ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியர் அடங்கிய குரு பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் புவியில் உலாவிய ஆழ்வார்களின் பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். யோகசக்தி மூலம் நம்மாழ்வாரிடமிருந்து பிரபந்தங்களை நேரிடையாகப் பெற்றார் என்பது ஸ்ரீவைணவர்கள் நம்பிக்கை. பின்னர் ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன். ஒரு சொற்போரில் வென்று அரசகுலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பிற்பாடு தன் குரு மணக்கால் நம்பியின் தூண்டுதலால் திருவரங்கத்திற்கு வந்து துறவியானவர். வைணவ சம்பிரதாயங்களை ஒழுங்காக வகுத்து பின்வரும் நான்கு அடிப்படை நூல்களை எழுதியவர்.
• சித்தித்ரயம்: இது விசிட்டாத்துவைதக் கொள்கைகளை விவரிக்கிறது.
• ஆகம ப்ராமாண்யம்: இது பாஞ்சராத்ர ஆகம விளக்கம்.
• மஹாபுருஷ நிர்ணயம்: இது மகாலட்சுமியுடன் கூடிய நாராயணன் தான் பரம்பொருள் என்பதை நிர்ணயிப்பது.
• கீதார்த்த சங்கிரகம்: இது கீதைக்கு பொருளுரை.
யமுனாச்சாரியார்தான் இராமனுசரைக் கண்டுபிடித்து தனக்குப் பிறகு ஆச்சாரிய பதவிக்கு வரவேண்டியவர் அவர் என்று உலகுக்குக் காட்டியவர்.
ராமனுக்கு அனுஜன் “ஹரி நாராயணன் ஸ்ரீவத்ஸன் ”,
ஆச்சாரியர் ராமானுஜரை மனம் உருக பாடியுள்ளார்.
இவர் திரு.ஹெம்மிகே ஸ்ரீவத்ஸன், (திருK.V.நாராயணஸ்வாமி அவர்களின் குருகுலத்தை பின்பற்றிவருபவர்) அவர்களின் குமாரர்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அயல் நாட்டில் நமது கலாசாரத்தை பின் பற்றிவரும் இந்த குடும்பத்திற்கு ஆச்சாரிய சக்ரவர்த்தி ராமானுஜர் அவர்கள் பரிபூர்ண ஆசி என்றென்றும் வழங்க நாம் எல்லோரும் அந்த ஸ்ரீமன் நாராயணனைப் ப்ரார்த்திப்போம்.