தென்கச்சி சுவாமிநாதன் தகவல்கள் கேட்டால்
உன்கட்சி என்கட்சி ஊர்ச்சண்டை ஓயும்
வன்கட்சி தலை சாய்ந்து வடலூரார் வகுத்தளித்த
மென்கட்சி சன்மார்க்கம் மேலோங்கி நின்றிடுமே – கவிஞர் வாலி
தென்கச்சி சுவாமிநாதன் வாசகர்கள் கேள்விக்கு அளித்துள்ள பதில்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
பட்டினி – விரதம் – உண்ணாவிரதம் – என்ன வேறுபாடு?
பஞ்சத்தின் விளைவு பட்டினி. பஞ்சம் புரட்சிக்கு வழிவகுக்கும்.
பஞ்சத்தின் விளைவு பட்டினி. பஞ்சம் புரட்சிக்கு வழிவகுக்கும்.
பழக்கத்தின் விளைவு விரதம். விரதம் உடம்பைச் சரிப்படுத்தும்.
பாதிப்பின் விளைவு உண்ணாவிரதம். உண்ணாவிரதம் ஊரைச் சரிப்படுத்தும்.