Wednesday, April 14, 2010

விஷு புண்யகாலத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Dear All
I am thankful to all who view my blog and giving me encouragement for writing this blog.This is my 100th post and coincides with the Tamil New Year. I  pray Almighty to shower all, happiness and a healthy-wealthy time.
Chingan


Rhymes are re-written

I enjoyed this forward sent by one of my relatives.

Tuesday, April 13, 2010

தாமோதரனும் தாம்பக்கயிறும்

மஹா ஸ்வாமிகள் காஞ்சி பரமாச்சார்யாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சிறு சிறு சொற்பொழிவுகள் மூலம் நமக்கு பல அறிவியல் மற்றும் ஆன்மீக உண்மைகளையும் மிகவும் சுலபமாக புரியும் விதத்தில் சொல்லுவார். அந்த மஹா சமுத்திரத்திலிருந்து ஒரு துளியை அனுபவிக்கலாம் இங்கே.
 கயிறு என்றால் தெரியும். “தாம்பக் கயிறு என்று எப்படி வந்தது” ஒரு சிறு பையன் கேட்டான். “அது அப்படித் தான் சொல்லவேண்டும்” என்று ஒரு சமயோஜிதமான பதில்.
தாமோதரன் என்றால், கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்று பொருள். தாமம் என்றால் கயிறு.
சில சமயம் நாம் “சூட் கேஸ் பொட்டி”, “கேட்வாசல்” , “நடுசென்டர்” என்று அடுக்கடுக்காக சொல்வோம். அதேபோல் தாமம் அல்லது கயிற்றால் கட்டுண்ட கண்ணனை, தாமோதரனை கயிற்றால் கட்டினார்கள் என்பர். அதுவே தாமக்கயிறு தாம்பக்கயிறு ஆயிற்று.

Monday, April 12, 2010

cellular Phones

Now all communications are transparent to everyone even the so called instrument. This Cellular Phone is yet to catch the buyer’s market.  While browsing the net I updated myself with these interesting information regarding cellular Phone technology / Mobile Phone Technology. We all may be knowing about the generation of Cellular Phones but these are all interesting facts.

ü  Analog Cellular Telephony (1G)
ü  Digital Mobile Communication (2G)
ü  Wideband Mobile Communication (3G)
ü  Broadband Fourth Generation (4G)

The first commercially automated cellular network (the 1G Generation) was launched in Japan by NTT in 1979. The initial launch network covered the full metropolitan area of Tokyo's over 20 million inhabitants with a cellular network of 23 base stations. Within five years, the NTT network had been expanded to cover the whole population of Japan and became the first nation-wide 2G network.

The first "modern" network technology on digital 2G (second generation) cellular technology was launched by Radiolinja in 1991 in Finland on the GSM standard which also marked the introduction of competition in mobile telecoms when Radiolinja challenged incumbent Telecom Finland who ran a 1G NMT network.

In 2001 the first commercial launch of 3G (Third Generation) was again in Japan by NTT DoCoMo on the WCDMA standard. The standard 2G CDMA networks became 3G compliant. One of the newest 3G technologies to be implemented is High-Speed Downlink Packet Access (HSDPA).
The recently released 4th generation, also known as Beyond 3G, aims to provide Broadband Wireless Access with nominal data rates of 100 Mbit/s to fast moving devices, and 1 Gbit/s to stationary devices.

Thursday, April 8, 2010

பாதுகையின் மாஹாத்மியம்

தேஸிகரின் ஒரு அறிய படைப்பான ‘பாதுகா ஸஹஸ்ரத்தில்” கண்டெடுத்த சில அறிய முத்துக்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆதரீக்ருதோபி மஹதா
தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு :
அலபத ஸமேய ராமாத்
பாதாக்ராந்தாபி  பாதுகா ராஜ்யம்
ஒரு பெரியவருடன் இருக்கையில் ஒருவருக்கு என்ன அவமானம் நேர்ந்தாலும் அதைப் ப்ரீதியுடன் ஏற்றுக்கொண்டு இருக்கையில் என்றைக்காவது ஒரு விசேஷ சௌக்கியம் கிடைக்கும். திருமாலின் உறைவிடமான வைகுண்டத்தில் சத்ரம் சாமரம் பாதுகையை எள்ளி நகையாடியது. அதன் பரிஹாரமாக பரதனும் சத்ருக்னனும் அந்த பாதுகைக்கு பதினான்கு வருடங்கள் பூஜை செய்தார்கள்
நிஸ்ஸேஷமம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத்
ஸப்தார்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ
வக்தா ஸஹஸ்ரவதந: புருஷ ஸ்வயம் சேத்
லிக்யேத ரங்கபதிபாதுகயோ: ப்ரபாவ:
பாதுகையின் பெருமைக்கு அளவில்லை என்பதை இந்த ஸ்லோகம மூலம் அறியலாம். பாதுகையின் பெருமையை எழுதுவதென்றால் ஆகாயமெல்லாம் கடிதமாக வேண்டும். எல்லா ஸமுத்ரங்களும் மசியாக ஆகவேண்டும். ஸஹஸ்ரஸீர்ஷா என்று புருஷஸுக்தத்தில் சொல்லப்பட்ட பெருமாள் தான் சொல்லி எழுத வேண்டும். அப்படியிருந்தால் பாதுகையின் மஹிமையை ஏதோ கொஞ்சம் எழுதலாம் என்பதே அதன் அர்த்தம்  

Wednesday, April 7, 2010

Silk Saree - $100,000

Chennai Silks, a textile unit has come up with one of its kind and it is seeking an unmistakable entry into the Guinness Book of World Records for being the most unique and expensive saree. The exceptionally stunning saree is meticulously woven with 12 precious stones and metals to depict 11 of Raja Ravi Verma’s popular paintings. Explicitly projected is ‘Lady Musicians’, one of the painter’s very famous works that displays women belonging to diverse cultural backgrounds. Already in the Limca Book of Records, this 40 lakh saree will be the first silk saree that required the use of 7,440 jacquard hooks and 66,794 cards during the weaving process. Moreover, a group of consummate workers took nearly 4,680 hours.

Sunday, April 4, 2010

திருமூலரும் பதஞ்சலியும்



பதஞ்சலி என்று படித்தாலே நம் சிந்தனைக்கு வருவது யோகா ஒன்றே. தமிழ் சைவ சித்தாந்த நூல்களைப் புரட்டினால் சில சுவையான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.
சுமாராக பத்து ஆண்டுகள் கிறிஸ்து பிறப்பதற்கு முன் உள்ள ஏடுகளைப் புரட்டினால் திருமூலர் எழுதிய திருமந்திரம் நமக்குத் தரும் ஒரு செய்தி
நந்தி அருள் பெற்ற நாதரை நாடுவோம்
நந்திகள் நால்வர் சிவ யோக மாமுனி
அன்று தொழுத பதஞ்சலி வ்யாக்ரமர்
என்றிவர் என்னோடு எண்மருமாமே
நந்தியின் அருளால் அவரது நாதனாம் சிவனின் பாத கமலத்தைப் பெறுவோம். ஸநகர், ஸநந்தனர், ஸநத்சுஜடர், ஸநத்குமாரர் என்ற நால்வருடன் சிவ யோக மாமுனி, பதஞ்சலி, வ்யாக்ரம்பரதர், திருமூலர் சேர எண்மரானார்.
பழைய காளி கௌஸ்துவம் சொல்லும் அறிய செய்தி “தில்லையிலே சிவனும் காளியும் தங்களது திறனைக் காண்பிக்கும் போட்டியிலே நூற்றி எட்டு கரணங்களை செய்து காண்பிக்கையில் பதஞ்சலியும் வ்யாக்ராமபாதரும் அங்கு பார்வையாளராக இருந்து நமக்கு “நாட்டிய யோகா” என்ற கலையினை நமக்கு வழங்கியுள்ளார்கள். அதில் பல நாட்டியத்திற்கும் சில உடல் பயிற்சிக்கும் உதவுவதாக உள்ளது.
-       மின் வலையில் தேடிய அறிய பொக்கிஷம்