Thursday, August 28, 2014

YAGNA VARAHA MURTHY - ஸ்ரீயக்ஞ வராஹமூர்த்தி

விதுன்வதா வேதமயம் நிஜம் வபுர்
ஜனஸ்தப: ஸத்ய நிவாஸினோ வயம்
ஸடா ஸிகோத்பூத ஸிவாம்பு பிந்துபிர்
விம்ருஜ்யமானா ப்ருஸமீச பாவிதா:
ஸ்ரீயக்ஞ வராஹமூர்த்தியின் சரீரம் வேதமயமானது. ஹிரண்யாக்ஷகனைப் பார்த்து சிலிர்த்து எழுந்தார். அவரது உடலிருந்து சிதறிய மங்களகரமான ஜலத்திவிலைகள் ஜனோ லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம் இவற்றில் உள்ளவர்கள் மேல்பட்டன. இதனால் அவர்கள் தங்களைப் பரம பவித்ரர்களாய் கருதியதோடு, வாக்கினால் பவித்ரர்களாக ஆனதாகக் கூறுவர்கள். அவர்கள் எல்லோரும் யக்ஞ ரூபியாய் துதித்த விவரம் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.

रूपम् तवैतन्ननु दुक्रुतात्मनाम् दुर्दर्नम् देव यदध्वरात्मकम्
छ्न्दाम्सि यस्य त्वचि बाहिम् रोम्स्वाच्यम् द्रुशि त्वन्ग्रिशु चातुर्होत्रम्
स्रुक् तुण्ड आसीत्स्रुव ईश नास्योरिडोदरे चमसा: कर्ण्ररन्ध्रे
प्रासित्रमास्ये ग्र्स्ने ग्र्हास्तु ते यच्च वर्णम् ते भगवननिहोत्रम्

யக்ஞமும் யக்ஞ வஸ்த்துக்கள்       வராஹ மூர்த்தியின்
                                       அவயவங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
காயத்ரீ முதலிய சந்தஸ்ஸுக்கள்     - இந்த்ரியத்திலும்
பர்ஹிஸ் என்ற தர்பத்தினை          - ரோமங்களிலும்
யக்ஞ நெய்யினை                    - கண்களிலும்
நான்கு ரித்துவிகளால் செய்யபடும்
கர்மாவை                            - கால்களிலும்
ஸ்ருக் என்ற ஜுஹூவை             - முகத்திலும்
ஸ்ருவம்                             - மூக்குகளிலும்
(நெய்யை ஹோமபாத்திரத்தில் விடும் க்ருங்காலி மரத்தினால் செய்த கரண்டி)
புரோடசம்                           -  வயிற்றிலும்
(ஹவிஸ்ஸை வைக்கும் பாத்திரம்)
சமஸம்                             - காதுகளிலும்
(ஸோம ரஸம், பானத்திற்கும் உபயோகப்படுத்தும் மரத் தட்டுகள்)
பிராசித்யம்                          - வாயிலும்
(ப்ரும்மாவின் ஹவிஸ்ஸை வைக்கும் பாத்திரம்)
கிரஹம்                             - வாய்க்குள் உள்ள த்வாரங்கள்
(உரல் போன்ற ஸோமரஸத்தை க்ரஹிக்கும் பாத்திரங்கள்)
தீக்ஷண்யா                          - வராஹ ரூபம்
(யக்ஞ இஷ்டியை ஏற்படுத்தும் பகவத் ஸவ்ரூபம்)
உபஸத் என்ற இஷ்டியை            - கழுத்து பாகத்திலும்
ப்ராணீ இஷ்டி, உதணீய இஷ்டி       - தித்திப் பற்கள்
(யக்ஞ ஆரம்பத்திலும், யக்ஞ ஸமாப்தியில் செய்யும் இஷ்டிகள்)
பிரவர்க்ய பாத்திரம்                 - நாக்காகவும்
ஸப்யம், ஆவஸத்யமென்ற அக்னிகள் – தலையிலும்
அடுக்கி வைத்த இஷ்டகைகளாகிற சிதை - ப்ராணனாகவும்
ஸோமரஸம்                       - ரேதஸ்ஸாகவும்
ப்ராத, மாத்யந்தின த்ருதீய ஸ்வனம் – இருக்கைகளாகவும்
ஏழு ஸோம ஸம்ஸ்தைகள்         - ஏழு தாதுக்கள்
(அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசி, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற ஏழு ஸம்ஸ்தைகள் தோல், ரத்தம், மாமிஸம், மேதஸ் எலும்பு, மஜ்ஜை, சுக்ரம் என்ற ஏழு தாதுக்கள்)
த்வாதஸாஹம் என்ற ஸத்ரங்கள்    - சரீர ஸந்தியாகவும்
ஸோமலதா ஸம்பந்தம் யக்ஞ ரூபம் – பகவானாகவும்
இஷ்டியை                          - கயிறாகவும்
நமோ நமஸ்தேகில மந்த்ர தேவதா
த்ரவ்யாய ஸர்வ க்ரதவே க்ரியாத்மனே
வைராக்ய பக்த்யாத்ம ஜயானு பாவித
ஞாநாய வித்யா குரவே நமோ நம:
எல்லா மந்திரங்களாகவும், தேவதைகளாகவும், பொருள்களாகவும், ஸர்வ க்ரதுக்களாகவும், எல்லாக் கர்மாக்களாகவும், வைராக்யம், பக்தி இவற்றால் சுத்தப்படுத்தப்பட்ட மனதால உணரப்பட்ட ஞான வடிவாகவும் இருக்கிறார். இத்தகைய பகவானுக்கு (வராஹ மூர்த்திக்கு) அனேக நமஸ்காரங்கள்.





Click here for VARAHA PURANAM IN ENGLISH

முத்துஸ்வாமி தீக்ஷிதர் வராஹ மூர்த்தியை பூஜித்த விதம்
பல்லவி
ஸ்ரீ லக்ஷ்மீ வராஹம் பஜேऽஹம்
ஸ்ரீ லக்ஷ்மீ ஸஹிதம் ஸ்ரித ஜன ஸுபப்ரதம்

அனுபல்லவி
நீல மேக ஜய ஸ்யாமள காத்ரம்
நீலா பூதேவீ ஸ்துதி பாத்ரம்
(மத்யம கால ஸாஹித்யம்)
நீல கண்டஸிவ குரு குஹ மித்ரம்
நிகில பக்த ஜன பயார்தி தாத்ரம்

சரணம்
மங்களாலயாபோகி நுத பதம்
புங்கவ புத ஜன நதம் வேத நுதம்
ஸங்கர ப்ரிய-கரம் குபேர ப்ரதிஷ்டிதம்
ஸங்க சக்ர தரம் க்ருபா-கரம்
(மத்யம கால ஸாஹித்யம்)
பங்கஜாஸன ப்ரமுக ஸேவிதம்
பங்கஜ முக பார்கவீ பாவிதம்
பங்க ஹர தாம்ரபர்ணீ தீரஸ்தம்
ஸங்கட ஹர ஸதானந்த ஸஹிதம்

Saturday, August 9, 2014

Importance of Guru - குருவின் மகிமை

திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளை தருசிக்கச் செல்ல பன்னிரண்டு மணிநேரம் வரிசையில் நின்ற பின் முப்பது விநாடிகளுக்கும் குறைவாக நின்று சேவித்தபின் ஜனசமுத்திரம் நம்மை வெளியே தள்ளும் பொழுது, நாம் எதனை நினைந்து வேண்டி அங்கு வந்தோமோ அதனை மறந்து ப்ரமிப்புடன் வெளியே செல்லுகிறோம். அனால் அங்கே அவருக்குச் சேவை செய்யும் பட்டரோ நாள் முழுவதும் அங்கேயே உள்ளார். அவரின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
நாம் குருவின் அருகாமையிலிருந்தும் அவர் அருமை அறியாது நாம் செயல்படுகிறோம்.
குந்தி கண்ணனை வேண்டும் பொழுது, நான் தினம் தினம் கஷ்டங்களை அனுபவித்தாலும் அதனை வெறுக்கவில்லை ஏனென்றால் உன்நினைவு எனக்கு எப்பொழுதும் இருக்கும் அதனால் என் அருகாமையில் நீ எப்பொழுதும் இருக்கிறாய். அதுவே எனக்கு திருப்தி என்றாள்.
மேலே சொன்னக் கருத்துக்களை மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்த ஒரு செய்யுள்.
சொல்லாமலே சொல்லி கேட்காமலே கொடுத்து
நாமறியாமலே நம்மை இயக்கி அன்புடனே துன்புறுத்தி
வாக்கிற்கும் மனதிற்கும் அறிவிற்கும் எட்டாத தானே
தானே ஆன அந்நிலையைத் தானே தருபவராம் குருநாதர்
பூஜ்யஸ்ரீ முரளிதர குருஜி அவர்கள் இயற்றிய இந்தப் பாடல், குருவின் மகிமையை மிகவும் சிறந்த முறையில் தமிழில் மிகவும் எளிய நடையில், எவரும் பாடும் வண்ணம் அமைந்த பாடல். நன்கு இசை அமைந்தப் பாடல்.

ராகம் தேஷ்                       தாளம் ஆதி
பல்லவி
குரு க்ருபையில்லாமல் ஹரி க்ருபையில்லை
ஹரி க்ருபையில்லாமல் பக்தி இல்லை
அனுபல்லவி
பக்தி இல்லாமல் முக்தியுமில்லை
முக்தியில்லாமல் துக்க நிவ்ருத்தியுமில்லை
சரணம்
குரு உருவும் ஹரி உருவும் ஓர் உருவாகுமே
ஓருருவில் உன் மனதை நிறுத்தினால்
ஓருருவான அந்த ஓங்காரப் பொருள்
சத்ய ஞான அனந்த பிரம்மமாய் மிளிர்த்திடுமே

Friday, August 8, 2014

Avani Avittam - 10.08.2014

நம்மில் பலர் அயல் நாட்டில் உள்ளனர். வெளிநாட்டிலிருந்து கொண்டு ஹிந்து தர்மத்தைக் கடைபிடிப்பவர்கள், காயத்ரி மந்திரத்தின் மகிமையை உணர்ந்து, நம் வழக்கத்தில் உள்ள தர்மத்தைக் கடைபிடிக்கும் இந்த தலைமுறையில் உள்ளவர்கள் பலர் ஆவணி அவிட்டத்தை செவ்வனே செய்கின்றனர். நம் போன்றவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போமே! வலையிலிருந்து கொய்த வாசனை மலர்கள் பின் வருமாறு.
Shukla Yajur Veda was brought to this world by the great Rishi Yagnavalkya who first prayed to Sri Gayatri Devi by doing severe penance amidst the Panchagni. Sri Gayatri Devi pleased by his penance guided Rishi Yagnavalkya to obtain it from Lord Surya Bhagavan
Gayatri is Vedamatha, the mother of all Vedas. A person totally devoted to Gayatri recitation can achieve great success in the path of self advancement. Gayatri inspires man towards righteous wisdom. An astral, conscious electric current flows constantly in a person who is able to establish a relationship with Gayatri as it influences his mind, intellect, heart and inner self. No sooner the divine light of Gayatri dawns on the intellectual field of a person, the darkness of evil thoughts, false convictions, degrading vices start dispelling. Gayatri undoubtedly and miraculously transforms the mental framework of a person to a systematic, healthy, righteous and balanced personality. The well developed mind produces thoughts leading to action resulting in happiness. His work becomes excellent and his well intentioned thoughts radiate happiness, contentment and peace!

Each limb of Gayatri has been distilled out from each Veda. It is said in Taittriya Brahamana of Yajur Veda “ The three fold knowledge was revealed: Rig to the heart of Agni; Yajur to the heart of Vayu and Sama to the heart of Aditya. Thus the All Pervading Lord revealed the three fold knowledge, the three worlds were thus illumined. The earth (Bhu Lok, Prithvi) by the Rig, the Antariksha (Bhuva Lok) by the Yajur and Dev Lok (Svah Lok) by the Sama Veda”.

Yajur Upaakarma Sankalmpam (Aavani Avittam).

10th August 2014
Upakarma (Avani Avittam) Purpose:  Upakarma (/upaakarma/) means beginning or "Arambham", i.e. to begin the study of the Veda (Veda Adhyayanam). For example, Yajur Upakarma means to begin the study of the Yajur Veda. Those belonging to the Yajur Veda observe the Upakarma in the month of Sravana (August-September), on the day of the full moon (paurnami). Why begin study of the Vedas on this particular day? This auspicious day also happens to be the day when Lord Narayana took the avatara as Lord Hayagreeva. Lord Hayagriva as we all know restored the Vedas to Brahma and also is the God of Knowledge.
 We saw that the "kAmo'karshIt manyur akArshIt" japam is done with a sense of contrition. Who else but Vasudeva can bear the burden of our acts of  OMISSIONS and commissions with regard to shastras? SAstramayena sthira pradIpena -- Daya Devi (compassion of the Lord personified) lights the lamp of shastras so that the jiva can find its way to its home in the Absolute.

After the kamo'karsheeth japam, we proceed to perform the Upakarma function. It is done after mAdhyAhnikam and bhagavad-ArAdhanam (ijyA). The main purpose of the Upakarma function is to offer prayers and express our gratitude to those rishis who gave us the Vedas -- the rishis through whom the Vedic mantras were revealed. These rishis are known as "kaanda rishis". There are different rishis for the different Vedas. We are expected to worship those rishis who belong to our shakha or branch of the Veda, one of Yajur, Rk, Samam etc. The Yajur Veda consists of 4 kaandams. These are known as
  1. prAjApatya kaaNDam
  2. saumya kaaNDam
  3. Agneya kaaNDam and
  4. vaishvadeva kaaNDam.
These kaandams are named after those rishis who first taught the Vedas, viz., Prajapati, Soma, Agni and Vishvadeva. Subsequently we also offer our prayers to the Upanishads saamhiti, yaajniki, and vaaruni, and finally to Svayambhu and Sadasaspati, through whom the Yajur Veda came down to us.
The sankalpam is mainly taken for performing the Upakarma Homam. Then we say tad angam snAnam karishye, tad angam yajnopavIta-dhAraNam karishye, tad angam kANDarshi tarpaNam karishye -- which implies that all other activities like snaanam, yajnopaveeta dhaaranam, tarpanam etc., are only performed as an 'angam' or subsidiary to the Upakarma Homam (which is the angi or primary).


Thursday, August 7, 2014

Gowranga harathanga Ganga tharange


The lyrics in “Poojyasri Nadhamuni Nanaaji's” handwriting


Courtesy Smt.Bhooma Narayanan

என்னை மிகவும் கவர்ந்த பாடல். 
ராமக்ருஷண ஆஸ்ரமத்தில் எப்பொழுதும் பாடப்படும் பாடல் 
திரு நாணாஜி அவர்கள் பலமுறை என்னைப் பாடச் சொன்ன பாடல்.


Wednesday, August 6, 2014

Pujyasri Nadhamuni Narayana Aiyangar Aardhana - 10th August 2014


ஸ்ரீ குருப்யோ நம:
நிகழும் ஜெய வருடம் ஆடி மாதம் 25ம் நாள் ஞாயிற்று கிழமை
10th August 2014
 “பௌர்ணமித் திங்களன்று”
பூஜ்ய ஸ்ரீ நாதமுனி நாராயண ஐய்யங்கார்
அவர்களின் பதினொன்றாவது ஆராதனை விழா
புதிய எண் 19  பழைய எண் 10, பிளாக்
சம்பங்கி தெருமேற்கு மாம்பலத்தில் நடைபெற உள்ளது.
அன்று தங்களது குடும்பத்துடன் வந்து
குருநாதரின் ஆசியைப் பெறவும்
அன்றைய நிகழ்ச்சி நிரல்
மதியம் 2.30மணி முதல் 4மணி வரை விஷ்ணு ஸஹஸ்ரநாமபாராயணம்
மாலை 4.30 மணி முதல்  07.30 மணி வரை நாம ஸங்கீர்த்தனம்


Tuesday, August 5, 2014

MULLAI PAN - முல்லைப் பண் மோஹனமா அல்லது ஹரிகாம்போதியா?

எனது வலைப்பதிவில் “ரம்யமான ஹரிகாம்போதி” என்ற வலை அஞ்சலில் “முல்லைப் பண்” ஹரிகாம்போதி என்று குறிப்பிட்டுருந்தேன். அந்த அஞ்சலைப் படித்த எனது நண்பர், பண்ணினைப் பற்றிய பல அறிய செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
அதன் தொகுப்பு --  
முதன் முதலில் மோஹன ராகம் தான் முல்லைப் பண் என்று அழைக்கப்பட்டுவந்தது. மூன்று ஸ்வரங்களில் இருந்து வந்த வேத கால சங்கீதம் ஐந்து ஸ்வரங்களாக வடிவமைக்கப்பட்டு,  பண் என்று சங்ககாலத்தில் சொல்லிவந்த சங்கீதம் பின்பு ராவணன் தன் வீணையில் ஏழு ஸ்வரங்களில் ஸாமவேததினை இசைத்து சங்கீதம் ஏழு ஸ்வரமாக விடிவமைகப்பட்டதாகச் சொல்வர். பின்பு குறைத் தொனி (Flat Notes), நிறை தொனி (Sharp Notes) என்று ஸ்வரங்களை வகைப்படுத்தி 12 ஸ்வரங்களாய் தமிழிசையை வடிவமைத்தனர். நாம் இன்று காணும் இசைக் கருவிகளில் இந்த 12 ஸ்வரகளின் கோர்வையைக் காணலாம். கர்நாடக இசைவளர்ச்சியில் 4 ஸ்வரங்கள் சேர்க்கப்பட்டு பல புதிய ராகங்கள் வடிவமைக்கப்பட்டது. 72 மேளகர்த்தா ராகங்கள் என்ற அஸ்திவாரத்துடன் இன்றய கர்நாடக சங்கீதம் பரிமளிக்கிறது.

இதற்கான செய்திகளை சேகரித்தபோது அறிதான கலைகளஞ்சியமான விக்கிப் பீடியாவிலிருந்து நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் வழங்கப்படும். 2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழின் இலக்கணம் போன்ற அடிப்படைகளில் ஒன்று பண். தற்காலத்தில் தென்னிந்திய கர்நாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில்வழங்கும் இராகங்கள்  என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம்தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களேகி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், சம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்றுகி.மு.200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது.
பண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. தேவாரத்திலும் திருமுறைகளிலே குறிக்கப்பட்டுள்ள 24 பண்களைக் கீழே காணலாம். அவற்றுக்குச்சமமான தற்கால இராகங்கள் அருகே தரப்பட்டுள்ளன.

பண்
இராகம்
தேவாரம்
நட்டபாடை
"நத்தார்படை ஞானன்"
கொல்லி
எல்லையில் புகழானனும் இமை
இந்தளம்
முன்னிய கலைப்பொருளும்
குறிஞ்சி
கல்லால் நிழல்மேய கறைசேர்
செந்துருத்தி
யாழ்முறி
---
சீகாமரம்
சூலப் படையானை
நட்டராகம்
இத்தனையாம் ஆற்றை அறிந்திலேன்
தக்கராகம்
மடையில் வாளை பாய மாதரார்
பழந்தக்கராகம்
கொல்லை முல்லை நகையின்
பழம்பஞ்சுரம்
கண்ணனும் நான்முகன் காண்
தக்கேசி
பரக்கும் பெருமை இலங்கை என்னும்
செவ்வழி
பொடிகள் பூசிப் பல
பியந்தைக் காந்தாரம்
அன்ற வான்நிழல் அமர்ந்து
காந்தாரம்
உறவியும் இன்புறு சீரும்
காந்தார பஞ்சமம்
மந்திர மறையவை
கொல்லிக்கௌவானம்
நஞ்சியிடையின்று
கௌசிகம்
வாழ்க அந்தணர் வானவர்
பஞ்சமம்
பொடிதனை பூசும் மார்பில்
சாதாரி
செந்தமிழர் தெய்வமறை நாவர்
புறநீர்மை
சீருறு தொண்டர் கொண்டடி
அந்தாளக்குறிஞ்சி
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
மேகராகக் குறிஞ்சி
நீறுசேர்வதொர் மேனியர்
வியாழக் குறிஞ்சி
பந்தத்தால் வந்தெப்பால்