த்யாகராஜ ஸ்வாமிகள் வீணை குப்பய்யரவர்கள் வேண்டுதல்படி சென்னை விஜயம். பிறகு கோவூர் பயணம். சுந்தர முதலியார் ஸ்வாமிகளுக்கு தெரியா வண்ணம் அவரது யாத்திரை பல்லக்கில் ஆயிரம் பொற் காசுகள் உள்ள பணப் பையை வைத்து அனுப்பின்னார். திருப்பதி போகும் வழியில் திருடர்கள் அவர்களை மடக்க ஸ்வாமிகள் பொற் காசுகள் இருப்பதை அறிந்தார். ஆனால் அந்தப் பணம் ராமநவமி உத்ஸவங்களுக்கு பயன் படும் என்பதால் பகவான் ராமன் அதனைப் பார்த்துக் கொள்வார் என்றார். “முந்து3 வெனுகயிரு பக்கல தோடை3 1முர 2க2ர ஹர ராரா” என்று தர்பார் ராகத்தில் பாட இரவு முழுவதும் பயணம் செய்யும் பொழுது இரு வீரர்கள் அந்த திருடர்களை விரட்டியதும் அல்லாமல் காலைவரை பயணம் செய்து பக்க பலமாக வந்தனர். காலையில் அவர்கள் இருவரும் மறைந்து விட்டார்கள். திருடர்களோ ஸ்வாமிகளிடத்தில் எங்களுக்கு பணம் தேவையில்லை. அந்த இரு வீரர்களும் எங்கள் இதயத்தை கவர்ந்து சென்றுவிட்டனர் என்றார்கள். ஸ்வாமிகளுக்கு வந்தது யார் என்று அறிந்தார். திருடர்களுக்குக் கிடைத்த தரிசனம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்தி “எந்த பாக்யமு கல்கிதிவி” என்ற ஸாரங்கா ராகக் கிருதியைப் பாடினார். இது நடந்தது 1847க்கு முன். 1947க்குப் பின் நடந்த ஒரு சுவையான நிகழ்வை விகடனில் ப்ரசுரித்தார்கள். அதனை இசைத் துக்கடா என்ற பகுதியில் “கள்வரை மயக்கிய கலை” என்ற தலைப்பில் இங்கே காணலாம்.
Nanry.
ReplyDeleteNanry
ReplyDelete