Monday, March 21, 2011

Thulasi Dass, Surdhass and Akbar


அறிந்த இதிகாச புருஷர்கள் 
அறியாத வ்ருத்தாந்தம்
நாபா ஸ்வாமி மகாராஜ் “பக்தமால் க்ரந்த் என்ற அவர் எழுதிய புத்தகத்தில், பேரரசர் அக்பர் காலத்தில் அவரது அரண்மனையில் நடந்த ஒரு நிகழ்வை நம் கண் முன் நிறுத்துகிறார்.
அக்பர் துளசிதாஸ் மகாராஜிடம் ஒரு அதிசய நிகழ்வினை நடத்திக் காண்பிக்குமாறு பணித்தார். துளசிதாஸ் அதற்கு பணியாததால் அவரை சிறையிலிட்டார். துளசிதாஸ் அனுமனைத் துதிக்க, ஒரு வானரப் பட்டாளம் தில்லி தலைநகரை, மது வனத்தை சுக்ரீவன் சேனை படுத்தியது போல், சின்னா பின்னமாக்கியது. அக்பர் தனது தவறை உணர, துளசிதாஸ் ஹனுமான் சாலிஸா பாடி, தில்லியை  வானரப் பிடியிலிருந்து மீட்டார். துளசீதாஸர் ராமனை உருகிப் பல பாடல்களை இசைத்துள்ளார். இந்தப் பாடல் எல்லோர் மனதையும் உருக்கும் பாடலாகும்.

இந்தப் பாடத்தை அனுபவித்தும், அக்பர் திருந்தவில்லை. மறுபடியும் அவரது மந்திரிகள் துர்போதனையால் ஸுர்தாசை அழைத்து அதிசயம்
நிகழ்த்தச் சொன்னார். ஸுர்தாஸ், துளசி அக்பரைக் காப்பாற்றிய நிகழ்வினை நினைவு படுத்தி எச்சரித்தார். சொல்லியும் கேளாததால், கோகுலத்தை விட்டு தில்லி வந்தார்.
அக்பர் ஸுர்தாசை அதிசயம் நிகழ்த்தச் சொல்லி வற்புறுத்தினார். ஸுர்தாஸ் அதன் பின் விளைவுகளைச் சொல்லி எச்சரித்தார். அக்பர் பிடிவாதமாக ஸுர்தாசை வினவினார்.
அக்பரை அரண்மனை சென்று அவரது மகளின் வலது துடையில் ஒரு மச்சமும், இடது கன்னத்தில் மயில் பீலி போன்ற ஒரு அடையாளமும் உள்ளதா என்று பார்த்துவர அனுப்பினார். குருடனாய் உள்ள ஸுர்தாசுக்கு இது எவ்வாறு தெரியும் என்ற ஐயம் அக்பரை வாட்டியது.
அக்பர் பெண்கள் உள்ள அரண்மனை சென்று தனது பெண்ணிடம் வினவ, அவள் அதிசயப் பட்டாள். ஒரு பிறவிக் குருடனுக்கு எவ்வாறு இது இயலும் என்ற ஐயப்பாடு. ஸுர்தாசை சந்திக்க அக்பரின் அனுமதி பெற்றாள்.
அவர்கள் இருவர் சம்பாஷணை நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும்.
அக்பரின் பெண் – உத்தவ் எப்படி இங்கு வந்தாய்
ஸுர்தாஸ் – லலிதே உனது தந்தை தான் இங்கு அழைத்து அற்புதம் நிகழ்த்தச் சொன்னார் .
அக்பரின் பெண் – எனது அன்பான ஸ்யாமளன் எங்கே?
ஸுர்தாஸ் – இப்பொழுதாவது அவன் ஞாபகம் வந்ததா? இவ்வளவு நாட்கள் அவனது ஞாபகம் இல்லாமல் கடத்திவிட்டாயே !
அக்பரின் பெண் – இவ்வாறு சொன்னதற்காக உன் கன்னத்தில் அறையப் போகிறேன் என்று சொல்லி கன்னத்தில் அறைந்தாள். (பின் அங்கேயே அவள் மாய்ந்ததாக ஒரு செய்தி)
அக்பருக்கு இது ஓர் பேர் இடியாக விளைந்தது. அக்பர் ஸுர்தாஸிடம், இதன் முந்தைய நிகழ்வுகளைக் கேட்டார். ஸுர்தாஸ் ப்ரஜ பூமியில் நடந்த வ்ருத்தாந்தத்தை சொன்னார்.
ஒரு சமயம் நித்ய சகி லலிதா கிருஷ்ணனிடம் கோபித்துக் கொள்ள, உத்தவர் லலிதையிடம் தூது சென்று அவளை சமாதனப் படுத்த முயன்றார். அவள் கோபம தணியாததால், மானிட உலகத்தில் அவதரித்து அல்லல் படுமாறு சபித்தார். லலிதையும் அவரை குருடனாக பிறக்க சபித்தாள். லலிதைக்கு உத்தவரை கண்டவுடன் சாப விமோசனம் என்று விதிக்கப்பட்டது. க்ருஷ்ணரின் லீலைகளைகளை மனித சமுதாயத்திற்கு தெரியப்படுத்துவதற்காக சூர்தாஸ் பிறவி எடுக்க நிகழ்ந்த நிகழ்வு என்பர்.

2 comments:

  1. அக்பர் காலத்தின் நிலைமையையும் நமது முன்னோர்களின் புனிதத்தையும் உயர்வையும் ஒரு சேரப் புரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  2. அதிகம் தெரியாத அற்புதமான செய்திகள்.

    ReplyDelete