Sunday, December 30, 2012

திருப்பாவை 13.புள்ளின்வாய் கீண்டானை,

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
>

Welcome 2013 A Happy & Prosperous Year for All


நம்பிக்கை என்பது நாம் பிறந்த மண், நாம் இருந்த கருவறையின் விசேஷம். நம்மை வளர்த்த பெரியவர்கள் நமக்கு கொடுத்த சீதனம். அதனை பல சமயம் பகுத்தறிவு, சீர் தூக்கிப்பார்க்கும் முதிர்ச்சி என்ற தவறான போர்வையில் நம்மை மாற்றிக்கொள்கிறோம்; தவறு ஏமாற்றிக் கொள்கிறோம். நம்மில் சிலரிடம் கேட்டபொழுது, எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறுவார்கள். ஆனால் பிறர்க்குத் தெரியாமல் தன்னையும் தன் சுற்றார் நலன் பற்றி சோதிடரை அணுகி ஆராய்வார்கள். புது வருடம் பிறக்கப் போகிறது. இரண்டாயிரத்து பதிமூன்றாம் வருடக் குழந்தையின் க்ரஹ நிலையை கணித்து இங்கே கொடுத்துள்ளேன். நம்மில் தெரிந்தவர் பலனை எழுதலாம். அது மற்றவர்களுக்கு மனதிற்கு இதம் அளிக்கலாம். அது அவரவர் மனப்பக்குவத்தைப் பொருத்தது.
(சென்னைப் பட்டினத்தின் விவரங்களை வைத்து குறிக்கப்பட்டுள்ளது)
எங்கள் குருநாதர் கூறுவார், “அதனை தெரிந்து கொள்வதால் தவறில்லை. எதிரே உள்ள பள்ளத்தில் எப்படி இருந்தாலும் விழுந்து அடி கிடைக்கப் போகிறது. அது அவரவர் வாங்கி வந்த வரன். க்ரஹ நிலை தெரிந்து அதற்குத் தக்கவாறு நடந்தால், அதனால் வரும் சிரமம் சிறிது குறைவாகத்தெரியும். அல்லது அதனின்று வெளிவர ஒரு வாய்ப்பை நமக்கு ஈசன் அருளுகிறான்” என்பார்.
இதைப் பற்றி “இந்திரா சௌந்தர்ராஜன்” எழுதியுள்ள ஒரு கட்டுரை என்னை மிகவும் கவர்ந்த்து. தினகரன் நாள் ஏட்டில வந்த இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி தினகரன்
2013 என்கின்ற புதுக்குழந்தையை 
நாம் எல்லோரும் வரவேற்கலாம்

நான் உங்களுடன் புது வருட வாழ்த்துக்களை பறிமாரிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரியவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என்னைவிட சிறியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாதம் நான் பாடிய திருப்பாவை திருவெம்பாவப் பாடல்களை இங்கே கேட்டு நீங்கள் ஆய்வு செய்யலாம். அனுபவிக்கவும் செய்யலாம்.





Saturday, December 29, 2012

திருவெம்பாவை 03.முத்தன்ன வெண்ணகையாய்


முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

திருப்பாவை 12.கனைத்து இளங் கற்றெருமை

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

Friday, December 28, 2012

திருப்பாவை 11.கற்றுக் கறவை

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை 10.நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?

ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!

அபலையின் மானம் காத்த மகாபெரியவா

திரு.நடராஜன் எனபவர் எங்களது குருநாதரின் முக்கிய சீடர்களில் ஒருவர். அவர் பல நல்ல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். மகா பெரியவாளுடன் சேர்ந்து இருந்த பல அனுபவங்களை பலர் எழுதுவதை தொகுத்து வெளியிடுவதை அவர் மின் அஞ்சல் மூலம் அனுப்பினதை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன். இந்த பதிவிற்கு திருமதி வசந்தகுமாரி அவர்களின் உகபோகா மிகவும் பொருத்தமானது. அதனையும் உங்களுடன் சேர்ந்து கேட்டு மகிழ்கிறேன்.


கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.
எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !” என்றார்.  யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள்.  பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இந்தாடா……….கொழந்தே! இங்க வா”  சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில் ” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.> > அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!
ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!
“இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!” என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை.   அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி “கோவிந்தா” என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார்.  அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.