Sunday, April 8, 2012

Became ILL on account of ILLNESS


உடல் / மனது உபாதை, பிறக்கும் போது நம்முடன் பிறந்து, இறக்கும் போது நம்முடன் முடிகிறது. 

எனது குருநாதரிடம் பலர் பலவிதமான் (மனது / உடல்) உபாதைகளுக்கு ஆலோசனை கேட்க வருவார்கள். பலருக்கு தங்களது உடல் உபாதைகளை மிகைப்படுத்திக் கூறி அதற்கான சிகிச்சைப் பற்றி கேட்பார்கள். சிலர் அதனை ஒரு விருப்பமான பொழுது போக்காக செய்வதைக் நம்மால் காணமுடியும். அவ்வாறு கூறினால் தான், பிறரிடமிருந்து அவர்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்ற போக்கு உடையவர்கள். அவர்களுக்கு அவர் கூறும் ஆலோசனை “எப்படி உனது அழுக்கான / கிழிந்த ஆடைகளை களைந்து எறிகிறாயோ, அதைப்போல் ‘நோவு சாத்திக்கொள்ளாமல்’  இரு என்பார். இன்னும் சிலர், மற்றவரது உபாதைகளை கேட்டறிவதை ஒரு விருப்பமான பொழுது போக்காக செய்வர். 

நாமும் பிறரிடம் நமது உபாதைகளைக்கூறி அவர்களது பொருமையை சோதிக்கவேண்டாம். அதே போல் மற்றவர் உபாதைகளை மிகவும் நுணுக்கமாகக் கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தவேண்டாம். 

தங்கள் உடலில் உள்ள உபாதைகள் அந்த உடலுக்கு, தனக்கு அல்ல என்று பல மகான்கள் அதிலிருந்து பிரிந்து வாழ்ந்துள்ளார்கள். நாராயண தீர்த்தர், அப்பய்ய திக்ஷிதர், ரமணர், ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், நாதமுனி நாராயணன் (எனது குருநாதர்), புட்டபர்த்தி ஸாயி என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது.



நாராயண தீர்த்தர் ஒரு சமயம் திருப்பதியில் ஸ்ரீநிவாசனை தரிசிக்கும் போது, பகவான் கோபாலன் சிறு பையன் ரூபத்தில் அவர் முன் வந்து வயிறு முட்டும் வரை வடையும் லட்டும் சாப்பிட, உனக்கு வயிறு வலிக்காத என்று கேட்க, அந்த வயிற்று வலி நாராயண தீர்த்தருக்கே வந்தது. ஆனால் கோபாலனோ, "உன் வயிற்றில் என் கையை வைக்கிறேன்; வலி தீர்ந்து விடும்" என்று கூறிக்கொண்டே மகானை நோக்கி வந்தார். இவ்வாறு தன்னை அணுகியதும், "கிருஷ்ணா! என் வயிற்றில் கை வைக்காதே; வயிற்றுவலி இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். உன்னுடைய அருளுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்; என் தலையின் மேல் உன் கையை வை!" என்று பிரார்த்தித்து வேண்டிக் கொண்டார். கோபாலனும் அருள் புரிந்து மகானின் தலையில் கை வைத்தார். கை வைத்த உடனேயே மறைந்தும் விட்டார். ஆனாலும் வயிற்று வலி அப்படியே நிலைத்து விட்டது. ஆக வயிற்று வலியுடன் வாழ்வைக் கழித்தவர். ஆனால் அந்த உபாதை வேறு, தான் வேறு என்று அநத மகான் இருந்ததாக வ்ருத்தாந்தம்.  

1 comment:

  1. Powerful analysis, great comparisons and a fine message.

    Reminds one of our mythological belief: (bhAgavatam/bhAratam), when Lord Krishna offered a boon to Kunti, she asked for and therefore remained in perpetual misery. She explained the rationale to the perplexed Krishna '.....only then will I be constantly remembering you and calling/crying in search of you..!'.

    This also defines that "Prayers and solicitations are distinct and different"..
    "Pray for nothing and illness or wellness are the result of your janma vAsana"
    ...PeriyavA said it, RamaNa lived it.

    Mama never complained about it, though he lived "that phase" for well over 2 years.

    This is a somber reminder.

    K

    ReplyDelete