சிவ லிங்கங்களைப் பற்றிய தொகுப்பினை
வலையில் படித்த போது, அருமையான பக்திக் கதை ஒன்றினைப் படித்தேன். எந்தப்
பொருளினால் சிவலிங்கத்தை வடிதுள்ளார்களோ, அதனை வைத்து அந்த சிவலிங்கத்தினை
அழைப்பர். தங்கம், மண், உலோகங்கள், வெண்ணை, மாவு, ஸ்படிகம் என்ற பொருள்களால் அமைந்திருந்தால்,
அதனைக் கொண்டு அந்த சிவ லிங்கத்தை வகைப்படுத்துவர். அவ்வாறாக 32 சிவ லிங்கங்கள்
வழக்கத்தில் உள்ளன.
கந்த லிங்கம், புஷ்ப லிங்கம், கோசக்ரு லிங்கம், வலுக லிங்கம்,
யவகோதுமஸலிஜ லிங்கம், சிதகண்ட லிங்கம், லவண லிங்கம், திலபிஷ்ட லிங்கம், பம்ஸ
லிங்கம், கூடலிங்கம், வம்சங்குர லிங்கம், பிஸ்த லிங்கம், தடிதுக்த லிங்கம், தான்ய
லிங்கம், பாளலிங்கம், தாத்ரி லிங்கம், நவநீத லிங்கம், துர்வகடஜ லிங்கம், கற்பூர
லிங்கம், அயஸ்கந்த லிங்கம், மௌக்டிக லிங்கம், ஸ்வர்ண லிங்கம், ரஜித லிங்கம்,
கம்ஸ்ய லிங்கம், த்ரபு லிங்கம், ஆயஸ லிங்கம், ஸீஸ லிங்கம், அஷ்டத்டு லிங்கம்,
அஷ்டலோக லிங்கம், வைடுர்ய லிங்கம், ஸ்படிக லிங்கம், பதர லிங்கம்.
ஒரு பெரிய லிங்கத்திற்குள் 999 லிங்கள் செதுக்கப்பட்டு அதனை
பூஜித்தால், அதனை ஸஹஸ்ர லிங்கம் என்று அழைப்பர். இந்த லிங்கம் தோன்றிய விதத்தை
லிங்கபுராண தொகுப்பினிலிருந்து அறிந்தேன்.
ராவணன், அவனது மனைவி மண்டோதரி இருவருமே சிவ பக்தர்கள். சிவபூஜையின் போது எப்பொழுதுமே புலித்தோல்,
சர்ப்பங்கள் என்பவைகளை அணிந்தே பார்த்து களைத்த மண்டோதரி சர்வ அலங்காரத்துடன்
இருந்தால் எவ்வாறாக இருக்கும் என்று எண்ணினாள்.
ஒரு சமயம் உத்தரகோசமங்கை என்னும் க்ஷேத்திரத்தில் குருவாக
அமர்ந்து ஆயிரம் முனிவர்களுக்கு ஆகம
விதிகளை (கோயில் பூஜை விதிமுறைகளை) கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த
சமயத்தில் அவளது வேண்டுதலை அறிந்து சர்வ அலங்காரத்துடன் காட்சி தர எண்ணினார்.
முனிவர்களிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். தான் திரும்பிவரும் வரை ஆகம சுவடிகளை
பாதுகாக்க அந்த 1000 முனிவர்களிடமும் பொறுப்பை ஒப்படைத்தார். முனிவர்கள் அவர்
செல்வதை விரும்பவில்லை. ராவணன் ஒரு கொடிய அரக்கன். சாகாவரம் பெற்றவன். மானிடனால்
மட்டுமே அழிக்கும் வரத்தை ப்ரும்மாவிடம் பெற்றிருந்ததால் சிவபெருமான் அங்கு
செல்வதை அவர்கள் விரும்பவில்லை. பிறப்பும் அழிவும் இல்லாத சிவன் அவர்களை அஞ்ச
வேண்டாம். ராவணனும் சிவ பக்தன் தான் என்றார்.
ஒருவேளை தீங்கு ஏற்பட்டால், ஆதி கங்கையில் தீப்பிழம்பு
தோன்றும். அப்பொழுது உரியதைச் செய்யுங்கள் என்று பணித்துச் சென்றார்.
மாயா என்ற யக்ஷனுக்கும் ஹேமா என்ற கந்தர்வ மங்கைக்கும் காட்டினிலே
பிறந்த அதிசயக் குழந்தை மண்டோதரி ஆவாள். குழந்தை பிறந்தவுடன், யக்ஷன்
யக்ஷலோகத்திற்குச் தாயையும் சேயையும் விட்டுப் பிரிந்து திரும்பிச் சென்றான். பிறந்த
சிலநாட்களிலேயே பருவ வயதினை அடைந்த இந்த அதிசய யுவதியை மணக்க ஆசைப்பட்டு தாயின்
சம்மதத்தைப் பெற்று காந்தர்வ முறையில் ராவணன் மணந்த யுவதியே மண்டோதரி ஆவாள்.
மண்டோதரி சிவபூஜை செய்து கொண்டிருந்தபொழுது, சிவபெருமான்
அவளது விருப்பப்படி சர்வ அலங்காரத்துடன் ப்ரசன்னமானார். அவருக்குப் பாதபூஜை
செய்தாள். அங்கு ராவணன் வருவதை அறிந்த சிவன், ஒரு பச்சிளங்குழந்தையாக மாறினார்.
குழந்தையின் பேரழகைக் கண்ட ராவணன், அந்தக் குழந்தையை எடுத்து மார்புடன் தழுவி
மகிழ்ந்தான். அந்தக் குழந்தையைப் பற்றி வினவ அது ஒரு ரிஷிபத்தினியின் மகவு என்று
உறைத்தாள்.
அப்போது லோகமாதா பார்வதி தேவி, ரிஷி பத்தினியாக வந்து குழந்தயை வாங்கிச் சென்றாள். ராவணன் குழந்தையைக் கையில் எடுத்ததுமே ஆதிகங்கை பொய்கையில் தீப்பிழம்பு தோன்றிற்று. சிவபெருமானுக்கு ஆபத்து என்று நினைத்து ஒருவர் பின் ஒருவராக தீயில் வரிசையாக முனிவர்கள் பாய்ந்தனர்.
அப்போது லோகமாதா பார்வதி தேவி, ரிஷி பத்தினியாக வந்து குழந்தயை வாங்கிச் சென்றாள். ராவணன் குழந்தையைக் கையில் எடுத்ததுமே ஆதிகங்கை பொய்கையில் தீப்பிழம்பு தோன்றிற்று. சிவபெருமானுக்கு ஆபத்து என்று நினைத்து ஒருவர் பின் ஒருவராக தீயில் வரிசையாக முனிவர்கள் பாய்ந்தனர்.
ஒரே ஒரு முனிவர் மாத்திரம் சிவனின் கட்டளைக்கு அடிபணிந்து ஆகம
சுவடிகளுடன் சிவனுக்காக காத்திருந்தார். அப்போது அங்கே சிவன் தோன்றி மாண்ட
முனிவர்களை உயிருடன் எழுப்பி அவர்கள் 999 பேருடன், தாமும் ஒரு லிங்கமாக மாறி
ஸஹஸ்ரலிங்கம் என பெயர் பெறுவதாகச் சொன்னார்.
வாக்கு தவறாமல் ஆகமங்களைப் பாதுகாத்த முனிவரை அடுத்த
பிறவியில் பாண்டிய நாட்டில் மாணிக்க வாசகராய் பிறப்பித்து, தன் அடி வர சிவன்
அருளியதாக சிவ புராணத்தில் உள்ளது.
அதன் காரணமாக திருவாசகம் என்னும் அறிய நூல் நமக்குக் கிடைத்தது