பம்ம பம்மதா தைய்ய தைய்ய தக
திரு நாதமுனி நாராயண ஐயங்கார் 1958-1960ல் ஹனுமந்த ராயன் கோயில் தெருவில் உள்ள முதல் வீட்டில் மூன்றாவது மாடியில் தங்கி இருக்கும் பொழுது சனிக்கிழமைகளில் ஸம்ப்ராதாய பஜனையை நடத்துவார். அந்த நாட்களில் இந்தப் பாட்டினை அவர் விரும்பிப் பாடுவார். அன்று அவர் கற்றுக்கொடுத்த அந்த பாடல் இன்றும் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இந்தப் பாடலை பாடும் பொழுது நான் அன்றைய நாட்களுக்குச் செல்லுவதாக மனதில் ஒரு இதமான உணர்ச்சி ஏற்படுகிறது. அவரது கையெழுத்துப் பிரதியில் அந்தப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment