கர்நாடக சங்கீதம், பக்தி சங்கீதம், நாம ஸங்கீர்த்தனம் எல்லாம் சென்னையில் அதிகமாக உள்ளது என்று பலரும் நினைக்கலாம். பங்களூரில் புரந்தரரும் எனைய தாஸர் பதங்களாலும் அவர்கள் பகவானை அர்ச்சிக்கிறார்கள்.
ஆந்திர மாநிலத்திற்குச் சென்றால் அன்னமைய்யாவின் சங்கீதம் என்ற கானமழையில் நினைந்து உருகலாம். மகாரஷ்டிர மாநிலத்தில் விட்டலனை அபங்கங்ளாலும், கண்ணனை மீராவின் பாடல்களாலும் ஆடி மகிழ்விக்கிறார்கள்.
வடக்கே சென்றால் துளசீ தாஸரும், ஸூர்தாஸரும், சைதன்யரும் நாம ஸங்கீர்த்தனம் என்ற கானமுதபானத்தை நமக்குத் தருகிறார்கள்.
இந்த YOUTUBE தொகுப்பினை காணுங்கள். அமெரிக்கர்களும் போட்டி போட்டுக்கொண்டு கர்நாடக இசையை எவ்வாறு அமெரிக்கர்களின் வாழ்க்கையில்
பயனுள்ளதாக கொண்டுவரலாம் என்று அரசு ஆணையை பிறப்பிக்கப் போவதாக முடிவு எடுத்துள்ளார்கள்.
நம்மில் பலருக்கு க்ளீவ்லண்டு என்ற பகுதியில் த்யாகராஜர் உத்ஸவங்கள் செய்வதாகவும் கர்நாடக இசையைப் பரப்புவதையும் தொலைக் காட்சி மூலம் கண்டு கேட்டு மகிழ்ந்துள்ளோம். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலிலும் நடக்கிறது. இந்த சேவையை கலிபோர்னியாவில் இருபது வருடங்களுக்கு மேல் திரு. திருவையாறு கிருஷ்ணன் அவர்கள் செய்து வருகிறார்.
இந்த இனிமையான பக்தி சங்கீதத்தின் தொகுப்பினை
பாடல்களைத் தொகுத்து அளித்தவர்
திரு. திருவையாறு க்ருஷ்ணன் அவர்கள்
இன்னும் சில இவரது சங்கீதத் தொகுப்புகளை
கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத் தளத்தில் கண்டு கேட்டு மகிழலாம்.
No comments:
Post a Comment