Thursday, July 31, 2014

Resonating Harikamboji - ரம்யமான ஹரிகாம்போதி

முல்லைப் பண் என்ற பழமையான ஒர் பண் கி.மு.3ம் நூற்றாண்டிலிருந்தே பாடப் பட்ட பண். இந்தப் பண்ணினை கர்நாடக இசையில் ஹரிகாம்போதி என்று 28வது மேளகர்த்தா ராகமாக இதனை வரிசைப் படுத்தியுள்ளனர். கமாஸ் தாட் என்று ஹிந்துஸ்தானி இசையில் இந்த ராகத்தினை வகைப்படுத்துவர். முத்துஸ்வாமி தீக்ஷிதர் பள்ளியில் இந்த ராகத்தினை ஹரிகேதாரகௌளம் என்பர். கர்நாடக சங்கீத மேதை பாரத் ரத்னா திருமதி MSS அவர்கள் பாடிய பாடல் எல்லோராலும் ரசிக்கப் பட்ட பாடல் "ராமனன்னு ப்ரோவரா".

சங்கீதம் எங்கே யாரிடம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அது எவ்வாறு பலரும் அறிய இசைக்கும் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்ல இந்த கணினி யுகத்தில் மட்டுமே அது ஸாத்யம். ரம்யமான கிணீர் என்ற குரலில், ஆரவாரம் இல்லாத ஒரு இசைத்தொகுப்பினை இங்கு கேட்கலாம்.

இந்தத் திரைப்பட பாடலும் ஹரிகாம்போதியோ?

Guru Vandhanam


எங்களது குருநாதர் இந்த அபங்கத்தை அடிக்கடி பாடுவார். ஏனென்றால் குரு வந்தனத்தின் மேன்மையை மிகவும் அழகாகக் கூறும் அபங்கமாகும்.


கோபீ பாவத்தில் இருந்து கொண்டு பரமாத்மாவை தன் வசமாக்கு. யார் என்ன சொன்னாலும் கேட்காதே. பரமாத்மாவை கெட்டியாய்ப் பிடித்து முடிச்சு போடு. புகழ்ச்சி இகழ்ச்சிகளை கோல் கொண்டு விரட்டு. தேஹ பாவத்தைக் களை. எதையும் எதிர்பாராது பொருளின் மீது ஆசைப்படாமல் அபேக்ஷையின்றி துதி. குதர்க்கவாதங்களை விட்டு விடு. உனக்கு மூப்பு வந்தால் ஒன்றும் முடியாது. ஆகையால் இந்த யுகத்தில் உனக்குக் கிடைத்த இந்த நர ஜென்மத்தில் தாமதமின்றி குருவை அணுகு. அவரே உனக்கு உண்மையானவர். அவரை விட்டால் வேறு கதியில்லை.

Sunday, July 27, 2014

Paramasiva worships Sangarshana

இவுவுலகில் ஏழு த்வீபங்கள். அதில் ஜம்பூ த்வீபம் என்பது ஒன்று. அவற்றில் ஒன்பது கண்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் நாம் வசிக்கும் பரத கண்டம். பாகவதத்தை சுகர் விதுரருக்குச் சொல்லுகிறார். விதுரரோ வியாச மகரிஷியின் அம்சம். தர்ம தேவதையின் அம்சமான விதுரருக்குச் சொல்லித் தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் சுகர் சொல்லி பாகவதத்தை அனுபவிக்கிறார். ஒரு நற்செய்தி நாம் அறிந்திருப்பினும், பிறர் அதனை விரிவாகச் சொல்லும் பொழுது நாம் மேலும் பல உட் கருத்துகளை அறியலாம்.
சுகர் விதுரருக்கு இளாவ்ருத வர்ஷத்தில் ஸ்ரீ பரமசிவன் ஸங்கர்ஷ்ணனை எவ்வாறு பூஜித்தார் என்பதை சொல்கிறார்.
பஜே பஜன்யாரண பாத பங்கஜம்
பகஸ்ய க்ருத்ஸ்னஸ்ய பரம் பராயணம்
பக்தேஷ்வலம் பாவித பூதபாவனம்
பவாபஹம் த்வா பவ பாவமீஸ்வரம்.
இளாவ்ருதம் என்ற கண்டத்தில் பரமசிவன் ஸ்ரிஸங்கர்ஷண மூர்த்தியை ஆராதித்து வருகிறார். இளாவ்ருதம் என்ற பகுதி மேருவின் அடிவாரத்தில் இருக்கிறது. மேருவின் சிகரத்திலிருந்து ஜம்பூ என்ற நதி பாய்கிறது. இங்கு பரமசிவனைத் தவிர வேறு ஒரு புருஷனே கிடையாது. ஒரு சமயம் பார்வதி தேவி பரமசிவனுடன் அங்கு தனிமையில் இருக்கையில் மகரிஷிகள் சிவதரிசனத்திர்காக வந்ததால், அம்பாள் லஜ்ஜைப்பட்டாள். அம்பாளை திருப்திபடுத்த புருஷர்கள் வந்தால் அவர்கள் பெண்ணாகிவிட பரமசிவன் ஆஞ்சயித்தார்அங்கு அம்பாளுடன் இருந்து ஸங்கர்ஷண மூர்த்தியை ஆராதித்து பார்வதிக்கு மந்த்ரோபதேசம் செய்தார் என்று பாகவத்தில் சொல்லப்பட்டதை சுகர் விதுரருக்குச் சொல்கிறார்.
பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பரமசிவன் ஜபித்த மந்திரம்
ஓம் நமோ பகவதே மஹாபுருஷாய ஸர்வகுண
ஸங்க்யானா யாநந்தா யாவ்யக்தாய நம இதி

ஜம்பூ த்வீபத்தில் உள்ள ஒன்பது கண்டங்கள்
1) இளாவ்ருதம், 2) பத்ராச்வம், 3)ஹரிவர்ஷம், 4)கேதுமாலம்,
5)ரம்யகம், 6)ஹிரண்மயம், 7)உத்தரகுரு, 8)கிம்புருஷம்,9)பாரதம்
இந்த கண்டங்களில் உள்ள தேவதைகளையும். அவர்களை உபாசிக்கும் பக்தர்களையும், அங்கு ஜெபிக்கப்படும் மந்திரங்களையும் சுகர் ஸ்ரீமத் பாகவத்தில் விஸ்தாரமாக கூறியுள்ளார்.

Friday, July 25, 2014

Varkari Movement

பாரத தேசத்தில் கார்நாடக மாநிலம் மகாராஷ்டிரா மாநிலம் இரண்டும் சேர்ந்து கன்னட தேசமாக 10, 11வது நூற்றாண்டில் இருந்தபோது, பாகவத தர்மத்தில் பக்தியை கற்பிக்கும் ஒரு உன்னதமான ஒரு பள்ளிகூடமாக "வர்காரி" திகழ்ந்தது. பண்டர்பூரில் மிளிர்ந்த இந்தப்  பள்ளிக்கூடத்தில் விட்டலரும் விட்டோபாவும் பலரை ஈர்த்தனர்.
மராத்திய மொழியில் "வரி" என்றால் கடவுள் குடிகொண்ட புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் தீர்த்த யாத்திரையைக்  குறிக்கும். இந்த தர்மத்தைப்  பின்பற்றுவோரை "வர்காரி" என்பர். இந்த தர்மத்தை அனுஷ்டிப்பவர்கள், ஒவ்வொரு ஏகாதசியன்று  பண்டர்பூருக்குச் செல்வர். கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி மிகவும் முக்கிய தினமாகும். 
ஞானேஸ்வர், நாமதேவர், துக்காராம் மேலும் சோகாமேளா என்பர்கள் இந்த தர்மத்தை அனுஷ்டிப்பவர்களில் மிகவும் முக்கியமானவர்கள்.
வர்காரி என்பதைப் பற்றிய ஒரு சங்கீத உபன்யாசத்தை திரு.பரமேஷ் கோபி அவர்கள் மிக திறம்பட அளித்துள்ளார். கேட்டு மகிழ்ந்து அவரை நாமும் ஊக்குவிக்கலாம்.



Part 3    Part 4   Part 5   Part 6   Part 7   Part 8   Part 9

இனிது! இனிது! மழலைச் சொல் இனிது!


நற் செய்திகளைப் படிக்கும் பொழுது, அந்த செய்தி பிறர் அறிந்துருப்பினும், நாம் பிறருடன் அதனைப் பகிர்ந்து கொள்வதால், அந்தச் செய்திகளை மனதில் உள் வாங்கி அதனை அசைபோடுகிறோம். இச் செய்திகளை அறிந்திராத சிலர், என்னுடன் அதனை அனுபவித்து மகிழ்வர் என்ற நோக்கத்துடன் 
"தினம் ஒரு செய்தி
"பாகவதத்தின் ஏடுகள் சில" 
என்ற தலைப்புகளில் எழுதலாம் என்றுள்ளேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஊக்கம் இதனை மேன்மேலும் சிறப்புடையச் செய்யும்.


"திருமாலையை" தொண்டரடிப் பொடியாழ்வார் அவர்கள் அருளிச் செய்கையில் அரங்கன் தெரிந்து கொண்டே, கேட்டு அனுபவித்தாராம். எவ்வாறு என்றால்

கிம் ம்ருஷ்டம் ஸுதவசனம்
புனரபி ம்ருஷ்டம் ததேவ ஸுதவசனம்
ம்ருஷ்டாதபி ம்ருஷ்டதரம்
ததேவ பரிபக்வம் ஸுதவசனம்

சிறு குழந்தையின் மழலையைக் கேட்டு தகப்பனார் மகிழ்கிறார். பின் அவன் பாலகனாய் பேசும் போது மகிழ்ந்து அவனை ஊக்குவிக்கிறார். அதே பாலகன் யுவனாக உறையாற்றும் போது பெருமைப் படுகிறார். அதே போல் அரங்கன் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கொண்டு, தனது யுவனான ஆழ்வாரின் திருமாலையைக் கேட்டு உகவை கொண்டாதாகச் சொல்வர்.