Saturday, August 7, 2010

தீக்ஷிதரின் லலிதா சஹஸ்ரநாமாவளிகள்

நிரஞ்சன் குமார் என்பவரின் ஒரு ப்ளாக் அஞ்சல் ஒன்றை வாசித்தேன். மிகவும் ரசித்தேன்.  


முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளைப் பார்த்தால், பல கீர்த்தனைகளில் - பல்லவி, அனுபல்லவி, சரணம் - எனப் பல இடங்களில் அம்பாளின் லலிதா சஹஸ்ரநாமாவளிகள் இடம் பெறுவதைப் பார்க்கலாம். அவற்றை இங்கே பட்டியலிடலாமா!
பாடல் : (இராகம்) : அம்பாளின் பெயர்
-----------------------------------------
1)
சிவகாமேஸ்வரீம் சிந்தயேஹம்: (கல்யாணி) : சிதக்னிகுண்டஸம்பூதா (சித் எனும் தன்னுள் - அக்னி குண்டத்தில் இருந்து வரும் தீ போல, எப்போதும் எழுந்து கொண்டிருப்பவள் - இதுதான் பாரதி பாடும் அக்னிக்குஞ்சோ!)
2)
மாதங்கி ஸ்ரீராஜராஜேஸ்வரி: (ரமாமனோகரி) : ரணதிங்கிணிமேகலா 
3)
பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) மற்றும் நீலோத்பலாம்பிகாயே (கேதாரகௌளை) மற்றும் காசி விசாலாக்ஷி (கமகக்கிரியா): கலிகல்மஷநாசினி 
4)
காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : சாம்ராஜ்யதாயினி 
5)
பஞ்சாசத்பீடரூபிணி : (தேவகாந்தாரம்) : பஞ்சாசத்பீடரூபிணி
இப்பாடலை திரு.மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
6)
மதுராம்பாயாஸ் தவ தாஸோஹம் : (பேகடா) : மாத்ருகாவர்ணரூபிணி
7)
ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : பாடலிகுசுமப்பிரியை
8)
அவ்யாஜகருணா காமாக்ஷி : (சாலங்கநாடை) : சவ்யாபசவ்யமார்க்கஸ்தாயி
9)
திரிபுரசுந்தரி சங்கரி குருகுஹ ஜனனி: (சாமா) : சாமகானப்பிரியகரி
10)
ஏகாம்பரேஸ்வர நாயகீம் : (சாமா) : வாஞ்சிதார்த்த ப்ரதாயினி
11)
ஸ்ரீமதுராம்பிகையா : (அடணா) : நாமாபாரயணப்பிரியா : (நாமத்தினைப் பாராயணம் பண்ண வேறென்ன வேண்டும்!)
12)
பாலாம்பிகாயை நமஸ்தே வர தாயை : (நாட குறிஞ்சி) : ஸ்ரீ ஹரித்ரான்னரசிகாயை
13)
நீலோத்பலாம்பிகாயே : (கேதாரகௌளை) : மூலமந்திராத்மிகை 
14)
அபயாம்பிகாயை : (யதுகுலகாம்போதி) : குடகுல்பா 
15)
ஸ்ரீமாத சிவவாமாங்கே : (பேகடா) : ஸ்ரீமஹாராக்ச்ஜை
16)
அம்ப நீலாயதாஷி : (நீலாம்பரி) : புவனேஸ்வரி
17)
ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : நடேஸ்வரி
18)
காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : காத்யாயினி
19)
பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) : சுவாசினி
20)
பர்வதராஜகுமாரி : (ஸ்ரீரஞ்சனி) : கௌளினி
~~~~
லலிதா சஹஸ்ரநாமவளியில், அம்பாளை என்னவெல்லாம் பெயர்களில் பாடிப் பரவசம் கொள்கிறோம்! நாமவளியின் தாக்கத்தில் விளைந்த பாடல், அடியேன் புனைந்தது:
எடுப்பு:
எத்தனை பெயர் உனக்கு - அம்பா,
எத்தனை பெயர் உனக்கு!
தொடுப்பு:
பக்தனும் சாக்தனாய் உனைப்பாட - ஓராயிரம்
பெயர் உனக்கே, சக்தியே!
(
எத்தனை பெயர் உனக்கு!)
முடிப்பு:
இரும்பாய் இருந்திட்ட மனத்தையும், அம்பா,
கரும்பு வில்லாய் வளைத்திட்டாய்.
திரையாய் படிந்த வினையெல்லாம்
நுரையாய் பிரிந்திட வழிசெய், சச்சிதானந்தமே!
(
எத்தனை பெயர் உனக்கு!)

No comments:

Post a Comment