Monday, September 5, 2011

Dheena Janavana Dheena Samrakshaka

கர்ணரஞ்ஜனி
காதால் கேட்க ரஞ்ஜகமாக உள்ள ராகம் கர்ணரஞ்சனி.
அதன் பிரதான ஸ்வரப் பிரயோகங்களை வைத்து வடிவமைத்த இந்த ஸாயி நாமாவளி எல்லோராலும் ரசித்து பாடப்பட்டுள்ளது.
அதனை நாமும் பாடி ரசிப்போம்.
தீன ஜனாவன தீன ஸம்ரக்ஷக
ஸனாதன ஸாரதி தேவாதி தேவா
ஆதி ஸனாதன நித்ய நிரஞ்ஜன
ஜகதோத்தாரண ஸாயி நாராயணா
ஜோதி ஸ்வருப பிரேம ஸ்வருப
ப்ரஸாந்தி ஸ்வருப தேவாதி தேவா
இந்த ராகம் பிறந்த கதை
நமது இந்திய நாட்டில் சுதந்திரப் புரட்சி நடந்து கொண்டிருந்த சமயம், ஸங்கீதப் புரட்சி செய்ய 1877 ம் ஆண்டு நவம்பர் திங்கள் 15ம் நாள் முத்தையா பாகவதர் என்ற மஹா மேதை அவதரித்தார். சங்கீத மும்மூர்த்திகளுக்குப் பிறகு நானூறுக்கும் மேற்ப்பட்ட ரத்தினமான கிருதிகளை தந்தார். விஜயசரஸ்வதி, கர்ணரஞ்சனி, புதமநோஹரி, நிரோஷ்டா மற்றும் ஹம்ஸாநந்தி என்ற ஐந்து புதிய ராகங்களைப் படைத்தார். திரு சேஷகோபாலன் அவர்களால் ப்ராபல்யப் படுத்தப்பட்ட வாஞ்சதோனுனாவை அறியாதார் உளரோ?     

No comments:

Post a Comment