Wednesday, August 31, 2011

அறிந்த விழா அறியாத வழக்கம்



நாம் எல்லோரும் கேள்விப்பட்ட வாசகம் “படி தாண்டா பத்தினி. “படி தாண்டா பதி என்ற வாசகம் “போகர் ஸ்ரீநிவாஸருக்குப் பொருந்துமாம். திருச்சானூரில் உள்ள அலமேலுமங்கா கோவிலில் உத்சவர் அலமேலுமங்கா தாயாருக்கும் போகர் ஸ்ரீநிவாஸருக்கும் நித்ய கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. பின்பு தாயார் நான்கு மாடவீதிகளிலும் திருவிழாக் கோலத்தில் வருவார்கள். ஆனால் போகர் ஸ்ரீநிவாசரோ கல்யாணத்திற்குப் பிறகு மூலவ மூர்த்தி தாயாரின் சன்னதிக்கு சென்றுவிடுவதாக ஒரு ஐதீகம். அதனால் போகர் ஸ்ரீநிவாசரை “படி தாண்டா பதி என்பர். 

Monday, August 22, 2011

Hey Shyama Sundara Hey Sai Sundara

ஹே ஷ்யாம ஸுந்தரா ஹே ஸாயி ஸுந்தரா
மின் வலையில் சில பாடல்களைத் தேடும் பொழுது “ஆடல் கலையே தேவன் தந்தது என்ற சாருகேசிப் பாடலைக் கேட்டேன். இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனது குருநாதர் திரு Dr.S.ராமநாதன் அவர்கள் திரைப் படப்  பாடல்களை எவ்வாறு ரசிப்பார் என்பது நினைவிற்கு வந்தது. 
அன்று சாருகேசி வர்ணம் கற்பிக்கும் நாள். “வசந்த முல்லை போலே வந்து என்ற பாடலைப் பாடி அதில் சாருகேசி ராக அபூர்வப் பிடிகளைப் பற்றி எடுத்துச் சொல்லி வர்ணப் பாடலை வர்ணமாக குழைத்து வரைந்தார்.
ஒரு அருமையான சாயீ நாமாவளியைக் கேட்ட பொழுது “கல்யாணத் தேன் நிலா என்ற திரைப் படப் பாடல் நினைவிற்கு வந்தது. எனது உறவினர் ஒருவர்க்குப் பிடித்த இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது, அந்த நாமாவளியைப் பாட வேண்டும் என்ற அவா எழுந்தது. 
கர்நாடக சங்கீதமோ அல்லது திரைப்படப் பாடலோ, சங்கீதமும் ஸாஹித்யமும் நன்றாக இருந்தால் பாடல் நம்மை ஈர்க்கின்றது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்யாமசுந்தரனுக்காகப் பாடின இந்தப் பாடலுக்கு ஸாயி சங்கரன் ம்ருதங்கம் பக்க பலமாக அமைந்துள்ளது.

திருப்பராய்த்துரை ராஜகோபாலஸ்வாமி

மன்னார்குடியில் ராஜகோபாலஸ்வாமி
ஒரு பெரிய சக்ரவர்த்தியாக ஜொலிக்கிறார்.

இவர் திருப்பராய்த்துரையில் 
உள்ள ஒரு சின்ன ஸமஸ்தானத்தை ஆளுகின்றார்.
இவரது கோட்டையை புதுப்பிக்க 
அங்குள்ள பக்தர்கள் செவ்வனே தொண்டாற்றுகிறார்கள்.
நம்மால் முடிந்தால் இவர்களுடன் சேர்ந்துகொள்வோம்.
இதோ ஒரு விண்ணப்பம்
   

Friday, August 12, 2011

இன்று (11th August), சித்தர் சித்தி அடைந்த நாள்

எனது எண்ணக் குதிரையை சற்றே பதினோரு வருடங்கள் பின்னே ஓட்டிச சென்று அசை போட்டால், நாதமுனி நாணாஜி என்னைப் பாடச்சொன்ன சில பாடல்கள் நினைவைக்கு வருகின்றன. அவற்றில் ஒன்று "ஜானகி நாத சஹாய கரே ஜப" என்ற துளசிதாஸ் பாடல்.  
இன்று  ("11th August") அவர் சித்தி அடைந்த நாள்.
நம்மிடையே உலவுகின்ற அவருடைய உணர்வுகளின் அதிர்வுகளே இந்தப் பாடலின் வடிவம்.


Monday, August 8, 2011

Neerathorella - Vaadhiraajaa


ராகம் சாருகேசி  தாளம் மிஸ்ர சாபு
வாதிராஜ க்ருதி
------------------------------
நீரெ தோரெல்லெ நீரெ தோரெல்லெ
நீல வண்ணன தேவன
பாமெ தோரெல்லெ பாமெ தோரெல்லெ
பாலா உடுபிய கிருஷ்ணனா

கடிவே கடேகொலு நேணு ஸஹிதலி
கடெகி ரொளி ஹிந்த பந்தனா
விடெதெ பக்தர ஹொடனே பாலிபா
ரங்கா உடுபிய கிருஷ்ணனா

முத்து முகதவ மூறு ஜெடெயலி
இத்த உடுபிய ஸ்தள தல்லி
ஹொத்து ஸகடனா ஆதிகுருகள
முத்து உடுபிய கிருஷ்ணனா

பால ஸன்யாஸி களு நின்னனு
ப்ரேம திந்தலி பஜிஸலு
ஆலெ தெலயா மேலே மலகித
பாலா உடுபிய கிருஷ்ணனா

அத்வயாதரி ப்ரும்ஹ வல்லப
வித்ய ஸாரதி மாடிதே
ஸத்குரு முனி வாதிராஜனே
முத்து உடுபிய கிருஷ்ணனா

Tuesday, August 2, 2011

Thank You


ஸ்ரீ குருப்யோ நம:
நிகழும் கர வருடம் ஆடி மாதம் 28ம் நாள்
(13th August 2011)
பௌர்ணமித்திங்களன்று
பூஜ்ய ஸ்ரீ நாதமுனி நாராயண ஐய்யங்கார்
அவர்களின் எட்டாவது ஆராதனை விழா
புதிய எண் 19  பழைய எண் 10, D பிளாக்
சம்பங்கி தெரு, மேற்கு மாம்பலத்தில் நடைபெற உள்ளது.
அன்று தங்களது குடும்பத்துடன் வந்து
குருநாதரின் ஆசியைப் பெறவும்
அன்றைய நிகழ்ச்சி நிரல்
மதியம் 2.30மணி–4.00 மணி வரை 
விஷ்ணு ஸஹஸ்ரநாமபாராயணம்
மாலை 4.30 மணி  07.30 மணி வரை 
நாம ஸங்கீர்த்தனம்
--------------------------------------
Sarvashri Homes”  Flat D-G 
Old No.10, New No.19 Sampangi Street,
West Mambalam, Chennai 600 033