துறவி ஒருவரைச் சந்தித்த அரசன் ஒருவன் “தந்தை, அரசன், இறைவன் மூவரில் யார் சிறந்தவர்?” என்று கேட்டான்.
அதற்குத் துறவி “அரசே தந்தை பொன் போன்றவர். அரசனோ வெள்ளிக்கு ஒப்பானவர். இறைவனோ தானியம் போன்றவன்” என்றார்.
“அப்படியானால் இறைவன் மதிப்பில் தாழ்ந்தவர் என்று பொருள் தானே ? “ என்று வினவினான் அரசன்.
“அரசே பொன்னும் வெள்ளியும் மதிப்பில் உயர்ந்திருந்தாலும் அவையில்லாமல் மனிதன் உயிர் வாழ முடியும். ஆனால் உணவு தானியமின்றி மனிதனால் உயிர் வாழ முடியாது” என்று சொன்னார் துறவி
-நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல்
புரியாததைப் புரியவைத்தார் துறவி
ReplyDeleteஇறை உயர்வின் உண்மையை உணரவைத்தார்
மனித உயிருக்கு பயன் உள்ளதே உயர்வானது.
ReplyDeleteஉயிர் வாழ தானிய உணவு அவசியம் ஆன்ம உணர்வு பெற இறை உணர்வு அவசியம். ஆனால் இன்றைய மனிதர்கள் இறைவனையும் மறந்து விட்டார்கள் விளை நிலங்களையும் வீட்டு மனைகளாக மாற்றுகிறார்களே ஏன் ? எதிர்காலத் தொலை நோக்கு எங்கே போயிற்று.
ReplyDelete