Showing posts with label இசைத் துக்கடா. Show all posts
Showing posts with label இசைத் துக்கடா. Show all posts

Thursday, October 17, 2013

KARAHARAPRIYA - A TRANQUILIZER

ஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்துஸ்வாமி தீக்ஷிதரும், ஸ்யாமாசாஸ்திரிகளும் இநத ராகத்தில் பாடல்களை தொகுக்கவில்லை. ஏன் அமைக்கவில்லை என்பதற்கான பதில் எந்த ஏட்டுச் சுவடிகளிலும் எழுதவில்லை. ருத்ரப்ரியா என்ற ராகத்தில் ஒரு பாடலை தீக்ஷிதர் அவர்கள் இயற்றியுள்ளார். அவரோகணத்தில் தைவதம் இல்லாது அஸம்பூர்ண மேளகர்த்தாவாக அமைத்துள்ளார். 
டைகர் வரதாச்சாரியார் எந்த ஒரு ராகத்தை சீடர்களுக்குக் கற்றுத்தந்தாலும் அதனை மிகவும் விரிவாகவும், எல்லா நுணுக்கங்களையும் போதிப்பார் என்று அவரது சீடரான திரு.எஸ்.ராமநாதன் அவர்கள் சொல்வார், “காலையில் 6மணி அளவில் கலாக்ஷேத்ராவின் ஆலமரத்தடியில் சங்கீத வகுப்பினை ஆரம்பித்தால், தலையில் அன்று வைத்துக் கொண்ட எண்ணை மதியம் 12 மணிக்குள் உடலில் முழுவதும் க்ரஹித்துவிடும் வரை வகுப்பினை நடத்துவார் உடல் எண்ணையை க்ரஹித்துவிடும். சீடர்கள் பாடலை நன்கு க்ரஹித்துக் கொள்வார்கள் என்பார்.
ஒரு சமயம் புல்லாங்குழல் வித்வான் விஞ்சமூரி ஸ்ரீநிவாச சாரியார், திரு.டைகர் வரதாச்சாரியாருடன் வீணை தனம்மாள் வீட்டிற்குச் சென்றார். ராகங்களையும் பல்லவி அமைப்பையும் அலசிவிட்டு திரும்பி வரும் வழியில், கரஹரப்ரியா ராகத்தை பாடிக் கேட்க வேண்டும் என்ற அவாவை வெளியிட்டார். முதலில் பாட மறுத்த டைகர் அவர்கள், ஸ்ரீநிவாசாசாரியார் அவர்களை அவர் இல்லம் சென்று அழைத்து வந்து இரவு 10 மணிக்கு பாட ஆரம்பித்தார். இரவு 10 மணிக்கு ஆரம்பித்த கரஹரப்ரியா ராகஆலாபனை மறு நாள் காலை வரை நீடித்தது. பாடுவதை நிறுத்தினால் காபி தருவாதாக டைகர் அவர்களின் மனைவி அறிவித்து ஒரு வழியாக ஆலாபனைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார்.
த்யாகராஜ ஸ்வாமி அவர்கள் சக்கனி ராஜா, எவரனி நிர்ணயின்சி, கோரிசேவிம்பராரே, நடசி நடசி, பக்கால நிலபடி, பாஹி ராம ராம, ராமா கோதண்ட ராமா, பேரிதி நின்னு, ராமநீ சமாநமெவரு, ராமா நீயெட, சௌமித்ரீ பாக்யமே, விடமு சேயவே என்று பன்னிரண்டு க்ருதிகளை கரஹரப்ரியா ராகத்தில் படைத்துள்ளார்.

மனதில் உள்ள இறுக்கத்தையும், சோர்வையையும் நீக்கும் ஒரு அற்புதமான் ராகம். “மாயா வித்தை செய்கின்றானே அம்பலவாணன்என்று முத்துத் தாண்டவர் ஒரு பேரானந்தத்தில் கரஹரப்ரியா ராகத்தில் பாடியதாக ஒரு குறிப்பினைப் படித்தேன்

வெள்ளித்திரையில் பல பாடல்கள் இந்த ராகத்தில் முழங்கியுள்ளது. ராஜேஸ்வர ராவ் இசையில் “அறியாப் பருவமடா, சுப்பையா நாயுடுவின் இசையில் “பகவான் அவதரிப்பார் என்ற பாடல். இந்தப் பாடல்கள் கரஹரப்ரியாவை எவ்வளவு ப்ராசீனமாக கையாண்டுள்ளார்கள் என்பது தெரியும்.

“மாதவிப் பொன்மயிலாள் ஒரு மிடுக்கான பாட்டு. அருமையான் நடனம். இந்த ராகத்தை இப்படியும் கையாளலாம் என்பதற்கு ஒரு மாதிரி.
“இசையாய் தமிழாய் இருப்பவனே என்ற திரைப் பாடல் மூலம் இந்த ராகம் பாமர ஜனங்களும் அனுபவிக்குமாறு எவ்வாறு செனறடைந்துள்ளது என்பதை அறியலாம்.
கோபால விட்டல தாஸர் வாதிராஜரை மனமுருகிப் பாடியுள்ளார். “கரோகே என்று சொல்லுவர். அந்த பாணியில் வித்யாபூஷணர் பாடிய பாடலை கையாண்டு, அந்த இசைக் கோர்வைக்கு நான் பாடி பதிவு செய்துள்ளேன். உங்களது மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து இந்த தகவலை பதிவு செய்கிறேன்.

Tuesday, January 8, 2013

Chip off the Old Block


தாய் எட்டடி பாய்ந்தால் குழந்தை பதினாறு அடிபாயும் காலகட்டம் இப்பொழுது. திரு ஸ்ரீவத்ஸன் ஹெம்மிக்கே, தனது இசை மூலம் நமக்கு அவரது குருநாதர் திரு கே.வீ.நாராயணசாமியை நம் கண், செவி முன் நிறுத்துகிறார். அவரின் மகனோ அன்று ஸ்ரீவத்ஸன் குருநாதருக்கு பக்கமாக இருந்தது போல் வயலின் வாத்யத்தில் மிளிர்கிறார். பார்க்க, கேட்க ஒரு அருமையான காட்சி. 

Monday, September 27, 2010

ஹரியும் ஹரனும் இவர்க்கும் ஒன்றே ! !


ஸ்ரீகாமகோடி பீடஸ்திதே கருணா கடாக்ஷி
எகாம்ரபதி ஹ்ருதய நிலயே நமாமி ஸ்ரீகாமாக்ஷி
என்ற சாவேரி கீர்த்தனையை திருமதி MSS அவர்கள் பாடியது தேனாய் காதில் பாய்ந்து அது நமது உடல் முழுவதும் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. இந்தக் க்ருதியினை ஸ்வரத்துடன் நமக்கு அளித்தவர் மைஸுர் ஸதாசிவ ராவ் அவர்கள். அவர் தனது க்ருதிகள் மூலம் பல தெய்வங்களை அழைத்து நம் முன் கொண்டுவருகிறார் இன்றும்; என்றும். த்யாகராஜ ஸ்வாமியின் ப்ரதான சிஷ்யர் வெங்கடரமண பாகவதர்.
அவரது சிஷ்யர்களில் ஒருவரான இவர் மைஸுர் மகாராஜாவின் சமஸ்தானத்தை அலங்கரித்ததால் இவர் பெயருடன் மைஸுர் சேர்ந்தது. இவரது ஜனனம் சித்தூரை அடுத்த கிரம்பேட் என்ற ஒரு சிற்றூரில். த்யாகராஜ ஸ்வாமியின் முன் கானமழை பொழிந்து அவரது ஆசி பெற்றவர்.
“ஸாம்ராஜ்ய தயகேஷா என்ற காம்போஜி கிருதியை வீணை சேஷண்ணா, ஸுப்பண்ணாவுக்கு விஸ்தாரமாக அனுபவித்து பாடி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரிய ஸர்ப்பம அவரது கை வழியாக மேல் ஏறி அவரது தோளில் அமர்ந்து பாட்டிற்கு படம் எடுத்ததைப் பார்த்து இரு சிஷ்யர்களும் பயந்து வெளியே ஓடினார்கள். அந்த ஸர்பம சில நிமிடங்களில் மறைந்து விட்டதை பார்த்த அந்த இருவரும் கஞ்சி ஏகாம்ரேஸரது பரிபூர்ண ஆசி தனது குருநாதருக்கு இருப்பதை உலகிற்கு உணர்த்தினார்கள். அவரது நரசிம்ஹரைப் பற்றிய க்ருதியைப் பாடினால், நரசிம்ஹரே துணைப் பிளந்து நம் முன் வருவது போன்ற ஓரு உணர்வைக் கொடுக்கிறது.
மைஸுர் ஸதாசிவராவ் நமது மனதில் எப்பொழுதும் ஹரியயும் ஹரனையும் அவரது க்ருதிகள் மூலம் நிறுத்திவைக்கிறார்.

Sunday, September 26, 2010

கள்வர்களை மயக்கிய கர்நாடக இசை

த்யாகராஜ ஸ்வாமிகள் வீணை குப்பய்யரவர்கள் வேண்டுதல்படி சென்னை விஜயம். பிறகு கோவூர் பயணம். சுந்தர முதலியார் ஸ்வாமிகளுக்கு தெரியா வண்ணம் அவரது யாத்திரை பல்லக்கில் ஆயிரம் பொற் காசுகள் உள்ள பணப் பையை வைத்து அனுப்பின்னார். திருப்பதி போகும் வழியில் திருடர்கள் அவர்களை மடக்க ஸ்வாமிகள் பொற் காசுகள் இருப்பதை அறிந்தார். ஆனால் அந்தப் பணம் ராமநவமி உத்ஸவங்களுக்கு பயன் படும் என்பதால் பகவான் ராமன் அதனைப் பார்த்துக் கொள்வார் என்றார். “முந்து3 வெனுகயிரு பக்கல தோடை3  1முர 22ர ஹர ராராஎன்று தர்பார் ராகத்தில் பாட இரவு முழுவதும் பயணம் செய்யும் பொழுது இரு வீரர்கள் அந்த திருடர்களை விரட்டியதும் அல்லாமல் காலைவரை பயணம் செய்து பக்க பலமாக வந்தனர். காலையில் அவர்கள் இருவரும் மறைந்து விட்டார்கள். திருடர்களோ ஸ்வாமிகளிடத்தில் எங்களுக்கு பணம் தேவையில்லை. அந்த இரு வீரர்களும் எங்கள் இதயத்தை கவர்ந்து சென்றுவிட்டனர் என்றார்கள். ஸ்வாமிகளுக்கு வந்தது யார் என்று அறிந்தார். திருடர்களுக்குக் கிடைத்த தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்தி “எந்த பாக்யமு கல்கிதிவி என்ற ஸாரங்கா ராகக் கிருதியைப் பாடினார். இது நடந்தது 1847க்கு முன். 1947க்குப் பின் நடந்த ஒரு சுவையான நிகழ்வை விகடனில் ப்ரசுரித்தார்கள். அதனை இசைத் துக்கடா என்ற பகுதியில் “கள்வரை மயக்கிய கலை என்ற தலைப்பில் இங்கே காணலாம்.

Saturday, September 25, 2010

Did Tyagaraja ask for royalty?

“கலையை விலை கூவுவது விரும்பத்தக்க செயல் அன்று. இவ்வளவு தருகிறேன்; செயல் ஆற்று என்பதோ இவ்வளவு தாருங்கள் செயல் ஆற்றுகிறேன் என்பதோ சரி அன்று. கலைஞனுக்கும் ரசிகனுக்கும் இடையே கலையை விலைப் பொருளாக்கி அதை ரசிப்பதற்கு கட்டணம் பெறுவது சரியல்லஎன்று மஹா வைத்யநாதஐயர் கூறினார். ஆனந்த விகடனில் 1951வது வருடத்தில் வந்த இசைக் கட்டுரை.
ஆனால் இன்றோ........................................    
Mr.T.M.Krishna and Mr.Vijayasiva gave a press report on 11th July 2010
“Artistes continue to be deeply hurt by some rasikas who secretly record performances with diminutive gadgets including cell phones and exch ange these illegal recordings with the ‘like-minded’. Such offenders have contributed ‘richly’ to the downfall of the music market to the lowest-ever point that it has reached today! And, in the process, choose to misplace their loyalty to protect offenders rather than the artiste whom they claim to admire! It is high time they realise that enjoyment, however elevated it may be, holds no strength when it comes through an illegal channel and by bruising the rights and emotions of the one who provides it. For, recording even a bit of music, dance or any performance without the artiste’s permission is legally punishable: under the Copyright Act, 1957”.