முன்னோரு காலத்தில் வட இந்தியாவில், கல்வியில் சிறந்த ஆனால் “வித்யா கர்வம் பிடித்த பண்டிதர் ஒருவர், தன்னிடம் விவாதிக்க வரும் மற்ற பண்டிதர்களை தோல்வியுறச் செய்து, ஏளனம் செய்து விஷம் அளித்து துன்புறுத்தி வந்தார். அவர் ஒரு முறை தென்னாட்டிற்கு வந்த போது கும்பகோணத்தில் வாழ்ந்த ஸ்ரீ ஸ்ரீ விஜேந்திர ஸ்வாமிகள் பெருமைகளை கேள்வியுற்று, அவருடன் வாதாடி வெல்ல விழைந்தார். விவாதத்தில் ஸ்ரீ ஸ்ரீ விஜேந்திர ஸ்வாமிகள் வென்றார். அவர் வெற்றி பெற்றாலும் கூட, அவர் மகிமையை மேலும் நிருபிக்க வேண்டி, வட இந்திய பண்டிதர் விஷத்தைப் பருகச் சொன்னார். ஸ்வாமிகள் தன்னிடமுள்ள தீர்த்தத்தை அதில் கலந்து அருந்தினார். ஸ்வாமிகள் தான் இயற்றிய ஸ்ரீ ஷோடஸபாஹு ந்ருசிம்ஹாஷ்டகத்தை சொல்லித் துதித்தார். உடனே ஸ்ரீ நரசிம்ஹர் பதினாறு புஜங்களுடன் தோன்றி விஷத்தை முறித்து ஸ்வாமிகளைக் காப்பாற்றினார்.
பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயண ஐயங்கார் அவர்கள் 23rd April 2001 அன்று தேரழுந்தூர் சென்ற பொது அவருடன் சென்ற திரு பிரசாத் அவர்களை இந்த ஸ்லோகத்தினைச் சொல்லச்சொன்னார். அங்குள்ள நரசிம்ஹரை தரிசித்து அவர் துதித்த ஸ்லோகத்தையும் நாமும் சொல்லுவோம்
No comments:
Post a Comment