எங்களது தகப்பனார் திரு.ஸ்ரீநிவாச ராகவன் “ராகஸ்ரீ”
என்ற அங்கிதத்துடன் படைத்த பல க்ருதிகளில் ஒன்றான, இந்த பாதுகை மஹாத்மிய க்ருதி, இன்றைய
ஸ்ரீராம நவமி நன்னாளில் உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது தமக்கை திருமதி ரமா ரங்கநாதன், பாதுகா
ஸஹஸ்ர பாராயணம் என்ற ஒரு வேள்வியை, அனுதினமும், ஹைதராபாத்தில் நட த்தி வருகிறார். எனது
மற்றுமொறு தமக்கை 50 வருடமாக, பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயண ஐயங்கார் நடத்திவந்த நாம சங்கீர்த்தனத்தை,
இன்றும் தொடர்ந்து நடத்தி, ராகஸ்ரீ க்ருதிகளை எல்லோருடன் பகிர்ந்து வருகிறாள். எனது தமையன் சங்கீதாச்சார்யா திரு. திருவையாறு க்ருஷ்ணன், லாஸ்
ஏஞ்சலில், 42 வருட காலமாக நாம சங்கீர்த்தனவேள்வியை
விமர்சயாக செய்து வருகிறார்.
நானும் அவர்களது நாம சங்கீர்த்தனவேள்வியில் கலந்து
கொண்டு, இந்த பாடலை சமர்ப்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.