"Gov. John Kasich calls police officer 'idiot' for giving him traffic ticket." Wednesday 16th February 2011
ஒரு மாநில முதலமைச்சர் கார் அவசர வண்டி ஒன்றின் மீது மோதுவது போல சென்றது. அங்கிருந்த காவல் அதிகாரி அவரது காரை நிறுத்தி, கோர்ட்டில் ஆஜராகி அபராதத்தொகையினை கட்டுமாறு சம்மன் அனுப்புகிறார். அவரது எரிச்சலை தம கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் வெளிப்படுத்த, அதனை தொலைகாட்சியில் படம் பிடித்து காண்பிப்பதால் அமைச்சருக்கு கண்டனங்கள் வருகிறது. வேறு வழியில்லாமல் அதற்கான பொது மன்னிப்பு கோருகிறார். இது செய்தி. இது நடந்தது அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில்.
நாம் தினமும் பல நிகழ்வுகளைக் காண்கிறோம். பல செய்திகளை அலசுகிறோம். அறிய புகைப்படங்களை அனுபவிக்கின்றோம். கலை பரிமாணங்கள் கொண்ட அறிய சித்திரங்களை ஆவலுடன் காண்கின்றோம். ஆகா இம்மாதிரியான் சித்திரங்களை வரைய முடியவில்லையே அல்லது இம்மாதிரியான புகைப்படங்களை நம்மால் எடுக்க சந்தர்பங்கள் வரவில்லையே என்ற ஓர் ஏக்கம் நம்மை வருடுகிறது. அதே போல் தினமும் நாம் அலசும் ஒரு முக்கிய நிகழ்வுகள். அதனை எழுத்து வடிவத்தில் கொள்வதற்கு பிரயாசைப்படுகிறோம். ஆனால் அவ்வளவு எளிதான செயல் அல்ல.
இதோ ஒரு வார இதழில் நான் சுவைத்த பக்கங்கள். அதன் தலைப்பு ஞானியின் “ஒ பக்கங்கள்”. அவைகளோ “ஒ ஒ பக்கங்கள்”. அவர் பெயரில் ஞானியா அல்லது எழுதும் விதத்தால் ஞானியா? அவர் எழுதிய விதத்தைக் கண்டு நாம் அறிந்த ஞானி அவர். ஒரு வருட காலங்களுக்கு மேலாக கல்கி வார இதழில் வருகின்றது. சிலர் படித்திருக்கலாம். சிலருக்கு அதற்கான ஏது இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்காக இந்த செய்தி.
“சீரழிவுக் கலாசாரத்தைப் பின்பற்றக் கூடியவையாக மாற்றப்படுவது தான் நம்முடைய மோசமான அரசியல். நம் மீது செலுத்தும் பலமான பாதிப்பின் அடையாளம்” - கல்கியின் ஞானி
No comments:
Post a Comment