Thursday, November 30, 2017

VRUCHCHIGA MAASA - NARASIMHA MAHATMIYUM (கார்த்திகை மாதத்தில் லக்ஷ்மீ நரசிம்மனைத் துதிப்போம்

Image result for lord lakshminarasimha
கார்த்திகை மாதம் என்றாலே பகவான் நரசிம்மன் என்பர். இந்த மாதத்தில் அவர் கண் திறந்து பக்தர்களை அருளுவதாக ஒரு ஐதீகம். 
பகவான் ஸ்ரீமத்நாராயணன் பக்தனுக்காக கூப்பிட்டவுடன் வந்து அருளிய அவதாரங்களில் சிறந்தது நரசிம்ம அவதாரம். ப்ரஹ்லாதன் கூப்பிட்டு தவறான ஒரு தூணில் ஹிரண்யகசிபு அடித்து உடைத்து விடக்கூடாது என்பதால், அன்று அந்த மாளிகையில் உள்ள எல்லா தூண்களிலும் நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்காக அருள தயார் நிலையில் இருந்தாகச் சொல்லுவர். 


ராமன் சீதையைத் தேடிச் செல்லும் பொழுது, அஹோபிலம் வழியாகச் சென்று நரசிம்மனை வழிபட்டதாகச் சொல்வர். அதனால் உலகிற்கு கிடைத்தது நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்திரம். க்ருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரனுக்கு வனவாசத்தின் போது, அஹோபில நரசிம்மனின் மஹத்வத்தைச் சொல்லும் பொழுது, இந்த ஸ்தோத்திரத்தை உலகுக்கு அருளினார்.
இன்று எங்களது தகப்பனார் ஸ்ரீனிவாச ராகவனின் ஆராதனை நாள். அவர் எல்லா மூர்த்திகளையும், வைணவ சைவ பத்ததிகளையும் ஆராதித்தவர். நாம சங்கீர்த்தனத்தில் இச்சையுடையவர்கள், அதன் மூலம் பகவானை அடையும் சுலப வழியாக நினைப்பவர்கள், மூன்று சித்தாந்தங்களான த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத வழிபாட்டு மூர்த்திகளையும் ஆராதிப்பர். எங்களது தகப்பனார் அதன் வழியாக எல்லா ஆராதன மூர்த்திகளையும் ஆராதித்த பாடல்களின் தொகுப்பை, மாலையாக தொடுத்து அர்ப்பணித்தார்.  
ஆதிசேஷய்யருடன் சேர்ந்து முருகனை நினைந்து உருகி பல பாடல்களை இயற்றினார். ஆண்டவன் பிச்சையுடன் ஆறுபடை யாத்திரையில் கிடைத்த ஒரு தொடர்பால் அம்பிகை, ஈஸ்வரன் வழிபாட்டில் திளைத்து பல பாடல்களை தந்தார். நாராயண பட்டத்ரியின் நாராயணீயத்தை தினமும் பாராயணம் செய்து, அதன் தமிழாக்கத்தை பாடல்களாக அளித்தார்.
திருவல்லிக்கேணி தெற்கு மாடவீதி ராகவாச்சாரி அவர்களின் பஜனையில் கலந்து கொண்டு, திருவல்லிக்கேணி யோக நரசிம்மரை மையமாகக் கொண்டு, சன்னதியிலே எங்களது தந்தை "ராகஸ்ரீ" என்ற ஸ்ரீநிவாசராகவனால் இயற்றப் பட்ட இந்தப் பாடல், எனது தமக்கை ஸ்ரீமதி பூமா, எனது தமயனார் திரு க்ருஷ்ணன் இருவரால் சேர்ந்து 1956ல் மார்கழி மாதத்தில் யோக நரசிம்மர் சன்னதியில் அரங்கேற்றப்பட்டது.


Monday, November 20, 2017

Sundarakandam


सुंदरे सुंदरो रामो सुंदरे सुंदर: कपि: |

सुंदरे सुंदरी सीता सुंदरे किं न सुंदरम् ||
------------------------------------------------
சுந்தர காண்டத்தில் சீதையை தேடும் பொருட்டு பரத கண்டத்தின் தெற்கு பக்கம் அங்கதன் தலைமையில் சென்ற வானரக் கூட்டம், மகேந்திரகிரி மலையில் தங்கியிருக்கையில், அங்கிருந்த வயது முதிர்ந்த கழுகரசன் சம்பாதியின் அறிவுரையின் படி, அனுமான் வானில் பறந்து, கடலைக் கடந்து இலங்கை சென்றான்.
இலங்கையின் அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை, அனுமார் சிறு குரங்கு வடிவில் சந்தித்து, இராமரின் கணையாழி மோதிரத்தை சீதையிடம் கொடுத்து, தன்னை இராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சீதையும் தனது நெற்றிச் சூடாமணி நகையை, அனுமாரிடம் கொடுத்து, இராமர் ஒரு மாதத்திற்குள் இராவணன் மீது போர் தொடுத்து தன்னை விடுவிக்க வேண்டிக் கொள்கிறாள்.
பின்னர் அரக்கர்களிடம் வேண்டுமென்று சிக்கிக் கொண்ட அனுமாரின் வாலில் தீ வைக்கப்பட்டது. அனுமரும் வாலில் வைக்கப்பட்ட தீயுடன் இலங்கை நகரைச் சுற்றி வந்து, நகரின் பெரும்பாலான பகுதிகளை எரித்தார். பின்னர் அனுமாரைப் பிடிக்க வந்த சம்புமாலி , பஞ்ச சேனாபதிகள் , மற்றும் இராவணன் மகன் அட்சயகுமாரன் ஆகியோர் அனுமரால் கொல்லப்பட்டனர். பின்னர் கண்டேன் சீதையை எனக் கூறிய படி, இராமரிடம் சீதை கொடுத்த சூடாமணியை அனுமார் கொடுத்ததுடன், சீதையின் செய்தியையும் கூறினார்.

சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும். நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

Wednesday, November 8, 2017

Ramanamame Jeevanamu

ராம நாம மந்திரத்தின் ஏற்றத்தை உலகுக்கு தெரியச் செய்த நாரதரின் கலகத்தை நாம் எல்லோரும் அறிவோம். காசி மன்னனை பகடைக்காயாக ஆக்கி, ராம ஹனுமானின் போரைத் துவக்கி, ராம நாம ஸித்தாந்தை உலகு அறியச் செய்தார் அன்று.
பாபனாசம் சிவனின் க்ருதியை நாம் மனமுருகப் பாடினால் ஜகத்குரு பகவன்நாம போதேந்திர ஸ்வாமிகளின் காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் நம் கண்முன் ஒளிக்கும்.
ராம நாம அம்ருத பானமே நாவுடையோர் உயர் ஜீவனமே
உரைக்க உரைக்க உடல் எல்லாம் இனிக்குமே
ஊமையல்லாவதர்க்கும் எளிது -ஸ்ரீ
(ஊமையை உரைக்கவைத்த ராம நாம் என்று எழுதியிருந்தால் அது மிகையாகாது. போதேந்திர ஸ்வாமிகளின் சீடரிலிருந்து அறியலாம்.)
எட்டு எழுத்திற்கும் உயர் ஐந்தெழுத்திற்கும் – இவ
இரண்டெழுத்தே உயிராகும் -இத்
தாரக மந்திரம் ஈசன் காசிபதியில்
உபதேசம் செய்த வைபவம் கொண்ட அதிமதுர

                        19ம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு புத்தகத்தின் நகலை இங்கே தந்துள்ளேன். “திருநெய்தானம் நரசிம்ம பாகவதரால்” தொகுக்கப்பட்ட இந்த புத்தகம், காகிதத் துகள்களிருந்து புனருத்தாருணம் செய்யப்பட்டது.


போதேந்திர சரஸ்வதி (Bodhendra Saraswathi, 1610-1692) தமிழ்நாடு மாநிலத்தின், காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் 60வது பீடாதிபதியாவர். 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் விதேகமுக்தி அடைந்தவர். சதாசிவ பிரமேந்திரர் மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தவர்.
போதேந்திர சரசுவதி, கேசவபாண்டுரங்க யோகி - சுகுணா இணையருக்கு 1610இல் காஞ்சிபுரத்தில் புருசோத்தமன் எனும் இயற்பெயருடன் பிறந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் 59வது மடாதிபதியான விஸ்வகேந்திர சரசுவதி சுவாமிகள், மெய்யறிவு நிரம்பிய புருசோத்தமனின் திறமையைப் பாராட்டி, சங்கரமடத்தின் இளைய மடாதிபதியாக, போதேந்திர சரசுவதி என்ற புதிய பெயர் சூட்டி நியமித்தார். ஆத்மபோதர் எனும் குருவால் பயிற்றுவிக்கப்பட்ட போதேந்திர சரசுவதி சுவாமிகள், இளம் வயதிலே சுருதி மற்றும் ஸ்மிருதி ஆகிய இந்து சமய வேத சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றார். நாள்தோறும் ஒரு இலட்சம் இராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பர்.
போதேந்திர சரசுவதி சுவாமிகள், தனது முதுமைக் காலத்தில் காவேரி ஆற்றாங்கரையில் அமைந்த தஞ்சாவூர் பகுதியின் கோவிந்தபுரம் எனும் கிராமத்தில் வாழ்ந்தார். இக்கிராமத்திலேயே சமாதி அடைய முடிவெடுத்தார்.1692ஆம் ஆண்டு புராட்டாசி மாதம் போதேந்திர சரசுவதி சுவாமிகள் யோக நிலையில் அமர்ந்து சீவசமாதியில் இருந்தார்.1962ஆம் ஆண்டில் முழு நிலவு நாளான்று விதேக முக்தி அடைந்தார். போதேந்திர சரசுவதி சுவாமிகளின் சமாதியை காஞ்சி சங்கர மடத்தினர் பராமரிக்கிறார்கள்.
(கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது)
ஸ்ரீ காமகோடி பீடாதிபர்களான விஸ்வாதிகேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் திரு.புருஷோத்தமனை போதேந்திர ஸரஸ்வதியென்று பெயரிட்டு மடத்திற்கு 60வது இளவரசாக்கி மந்திர உபதேசம் செய்தார். அவரது சொல்படி லக்ஷ்மீதரக்கவியின் “ஸ்ரீபகவந்நாம கௌமுதி” என்ற அறிய க்ரந்தத்தை இவ்வுலகிற்கு அளித்த அந்த வ்ருத்தாந்தத்தை நாம் அறியலாம். காசியாத்திரைக்குச் சென்ற ஒரு ப்ராமண தம்பதி, ஒரு ம்லேச்சனிடம் தனது மனைவியை பறிகொடுத்து, பின்பு லக்ஷ்மீதரக்கவியின் மகன் சொல்படி, ராம நாமத்தை உரைத்து மனைவியையும் அதனால உயர்ந்த பதவியையும் பெற்ற அந்த தம்பதியை கண்ட போதேந்திர ஸ்வாமிகள், ஒரே இரவில் “ஸ்ரீபகவந்நாம கௌமுதி” க்ரந்தத்தை படித்து மனதில் வாங்கிக் கொண்டு, அந்த நூலை நமக்கு அளித்துள்ளார். ஊமையை ராம நாமத்தின் மூலமாக பேசவைத்த போதேந்திர ஸ்வாமிகளின் அறிய செயலை நாம் அறியாலாம். மூன்று முறை உறைக்கச் சொன்ன மகனிடம், லக்ஷ்மீதரக்கவியின் மனைவி, ராம நாமத்தை ஒரு தரம் உறைத்தாலே உன்னத பதவியை அடையாலாம் என்றார்.
Click here to view the book / download Bagwan Nama Kaumudhi
அப்படிப்பட்ட அந்த ராம த்யானத்தை பத்ராசல ராமதாஸர் எவ்வாறு அனுபவித்தார் என்பதை உங்களுடன் பாடி மகிழ்கிறேன்.