அக்ஷய த்ருதீயில் ஒரு நற் செயலை தொடங்கினால் அது நன்மை பயக்கும் என்பதே அதன் உட்கருத்து.
முனிவர்களையும் ப்ராமணர்களையும் துன்புறுத்தி வந்த அந்த நாட்களில் பரசுராமர் அக்ஷய த்ருதீயில் அவதரித்து அவர்களுக்கு நன்மையை அளித்ததாக ஒரு செய்தி உண்டு.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது பகவான் க்ருஷ்ணர் அவர்களுக்கு சூரிய பகவான் அளித்த அக்ஷய பாத்திரத்தை அளித்த நாள் இது.
குசேலர் பகவான் க்ருஷ்ணருக்கு ஒரு பிடி அவலை அளித்து லக்ஷ்மீ கடாக்ஷத்தை அனுபவித்த நாள் என்பர்.
நம்மைச் சார்ந்தவர்கள் எல்லோரும் அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய நாம் ப்ரார்த்தனை செய்தால் நமக்கும் அது பயன் தரும்.