Thursday, April 8, 2010

பாதுகையின் மாஹாத்மியம்

தேஸிகரின் ஒரு அறிய படைப்பான ‘பாதுகா ஸஹஸ்ரத்தில் கண்டெடுத்த சில அறிய முத்துக்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆதரீக்ருதோபி மஹதா
தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு :
அலபத ஸமேய ராமாத்
பாதாக்ராந்தாபி  பாதுகா ராஜ்யம்
ஒரு பெரியவருடன் இருக்கையில் ஒருவருக்கு என்ன அவமானம் நேர்ந்தாலும் அதைப் ப்ரீதியுடன் ஏற்றுக்கொண்டு இருக்கையில் என்றைக்காவது ஒரு விசேஷ சௌக்கியம் கிடைக்கும். திருமாலின் உறைவிடமான வைகுண்டத்தில் சத்ரம் சாமரம் பாதுகையை எள்ளி நகையாடியது. அதன் பரிஹாரமாக பரதனும் சத்ருக்னனும் அந்த பாதுகைக்கு பதினான்கு வருடங்கள் பூஜை செய்தார்கள்
நிஸ்ஸேஷமம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத்
ஸப்தார்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ
வக்தா ஸஹஸ்ரவதந: புருஷ ஸ்வயம் சேத்
லிக்யேத ரங்கபதிபாதுகயோ: ப்ரபாவ:
பாதுகையின் பெருமைக்கு அளவில்லை என்பதை இந்த ஸ்லோகம மூலம் அறியலாம். பாதுகையின் பெருமையை எழுதுவதென்றால் ஆகாயமெல்லாம் கடிதமாக வேண்டும். எல்லா ஸமுத்ரங்களும் மசியாக ஆகவேண்டும். ஸஹஸ்ரஸீர்ஷா என்று புருஷஸுக்தத்தில் சொல்லப்பட்ட பெருமாள் தான் சொல்லி எழுத வேண்டும். அப்படியிருந்தால் பாதுகையின் மஹிமையை ஏதோ கொஞ்சம் எழுதலாம் என்பதே அதன் அர்த்தம்  

1 comment:

  1. பாதுகையே துணையாகும் எந்நாளும்.

    ReplyDelete