1 அரிசியின் விலை கிலோ 44 ரூபாய்.
ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2 பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய்.
ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
3 வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம்.
ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
4 பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை.
5 ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.
அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
6 நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
7 நாம் குடிக்கும் லெமன் ஜூஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.
பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எலுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
8 மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு,சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது.
சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9 கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை
அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
10 பிரபலமாக வேண்டும் என்ற அபிலாக்ஷைகள் அனைவருக்கும் உண்டு.
ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை.
11 குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம்.
ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!
12 அனைத்திற்கும் சேவைவரி (Service Tax) உண்டு.
மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!
இந்த நிலை மாறுவது எப்போது?
தூங்கும் பாரதமாதாவைத்தான் எழுப்பிக் கேட்க வேண்டும்!
I loved this post!
ReplyDeleteIt is very sad that our country is in such a pathetic state! Even if someone determines to make a change, the rest of the world pulls him down by his leg, and so no one cares!
எது அவசியம் எது அவசியம் இல்லை என்பதும் சொல்லை விட செயலே முக்கியம் என்பதும் மனிதர்களால் உணரப்படாதவரை மேற்சொன்ன நிலை மாறப்போவது இல்லை. பாரத மாதா என்ன செய்வாள். அவள் பிள்ளைகளின் மனங்கள்
ReplyDeleteகற்களாக மாறிவிட்டன . பாரதமாதா மௌனக் கண்ணீர் வடித்தாலும் ஆச்சரியமில்லை.