மாணிக்கவாசகர்
மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார். இதனால் இவருக்குத் திருவாதவூரர்
என்ற பெயரும் உண்டு. இவரின் நூல்களான திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்திருமுறைகள்
பன்னிரண்டினுள் எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இவர்
பாடிய பாடல்களே திருவெம்பாவை எனப்படுகின்றன. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப்
பாவித்து மார்கழி மாதக் காலையில் சிவனைக் குறித்துப் பாடுவது போல் பாடியுள்ளார்.
ஆதியும்
அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை
யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே
வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்
மாதேவன்
வார்கழல்கள் வாழ்த்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்
கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார்
அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும்
ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே
எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்! .......(1)
சங்கீத வித்வான்கள் விதூஷிகள் ஓதுவார்கள்
கானாமுதமாய் தந்த இந்த திருவெம்பாவையை நானும், உட்பொருளை ஓதி உணர்ந்து பாட
விழைகிறேன்.