ஜாபாலி என்ற மகரிஷி, ராமாவதாரத்தில், உலகிற்கு ஸ்ரீராமர் மூலமாக பல செய்திகளை நமக்கு
அருளியுள்ளார். ஜாபாலி மகரிஷியும் பகவான் ஸ்ரீராமரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்தவர்.
நமக்கு ஒரு செய்தியைச் சொல்வதற்காக ஆற்றிய சம்வாதம். அதில் இந்தக் கால நிலைக்குத் தகுந்தாற்போல்
விதண்டா வாதமும், நாத்திகமும் எவ்வாறு பிற்காலத்தில் நம்மை எல்லோரையும் மூளைச் சலவை
செய்யப்போகிறது என்பதற்கு ஒரு முன் உதாரணம்
வைத்தாற் போல் அமைத்து, அவர்கள் இருவர் வாதமும்
இருந்ததாக வால்மீகி மகரிஷி நமக்கு அளித்துள்ளார்.
Dictionary meaning of Religion - a
particular system of faith and worship.
a pursuit or interest followed with great
devotion.
மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளன. அந்நாளில்
விஞ்ஞான விஷயங்களை மதக் கோட்பாடுகள் மூலமாக நம் பெரியவர்கள் நமக்கு அளித்துள்ளார்கள்.
அதனை அறியாத இன்றய நாத்திக மூடர்கள், மதத்திற்கு ஒரு சாயம் பூசி, தங்களது ஆதாயத்தை
அடைந்துள்ளனர். பாகவதத்திலும், ராமாயண மஹாபாரதத்திலும் இல்லாத ஒன்று இல்லை. அதனை மதம்
என்பர். கூகிளில் இல்லாத ஒன்று இல்லை என்றால் அதனை விஞ்ஞானம் என்பர். அந்த கூகுளும்
இதிஹாஸ புராணங்களில் அடக்கம். திரு.வேளுக்குடி அவர்கள் க்ரஹணத்தைப் பற்றிய ஒரு செய்தியை
கூறியுள்ளார். நாத்திகம் பேசுபவர்களால், விஞ்ஞானத்தை நன்கு உணர்ந்து சொல்லமுடியுமா?
கடவுள் நம்பிக்கை, அதில் ஒரு ஈடுபாடு இருப்பவர்களால் மட்டுமே அதனை தெளிவாகச் சொல்லமுடியும்.