Ragasri
என்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்
Wednesday, April 24, 2013
RISHABAVATHAR - MAHAVISHNU'S 9th AVATHAR
இன்று மஹாவீர் ஜயந்தி. மஹாவீர் ஜன்ம கல்யாண் என்றும் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் சுக்லபக்ஷ பதிமூன்றாம் நாள் கடைசி தீர்த்தங்கர்ரராக மஹாவீரர் ஜனனம்.
இவரைப்பற்றிய ஒரு தொகுப்பு
ஹிந்து தர்ம வழக்கப்படி
எந்த ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கும் போதும்
ஸங்கல்பத்துடன் துடங்குவோம். இந்த ஸங்கல்பத்தில் வரும் பல சொற்களை ஆராய்ந்தால் அதன் பின்னணி, கீழ் சொல்லப்படும் வ்ருத்தாந்தத்திற்கு ஒத்துவருவது தெரியும். ஸ்ரீமன் நாரயணனின் ரிஷபாவதாரத்தை ஆராய்ந்தால் ஜைன மதம் எவ்வாறு ஸ்தாபனம் ஆயிற்று என்ற பல சுவையான செய்திகள் நமக்குக் கிடைக்கும்.
நம்மில் பலர் அறிந்தது மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் பத்து என்று. ஆதி புருஷ அவதாரம் தொடங்கி கல்கி முடிவாக அவர் எடுத்தது இருபத்து நான்கு அவதாரங்கள். அதில் ரிஷபாவதாரம் ஒன்பதாவது அவதாரமாச் சொல்லுவர். நாபி என்ற அரசனுக்கும் மேருதேவிக்கும் ஸ்ரீமந் நாரயணன் “ரிஷபன்
”
என்ற நாமத்துடன் அவதரித்ததாக ஸ்ரீமத்பாகவத புராணம் கூறுகின்றது.
ஐந்தாவது ஸ்கந்ததில் பாகவத புராணத்தைச் சொல்லும்போது, ஸ்வாயம்புவ மனு தொடங்கி ப்ரியவ்ரதன் வழியாக பத்து பிள்ளகள்
ஜனனம்.
அதில் கவி, மாவீரன், சவனன் என்ற மூவர் பகவானை த்யானிக்க சந்நியாசிகளாய் மாறினர். மற்றய ஏழு புதல்வர்களுக்கு ஏழு த்வீபங்களில் அரசர்களாய் பட்டாபிஷேகம் செய்வித்து ராஜ்யத்தை மகன்களிடம் ஒப்படைத்து சந்யாஸ்ரமத்தை மேற்கொண்டான். ஜம்பூத்வீபத்தை ஆண்ட ஆக்னீதரன் பூர்வசித்தி என்ற அப்ஸரஸ் ஸ்த்ரீயை மணந்தான். பூர்வசித்திக்கு ஒன்பது மகன்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவனான நாபி மேருதேவியை மணந்து “ரிஷபன்
”
என்ற மகவைப் பெற்றான். நாராயணரின் அம்சமான் ரிஷபன் வெகுநாட்கள் ராஜ்ய பரிபாலனம் செய்து பின்பு, தனது முதல் மகனான பரதனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து திகம்பரனாகக் காட்டில் ஸ்ஞ்சரித்து காட்டுத் தீயில் ப்ரவேசித்து மறைந்தார்.
ரிஷப பகவான் நல்ல நல்ல உபதேசங்களை செய்து சஜ்ஜனங்களை முக்தி பெரும்படி செய்து பரந்தாமத்திற்குச் சென்றார். அவருடைய கடைசி காலத்தின் “அவதூத
”
க்ரியைகளப் பார்த்து “அர்ஹன்
”
என்னும் பெயருடைய அரசன் “அர்ஹத
”
என்ற ஒரு ஸாஸ்திரத்தை இயற்றினான். அதுவே “ஜைன ஸாஸ்திரம்
”
என்று ப்ரசித்தி
ஆயிற்று.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment