Friday, June 19, 2020

Religion and science - விஞ்ஞானமும் மதமும்


ஜாபாலி என்ற மகரிஷி, ராமாவதாரத்தில், உலகிற்கு ஸ்ரீராமர் மூலமாக பல செய்திகளை நமக்கு அருளியுள்ளார். ஜாபாலி மகரிஷியும் பகவான் ஸ்ரீராமரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்தவர். நமக்கு ஒரு செய்தியைச் சொல்வதற்காக ஆற்றிய சம்வாதம். அதில் இந்தக் கால நிலைக்குத் தகுந்தாற்போல் விதண்டா வாதமும், நாத்திகமும் எவ்வாறு பிற்காலத்தில் நம்மை எல்லோரையும் மூளைச் சலவை செய்யப்போகிறது என்பதற்கு ஒரு முன் உதாரணம் வைத்தாற் போல் அமைத்து, அவர்கள் இருவர் வாதமும் இருந்ததாக வால்மீகி மகரிஷி நமக்கு அளித்துள்ளார்.

Dictionary meaning of Religion - a particular system of faith and worship.

a pursuit or interest followed with great devotion.

மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளன. அந்நாளில் விஞ்ஞான விஷயங்களை மதக் கோட்பாடுகள் மூலமாக நம் பெரியவர்கள் நமக்கு அளித்துள்ளார்கள். அதனை அறியாத இன்றய நாத்திக மூடர்கள், மதத்திற்கு ஒரு சாயம் பூசி, தங்களது ஆதாயத்தை அடைந்துள்ளனர். பாகவதத்திலும், ராமாயண மஹாபாரதத்திலும் இல்லாத ஒன்று இல்லை. அதனை மதம் என்பர். கூகிளில் இல்லாத ஒன்று இல்லை என்றால் அதனை விஞ்ஞானம் என்பர். அந்த கூகுளும் இதிஹாஸ புராணங்களில் அடக்கம். திரு.வேளுக்குடி அவர்கள் க்ரஹணத்தைப் பற்றிய ஒரு செய்தியை கூறியுள்ளார். நாத்திகம் பேசுபவர்களால், விஞ்ஞானத்தை நன்கு உணர்ந்து சொல்லமுடியுமா? கடவுள் நம்பிக்கை, அதில் ஒரு ஈடுபாடு இருப்பவர்களால் மட்டுமே அதனை தெளிவாகச் சொல்லமுடியும்.


Friday, June 5, 2020

127th Maha Periyava Day 05.06.2020 (Maha Anusham)

                                                  

ஓம் 

ஸ்ரீ சங்கர ஸத்குரு 

சரணாரவிந்தேப்யோ நம : 

ஸ்ரீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸத்குரு ஸ்வாமிகள் 

ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ

பாத தரிசன மலர்

ஆண்டவன் பிச்சை அவர்கள் இயற்றியது ஹேவிளம்பி ளு புரட்டாசிமீ 30 

புதவாரம் மாலை (16-10-1957) 

புஷ்பாஞ்சலி முடிந்தவுடன்

குழந்தைகள் 

கிருஷ்ணன் -பூமா அவர்களால்

பாடப்பட்டு 

ஆச்சார்ய  பாதகமலங்களில் ஸமர்ப்பிக்கப்பட்டது.

------------------------------------------------------------------------------------------------

Tuesday, May 5, 2020

Sahadeva ties Krishna - கண்ணனைக் கட்டிய சகாதேவன்


நம்மில் பலர் அறுபது எழுபது பிராயம் தாண்டியவர்கள், இன்று காலை எங்கு சாவியை வைத்தோம் என்பதை மறந்து விடுவர். அதேபோல் இன்று காலை நாம் யாருடன் பேசினோம்  என்பதும், அவர் பெயர் என்ன என்பதையும் மறப்பதற்கு ப்ரமயங்கள் உள்ளன. ஆனால் அவர்களது 10-15 வயது பிராயத்தில் நடந்த பல  நிகழ்வுகளை அவர்களால்  மறுபடியும் அவர்களது நினைவிற்கு கொண்டு வரமுடியும். அவ்வாறு நானும் என்னுடைய இளம்  பிராயத்தில் நடந்த நிகழ்வுகளை மனதில் கொண்டு வர எத்தனித்தேன். பல சமயம் நமது சிந்தனையில் திரைப்படம் பார்ப்பது போல பல நிகழ்வுகள் நம் கண்முன் வந்து நிற்கும். அவ்வாறு ஒரு நிகழ்வு.  அதனைக் காண்பதற்கு  இந்த பாடல் ஒரு காரணமாய் அமைந்தது. 
 

எங்களது தகப்பனார் திருவல்லிக்கேணி, இந்து உயர்நிலைப் பள்ளியில்  1910-20 ஆண்டுகளில் படித்தவர். பழைய மாணவர் என்பதால்  1960 வது வருடம் பள்ளி ஆண்டு விழாவில் நடைப்பெற்றகண்ணன் விடு தூது” என்ற ஒரு நாடகத்திற்கு பாடலை  எழுதி, இசையும் அமைக்கும் பொறுப்பை பள்ளி நிர்வாகம் அவர்க்கு அளித்திருந்தது. பள்ளியின்  சமஸ்க்ருத ஆசிரியராய்  இருந்த திரு தாமல் ஸ்ரீநிவாசன் என்பவர் நாடகத்திற்கு வசனம் எழுதி கண்ணனாய் நடித்தார்.  கண்ணனை சகாதேவன் கட்டுவதாய் உள்ள ஒரு அறிய காட்சியை,  நாடகத்தில் சேர்க்க ஆசைப்பட்ட எனது தகப்பனார், அதற்கு ஏற்ற ஒர் பாடலை எழுதி, அதற்கு இசையையும் அமைத்தார்.  அதனை எனது தமயன் திரு திருவையாரு க்ருஷ்ணன் அவர்கள் அன்று பாடி எல்லோரையும் வசப்படுத்தினார்.


நாராயணீயத்தின் 100 அங்கங்களின் சமஸ்க்ருத ஸ்லோகங்களையும் தமிழில் மொழி பெயர்த்து பல பாடல்களை இயற்றியுள்ளார். அதில் வரும் ராமாயண காவியத்தை எனது ஒரு பதிவில் பாடியுள்ளேன். பால கண்ணனை யசோதை எவ்வாறு அனுபவித்தாள்; மற்றும் பல கண்ணனின் லீலைகளை பல பாடல்களாய் பட்டத்ரி அனுபவித்தது போல இவரும் அனுபவித்து, அவைகளை இந்த நாடகத்தில் சேர்த்திருந்தார்.


நாராயணீயத்தில், பாகவதத்தில் இல்லாத ஒரு காட்சியை எவ்வாறு அவர் இதில் இணைத்தார் என்பதை சிறிதே ஆராய்ந்தேன். இணைய தளம், எளிதில் அறிய பழைய புத்தகங்கள் கிடைப்பது என்பது போன்ற பல வசதிகள் இல்லாத அந்த நாட்களில், எவ்வாறு இந்த சிறந்த காட்சியை, எனது தகப்பனார் சித்தரித்தார் என்று சிறிதே  வியந்தேன்.
வில்லி பாரதத்தின் ஒரு ஈர்ப்போ என்று நினைத்தேன்.


முன்ன நீ கூறியவை எல்லாம் முடித்தாலும்
என்னை நீ கட்டுமாறு எவ்வாறு என மாயன்
உன்னை நீதானும் உணராதா உன்வடிவம்
தன்னை நீ காட்டத் தளைந்திடுவன் யான் என்றான்

மாவனும் அன்பன் மனமறிவான்,  கட்டுக ன்று,
வடிவு பதினாறு ஆயிரம் கொண்டான்
தூன்,  மூமாம் தோற்றம் உணர்ந்தே, உலகும்
தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான்

Thursday, April 2, 2020

PADUKA - பாதுகை

எங்களது தகப்பனார் திரு.ஸ்ரீநிவாச ராகவன் “ராகஸ்ரீ” என்ற அங்கிதத்துடன் படைத்த பல க்ருதிகளில் ஒன்றான, இந்த பாதுகை மஹாத்மிய க்ருதி, இன்றைய ஸ்ரீராம நவமி நன்னாளில் உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது தமக்கை திருமதி ரமா ரங்கநாதன், பாதுகா ஸஹஸ்ர பாராயணம் என்ற ஒரு வேள்வியை, அனுதினமும், ஹைதராபாத்தில் நட த்தி வருகிறார். எனது மற்றுமொறு தமக்கை 50 வருடமாக, பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயண ஐயங்கார் நடத்திவந்த நாம சங்கீர்த்தனத்தை, இன்றும் தொடர்ந்து நடத்தி, ராகஸ்ரீ க்ருதிகளை எல்லோருடன் பகிர்ந்து வருகிறாள்.  எனது தமையன் சங்கீதாச்சார்யா திரு. திருவையாறு க்ருஷ்ணன், லாஸ் ஏஞ்சலில், 42 வருட காலமாக  நாம சங்கீர்த்தனவேள்வியை விமர்சயாக செய்து வருகிறார்.

நானும் அவர்களது நாம சங்கீர்த்தனவேள்வியில் கலந்து கொண்டு, இந்த பாடலை சமர்ப்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.