை அறிந்திலேன்
|
|
தக்கராகம்
|
மடையில் வாளை
பாய
மாதரார்
|
|
பழந்தக்கராகம்
|
கொல்லை முல்லை நகையின்
|
|
பழம்பஞ்சுரம்
|
கண்ணனும் நான்முகன் காண்
|
|
தக்கேசி
|
பரக்கும் பெருமை இலங்கை என்னும்
|
|
செவ்வழி
|
பொடிகள் பூசிப் பல
|
|
பியந்தைக் காந்தாரம்
|
அன்ற
வான்நிழல் அமர்ந்து
|
|
காந்தாரம்
|
உறவியும் இன்புறு சீரும்
|
|
காந்தார பஞ்சமம்
|
மந்திர மறையவை
|
|
கொல்லிக்கௌவானம்
|
நஞ்சியிடையின்று
|
|
கௌசிகம்
|
வாழ்க அந்தணர் வானவர்
|
|
பஞ்சமம்
|
பொடிதனை பூசும் மார்பில்
|
|
சாதாரி
|
செந்தமிழர் தெய்வமறை நாவர்
|
|
புறநீர்மை
|
சீருறு தொண்டர் கொண்டடி
|
|
அந்தாளக்குறிஞ்சி
|
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
|
|
மேகராகக் குறிஞ்சி
|
நீறுசேர்வதொர் மேனியர்
|
|
வியாழக் குறிஞ்சி
|
பந்தத்தால் வந்தெப்பால்
|
No comments:
Post a Comment