“ராம
பட்டாபிஷேகம்” என்ற இந்த சாமா ராகப் பாடல் “ராகஸ்ரீ” என்ற திரு. ஸ்ரீநிவாச ராகவன் (1910)
அவர்களின் படைப்பு.
திரு
GN பாலசுப்ரமணியன், ஆதிசேஷ ஐய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி இவர்களின் சமகாலத்தவர்.
திரு ராகஸ்ரீ அவர்கள் நானூறுக்கும் மேற்பட்ட பல க்ருதிகளைப் புனைந்து மெட்டமைத்துள்ளார்.
நாராயணீயத்தின்
செய்யுள்களை மூலமாகமாகக் கொண்டு, தமிழில் பல பாடல்களை மெட்டமைத்து பாடியுள்ளார். ஆறுபடை யாத்திரைப் பாடல்கள் பல இயற்றி, படி உற்சவத்தின்
போது திரு. ஆதிசேஷ ஐய்யர், ஆண்டவன் பிச்சை, திருபுகழ் மணி இவர்களுடன் திருமதி பூமா நாராயணன், திரு க்ருஷ்ணன் இந்த இருவர்களால்
பாடப்பட்ட பல பாடல்கள் இன்றும் “திருவல்லிக்கேணி PTPani & Co.,” மூலமாக ப்ராபல்யமாக பேசப்பட்டுள்ளது.
2015வது ராம நவமியில், இவரது ராமாயணப் பாடல் முன்னமேயே இங்கு பதிவு செய்துள்ளேன். ராம பட்டாபிஷேக காட்சியினை நம் கண் முன் நிறுத்தும் இந்தப் பாடலை இந்த சமயத்தில், திருமதி அம்புஜம் ஸ்ரீநிவாஸ ராகவன் அவர்களின் ஞாபகமாக , எனது தமக்கை திருமதி ரமாரங்கனாதனுடன் இணைந்து வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.