परोपकाराय फलन्ति वृक्षाः
परॊपकाराय वहन्ति नद्यः
/
परॊपकाराय दुहन्ति गावः परॊपकारार्थम् इदं
शरीरम् //
பிறர்க்கு உபகாரம் செய்தற்காக மரங்கள்
பழுக்கின்றன.
பிறர்க்கு உபகாரம் செய்வதற்காக நதிகள் ஒடுகின்றன.
பிறர்க்கு உபகாரம்
செய்வதற்காக பசுக்கள் பால் சுரக்கின்றன.
இந்த உடலும் பிறர்க்கு உபகாரம்
செய்வதற்காகவே உள்ளது.
கலியுகத்தில் பிறர்க்கு உதவுவதன்
உள் நோக்கம், தங்களை பெருமையுடன் மற்றவர்க்கு தெரிவிப்பதற்கு.
இதோ இப்படி....
கண்ணனுக்கு கர்ணனின் பரிசுத்தமான இதயத்தைப் பற்றித்
தெரியும். கர்ணனுக்கு போருக்கு முன்னால் தனது தாய் யார் என்பதும் சேர்ந்த இடம் எப்படி என்பதும் நன்றாகவே தெரியும் மேலும் பாண்டவர்கள் யார் என்று
அறிந்தபோதிலும், தன்னுடைய நிலையிலிருந்து மாறாத கர்ணனைப் பற்றி பகவான் கண்ணன் நன்கு அறிந்திருந்தார் . அதே போல் துரியோதனன், சகுனி ,கர்ணன் இந்த மூவரும் தாங்கள் யார், எதற்காக
இந்த ஜென்மம் எடுத்தார்கள் என்று அறிந்திருந்தும், அந்தந்த யுகத்தில் எது அவர்களது பொறுப்போ அதனை உணர்ந்து செயலாக்கினர்; அதனால் பகவான் கண்ணனின் மனதினில் இந்த மூவர்க்கும் ஒரு உன்னதமான் இடம் ஒன்று உண்டு. தூது சென்ற போது விதுரனை சந்தித்த பின்பு, ப்ரும்ம முஹூர்த்தத்தில் சகுனியின் வீட்டிற்குச் சென்று பல செய்திகளை அறிந்துவந்தார். சகுனிக்கு தனது தவறுகள் எல்லாம் தெரிந்திருந்தும் கண்ணனின் ஆணைப்படி யுத்தத்தினை நன்றாகவே செயலாற்றினான்.
நாம் இப்பொழுது ஈகை என்ற கதைக்கு வருவோம்
கண்ணன்
கர்ணனின் ஈகையை மிகவும் பாராட்டியதை அர்ஜுனனால் பொறுக்கமுடியவில்லை.
வெளிப்படையாகவே கேட்டான். "அண்ணா தருமரைக் காட்டிலும் சிறந்தவனா அவன்" என்று
வினவினான். அர்ஜுனனுக்கு, கர்ணனின் கொடைவள்ளலின் சிறப்பை உணர்த்த கண்ணன் ஒரு சிறு
விளையாடலை நிகழ்த்தினார். மலை அளவிற்கு ஒரு தங்கக் குவியலை மாயையினால்
உண்டாக்கினார். ஸூரிய அஸ்தமனத்திற்குள் அந்தக் குவியலை எல்லோருக்கும் தானம் செய்து
முடிக்குமாறு அர்ஜுனனிடம் கண்ணன் கூறினார். அன்றய தினம் அர்ஜுனன், எல்லோருக்கும் செல்வத்தை அள்ளி அள்ளிக்
கொடுத்தும், தனம் குறையவில்லை. ஆகையால் அர்ஜுனன் சோர்ந்து வருந்தினான் . அப்பொழுது
அங்கு வந்த கர்ணனிடம், மிகுதியுள்ள தங்கக் குவியலை தானம் செய்யுமாறு கண்ணன்
பணித்தார். உடனே கர்ணன் அங்கு உள்ளவர்களை கூப்பிட்டு, “இந்தக் குவியலை உங்கள்
அனைவருக்கும் நான் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பப்படி உங்களுக்குள் அதனை பகிர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த இடத்தை விட்டுச் சென்றான். அர்ஜூனன் வியப்புற்றான். ஆகா இவ்வாறு தனக்குத் தோன்றவில்லையே என்று வருந்தினான். அது தான் கர்ணனின் ஈகைச் சிறப்பு என்று கண்ணன் அர்ஜுனன்னுக்குத் தெளிவுபடுத்தினார்.
அர்ஜுனனின்
கொடைத்தன்மை, இக்கால டுயுப்லைட்விளம்பரம் போன்று பிறர் அறியச் செய்வது. ஆனால் கர்ணனின் ஈகையோ, வலது கை செய்ததை இடது கை
அறியாவண்ணம் செய்வதாகும்.
எது சிறந்த ஈகை?
கர்ணனின் ஈகையா? அல்லது அர்ஜுனின் கொடுத்தலா?