இன்று கந்த ஷஷ்டி. ஐப்பசி மாதத்தில் சுக்ல பக்ஷ ஷஷ்டி அன்று முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நாள். ஆறு படை வீட்டில் ஒன்றான திருசெந்தூர் இன்று விழாக் கோலம் பூணும் நாள்.
எனது தந்தையார் திரு ஸ்ரீனிவாச ராகவன், ராகஸ்ரீ என்ற முத்திரையில் ஐநூருக்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்து அதற்கு மெட்டு அமைத்துள்ளார். 1958ம் ஆண்டு நடந்த ஆறுபடை யாத்திரையில், திரு.திருப்புகழ் மணி, திரு ஆதிசேஷ ஐயர், திருமதி ஆண்டவன் பிச்சை, பித்துக்குளி முருகதாஸ் இவர்கள் முன்னிலையில் முருகக் கடவுளை மனது உருகி பல பாடல்களைப புனைந்து எனது தமக்கை திருமதி பூமா, எனது அண்ணன் திரு. திருவையாறு க்ருஷ்ணன் இவர்களால் பாடி அரங்கேற்றினார். அவற்றில் ஒன்றினை இன்று இசைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
No comments:
Post a Comment