Monday, August 2, 2010

கீதை புகட்டும் பாடங்கள்

கீதையை நன்கு படித்து கரை கண்ட ஒரு விற்பன்னர், கீதையில் உள்ள ஸ்லோகங்களுக்கு பதவுரையும், பொழிப்புரையும் பிரசங்கம் செய்து வந்தார். முதல் நாளில் அரங்கத்தில் மக்கள் திரள் நிரம்பி வழிந்தது. அடுத்த நாள் பாதி அரங்கத்தில் மக்கள் திரள் இருந்தனர். அதில் பாதி மோனநிலையில் இருந்தனர். மூன்றாவது நாள் அங்கும் இங்குமாக பிரவசனம் கேட்டவாரும், அதில் சிலர் துயின்ற நிலையிலும் இருந்தனர். இவ்வாறாக பத்து நாட்களில் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடைசி நாளன்று மூவர் இருந்தனர். ஒருவர் அரங்கின் உரிமையாளர். மற்றொருவர் அரங்கில் உள்ள பொருள்களுக்கு உரிமையாளர். மூன்றாமவர் படிப்பு அறிவு இல்லாத ஆட்டு இடையன். அவன் கண்ணீர் விட்டு அழுத வண்ணம் இருந்தான். ப்ரவசனம் செய்தவர் அவனது அழுகைக்கு காரணம் அறிய அவனை வினவினார். அவருடைய ப்ரவசனத்தின் அர்த்தம் புரிந்து அனுபவித்து அவன் கண்ணீர சிந்துவதாக நினைத்த அவருக்கு அவன் சொன்ன பதில் பேரிடியாக இருந்தது. “உங்களது சொற்பொழிவு எனக்கு விளங்கவில்லை. ஆனால் நான் மிகவும் பார்த்து வருந்தியது க்ருஷ்ண பகவானைப் பற்றி. இந்த பத்து நாட்களும் பகவான் கிருஷ்ணன் ஒரு கையால் சாட்டையை பற்றிக் கொண்டு கழுத்தை திருப்பியவாரு தேரில் அவர் அருகில் உள்ளவருடன் பேசுகிறாரே. கேட்பவருக்கு புரிந்ததோ புரியவில்லையோ, ஆனால் பகவான் கிருஷ்ணருக்கு கழுத்தை வலிக்காதோ? அதை நினைத்தேன் எனக்கு அழுகை வந்தது என்றான். அவன் சொன்ன சொல் மிகவும் உண்மை. என்னைப் போன்றவர்களுக்கு எத்தனை நாள் கேட்டாலும் கீதையின் பொருள் புத்தியில் ஏறுவதாக தெரியவில்லை. அப்படியிருக்க அவர் கழுத்து வலிக்க நான் ஒரு காரணமாக இருக்கக் கூடாது இல்லையா .
நான் கீதை புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். என் அருகில் இருந்த ஒரு குழந்தை புத்தகத்தின் மேல் கீழ் அட்டையைக் காட்டி விளக்கம் கேட்டாள். பிறகு அவளே அதற்கு விளக்கம் கொடுத்தாள். ஒன்றில் சூரியன் உள்ளான். மற்றொன்றில் சந்திரன் உள்ளான் என்றாள். ஒரு முக்கியமான செய்தியை எனக்கு அவள் அளித்தாள். காலையில் ஆரம்பித்த கீதோபதேசம் மாலை வரை நீடித்ததை எவ்வளவு அறிவு பூர்வமாக எனக்கு உணர்தியுள்ளாள். இன்றைய தலைமுறைக்கு நுண்ணறிவு உள்ளது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

1 comment:

  1. Geetha was taught in RK HOME by ANNA SUBRAMANYA AIYYAR till his death. He was asaint and Kamayogi,a saktha,deeped in advaitha. All the eighteen chapters in a nut shell point and tapper down to Advaitha.The whole creations,manifestations merge in creator.The world wears deceptive appearance. Nothing is without HIM.Everything originate and merge in HIM.That is the finality of human march.

    ReplyDelete