ராமாயணம் எத்தனை ராமாயணம்? எண்ணிலடங்கா!
வால்மீகி ராமாயணத்தில் ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலே தருகிறார்கள்.
ஒவ்வொரு ராமாயணத்திலும் ஒரு புதிய கிளைக் கதைகளைச் சொல்லி நம்மை ப்ரமிப்பில் ஆழ்த்துகின்றனர். ஒரியா மொழியினை இருபது லக்ஷம் மக்கள் பேசுகின்றனர். இந்த மொழியினிலே 1415 ஆண்டினிலே சாரளா தாஸ் என்பவர் விலங்கா ராமாயணம் என்ற நூலை ஒரியா மொழியில் எழுதியுள்ளார்.
ராவண வதத்தில் யாருடைய பங்கு அதிகம் என்பதைப் பற்றி சீதைக்கும் ராமருக்கும் ஒரு சர்ச்சை எழுகிறது. ஆயிரம் தலை கொண்ட விலங்கன் என்ற அசுரனை யார் கொல்கின்றனரோ அவர் தான் ராவண வதத்துக்கு அதிகம் உழைத்தவர் என்று ஒப்புக்கொள்ளலாம் என்ற போட்டியினை முன் வைத்தனர். அதில் ராமர் தோல்வியுற்று, இளையவன் துணையுடன் சீதை விலங்கா அசுரனைக் கொன்றதால் அவர்கள் பணி உயர்ந்தது என்று தீர்மானம் செய்ததாக ஒரு வடிவம் தந்துள்ளார். இந்தச் செய்தியை நான் பக்தன் என்ற பழய மாதமலரில் படித்து ரசித்தேன்.
இந்த ஒரியா மொழியில் மேலும் அர்ஜுன் தாஸ் “ராம விபா” என்ற நூலினையும் நீலகண்ட ரதர் என்பவர் “சீதா பிரேம தரங்கிணி” என்ற நூலினையும் எழுதியுள்ளார்கள். இந்த நூல்கள் எல்லாம் ராமாயணத்தினை முக்கிய கருத்தாகக் கொண்டு எழுதப்பட்டவை. மேற் சொன்ன செய்திகள் இணையதளத்தில் “விக்கிபீடியா” மின்வலையிலிருந்து எடுக்கப்பட்ட செய்திகள்.