Thursday, November 30, 2017

VRUCHCHIGA MAASA - NARASIMHA MAHATMIYUM (கார்த்திகை மாதத்தில் லக்ஷ்மீ நரசிம்மனைத் துதிப்போம்

Image result for lord lakshminarasimha
கார்த்திகை மாதம் என்றாலே பகவான் நரசிம்மன் என்பர். இந்த மாதத்தில் அவர் கண் திறந்து பக்தர்களை அருளுவதாக ஒரு ஐதீகம். 
பகவான் ஸ்ரீமத்நாராயணன் பக்தனுக்காக கூப்பிட்டவுடன் வந்து அருளிய அவதாரங்களில் சிறந்தது நரசிம்ம அவதாரம். ப்ரஹ்லாதன் கூப்பிட்டு தவறான ஒரு தூணில் ஹிரண்யகசிபு அடித்து உடைத்து விடக்கூடாது என்பதால், அன்று அந்த மாளிகையில் உள்ள எல்லா தூண்களிலும் நரசிம்மர் ப்ரஹ்லாதனுக்காக அருள தயார் நிலையில் இருந்தாகச் சொல்லுவர். 


ராமன் சீதையைத் தேடிச் செல்லும் பொழுது, அஹோபிலம் வழியாகச் சென்று நரசிம்மனை வழிபட்டதாகச் சொல்வர். அதனால் உலகிற்கு கிடைத்தது நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்திரம். க்ருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரனுக்கு வனவாசத்தின் போது, அஹோபில நரசிம்மனின் மஹத்வத்தைச் சொல்லும் பொழுது, இந்த ஸ்தோத்திரத்தை உலகுக்கு அருளினார்.
இன்று எங்களது தகப்பனார் ஸ்ரீனிவாச ராகவனின் ஆராதனை நாள். அவர் எல்லா மூர்த்திகளையும், வைணவ சைவ பத்ததிகளையும் ஆராதித்தவர். நாம சங்கீர்த்தனத்தில் இச்சையுடையவர்கள், அதன் மூலம் பகவானை அடையும் சுலப வழியாக நினைப்பவர்கள், மூன்று சித்தாந்தங்களான த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத வழிபாட்டு மூர்த்திகளையும் ஆராதிப்பர். எங்களது தகப்பனார் அதன் வழியாக எல்லா ஆராதன மூர்த்திகளையும் ஆராதித்த பாடல்களின் தொகுப்பை, மாலையாக தொடுத்து அர்ப்பணித்தார்.  
ஆதிசேஷய்யருடன் சேர்ந்து முருகனை நினைந்து உருகி பல பாடல்களை இயற்றினார். ஆண்டவன் பிச்சையுடன் ஆறுபடை யாத்திரையில் கிடைத்த ஒரு தொடர்பால் அம்பிகை, ஈஸ்வரன் வழிபாட்டில் திளைத்து பல பாடல்களை தந்தார். நாராயண பட்டத்ரியின் நாராயணீயத்தை தினமும் பாராயணம் செய்து, அதன் தமிழாக்கத்தை பாடல்களாக அளித்தார்.
திருவல்லிக்கேணி தெற்கு மாடவீதி ராகவாச்சாரி அவர்களின் பஜனையில் கலந்து கொண்டு, திருவல்லிக்கேணி யோக நரசிம்மரை மையமாகக் கொண்டு, சன்னதியிலே எங்களது தந்தை "ராகஸ்ரீ" என்ற ஸ்ரீநிவாசராகவனால் இயற்றப் பட்ட இந்தப் பாடல், எனது தமக்கை ஸ்ரீமதி பூமா, எனது தமயனார் திரு க்ருஷ்ணன் இருவரால் சேர்ந்து 1956ல் மார்கழி மாதத்தில் யோக நரசிம்மர் சன்னதியில் அரங்கேற்றப்பட்டது.


No comments:

Post a Comment