ஸுகுண மனோஹரி ஸாயி பவானி
தேவீ ஜகதம்பே ஜனனீ தயாமயி
வந்தே பகவதீ மாதா பவானி
நான் கல்லூரி நாட்களில், என்னுடன் படித்த சக மாணவர்கள்
சிலர் அப்பொழுது ப்ராபல்யமான ட்ரான்ஸிஸ்டர் தொலைப்பெட்டியும், குரலைப் பதிவு
செய்யும் ஒலி நாடா பதிவுக் கருவியையும் பயன்படுத்துவதை மிகவும் ஆவலுடனும், ஒரு
ஏக்கமான பார்வையுடனும், கேட்டு கண்டு களித்தநாட்களை மனதில் நினைவுப் படுத்துகிறது. இப்பொழுது
கணினி மூலம் ஒளி, ஒலியில் நம்மால் ஜாலவித்தைகளைச் செய்யும் பொழுது, அந்த நாட்களில்
மேலெழுந்த ஏக்கங்கள் சிறிது மறைந்தாலும், இப்பொழுது உள்ள விஞ்ஞான வளர்ச்சியில்
வெளிவந்துள்ள கருவிகளைப் பயன்படுத்த ஒரு உந்துதல் ஏற்படுகிறது.
இந்தப்பாடல் அந்த உந்துதலால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட்து
Good one Chitha!!
ReplyDeleteIt has come out well!!
Who are the people singing along with you?