சிலர் நமது முன்னோர்கள் திதியை
அவரவர்களது க்ரஹத்தின் ப்ருஹஸ்பதி சொல்லட்டும் என்று உள்ளனர். நாம் தான் அதில் அக்கரையுடன்
இருக்க வேண்டும். பல சமயம் நாம் சரியாக திதியை கணிக்காது, ப்ருஹஸ்பதியை குறை கூறுவோம்.
அதற்கான காரணங்கள்
1. திதித்துவையம் வரலாம்.
2. சூரியோதயத்திலிருந்து எவ்வளவு நாழிகைகள் அன்றைய திதி உள்ளது என்பதை அறிவதில் தவறாகலாம்.
3. மற்றும் க்ருஷ்ணபக்ஷமா
அல்லது சுக்லபக்ஷமா என்ற ஒரு சம்சயம் வரலாம்.
சுலபமாக முன்னதாகவே நாள்களை குறித்து
நமது நாட்காட்டியிலோ அல்லது கூகுள் / விண்டோஸ் நாட்காட்டியில் முன்னதாகவே இதனை பதிவு
செய்து நம்மை நினைவு படுத்தச் செய்யலாம். இதனை செயவதற்கு முன், நம்மிடம் உள்ள நமது முன்னோர்களின் சர்மஸ்லோகம்
எழுதப்பட்ட தஸாஹஸ் கடுதாசியினை பத்திரப் படுத்தி வைத்து குறித்துக்கொள்ளலாம்.
சுலபமாக நாளினைக் குறித்துக் கொள்ள கீழே தரப்பட்டுள்ள
அட்டவணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் அச்சிட்டவர்களுக்கு
நன்றியைத் தெரிவிக்கலாம்