ரூபம் ஸ ஜக்ருஹே மாத்ஸ்யம்
சாக்ஷுஷோததி ஸம்ப்லவே
நாவ்யாரோப்ய மஹீ மய்யாம்பாத்
வைவஸ்வதம் மனும்
சாக்ஷுஷ மன்வந்தரத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால்
அந்த பகவான் மத்ஸ்ய உருவத்தை எடுத்துக் கொண்டு, பூமி ரூபமான ஓடத்தில் வைவஸ்வத
மனுவை ஏற்றிக் கொண்டு காப்பாற்றினார்.
ஸுராஸுராணாம் உததிம் மத்நதாம்
மந்தராசலம்
தத்ரே கமடரூபேண ப்ருஷ்ட ஏகாதஸே
விபு:
தேவர்களும் அஸுரர்களும் பாற்கடலைக் கடைகின்றவேளையில்
மந்த்ரபர்வதத்தை ஆமை உருவேடுத்து முதுகில் தரித்து பதினோராவது அவதாரமாகப் பகவான்
தோன்றினார்.
தான்வந்த்ரம் தாவதஸமம் த்ரயோதஸம
மேவ ச
அபாயயத்ஸுராநன்யான் மோஹின்யா
மோஹயன் ஸ்த்ரியா
பாற்கடலைக் கடைந்தபொழுது உதித்து எழுந்த பன்னிரண்டாவது
அவதாரம் தன்வந்தரி ரூபம். பின்பு வந்த அம்ருதத்தை தேவா ஸுரர்களுக்கு கொடுப்பதற்காக,
மோஹினி என்ற பெண் உருவத்தால் அஸுரர்களுக்கு மோஹத்தை ஏற்படுத்தி தேவர்களை
அமிருதத்தை குடிக்கச் செய்தது பதிமூன்றாவது அவதாரம்.
சதுர்தஸம் நாரஸிம்ஹம் பிப்ரத்
தைந்யேந்த்ர மூர்ஜிதம்
ததார கரஜைர் வக்ஷஸ்க்யேரகாம்
கடக்ருத் யதா
பதினான்காவது அவதாரத்தில் நரஸிம்ம ஸ்வரூபத்தை
தரித்தவராய் மிகவும் பலம்வாய்ந்த ஹிரண்யகசிபுவை பாய்முடைபவன் கோரையைக் கிழிப்பது
போல் கையில் உண்டான நகங்களால் மார்பைப் பிளந்தார்.
பஞ்சதஸம் வாமனகம்
க்ருத்வாகாதத்வரம் பலே:
பதத்ரயம் யாசமான: ப்ரத்யாதித்ஸூஸ்
த்ரிவிஷ்டபம்
பகவான், ஸ்வர்கத்தை பலியிடத்திலிருந்து ஸ்வீகரிக்க
இச்சை கொண்டவராய், மகாபலியின் யாகசாலையை, வாமனரூபமொடு, பதினைந்தாவது அவதாரமாய்
எடுத்து வந்து, மூன்றடிகளை யாசித்தார்.
த்ரி:ஸப்தக்ருத்வ: குபிதோ
நி:க்ஷத்ராமகரோன் மஹீம்
பதினாறாவது அவதாரத்தில் அரசர்களை ப்ரும்மத்வேஷிகளாகப்
பார்த்தவராய் கோபத்தை அடைந்து இருபத்தோரு தடவை க்ஷத்ரியர்கள் இல்லாததாகச்
செய்தார்.
தத: ஸப்ததஸே ஜாத: ஸத்யவத்யாம்
பராஸராத்
சக்ரே வேததரோ: ஸாகா த்ருஷ்ட்வா
பும்ஸோல்பமேதஸ:
பிறகு பதினேழாவது அவதாரத்தில், ஜனங்களை மந்த புத்தியை
உடையவர்களாய்ப் பார்த்து, பராசரர் ஸத்யவதியிடத்தில் வ்யாசராய் உருவெடுத்து,
வேதமாகிய பெரிய வ்ருக்ஷத்தின் கிளைகளைச் செய்தார். இந்த அவதாரத்தில் வேதவிபாகம்
செய்தார்.
ஏகோநவிம்ஸே விம்ஸதிமே வ்ருஷ்ணிஷு
ப்ராப்ய ஜன்மனீ
ராமக்ருஷ்ணாவிதி புவோ பகவாநஹரத் பரம்
பத்தொன்பதாவதும் இருபதாவதுமான அவதாரத்தில் ஸாக்ஷாத் பகவான் பூ பாரத்தை குறைக்க “வ்ருஷ்ணி” வம்சத்தில் ராமன் க்ருஷ்ணன் என்ற நாமங்களுடன் அவதாரம் செய்யப்போகிறார்.
பத்தொன்பதாவதும் இருபதாவதுமான அவதாரத்தில் ஸாக்ஷாத் பகவான் பூ பாரத்தை குறைக்க “வ்ருஷ்ணி” வம்சத்தில் ராமன் க்ருஷ்ணன் என்ற நாமங்களுடன் அவதாரம் செய்யப்போகிறார்.
தத: கலௌ ஸம்ப்ரவ்ருத்தே ஸம்மோஹாய
ஸுரத்விஷாம்
புத்தோ நாம்நா ஜனஸுத: கீகடேஷு
பவிஷ்யதி
இருபத்தோராவது அவதாரத்தில் கலியுகம் ஆரம்பித்த போது
அஸுரர்களை மயக்குவதற்காக கயாப்ரதேசத்தில் தனது பெயாரால் புத்தர் என்பவராய் அஜன
சுதராக அவதரிக்கப் போகிறார்.
(ராமக்ருஷ்ண அவதாரங்களுக்கு முன்னமே இந்த பாகவதம்
வ்யாசரால் ஸுகருக்குச் சொல்பட்டதால், இருபத்தொன்று இருபத்திரண்டு அவதாரங்கள் வரப்
போவதாகச் சொல்லப்பட்டன)
ஜனிதா விஷ்ணுயஸஸோ நாம்நா கல்கிர்
ஜகத்பதி:
பிறகு இந்த லோகபதியான ஸ்ரீபரமாத்மா கலியுக முடிவில்
அரசர்கள் யாவரும் கொள்ளைக்காரர்களாக ஆகியவளவில் கல்கி என்ற பெயருடன்
இருபத்திரண்டாவது அவதாரத்தில் விஷ்ணுயசஸ் என்ற ப்ராமணனுக்குப் பிறக்கப்போகிறார்.
வற்றாதான குளத்திலிருந்து ஆயிரம் வாய்க்கால் கிளைகள்
தோன்றுமோ, அதுபோல் ஸத்வஸ்வரூபியான மகாவிஷ்ணு அவாதாரங்கள் பல எடுத்து, ஒவ்வொரு
யுகத்திலும் இந்திரனுடைய சத்ருக்களால் பீடிக்கப்பட்ட உலகத்தை காப்பாற்ற
அவதரிக்கிறார். எந்த மனிதன் பரிசுத்தாமாய் காலையிலும் மாலையிலும் இறைவனது இந்த பரம
ரகசியமான ஸ்ரீபகவதவதாரத்தை பக்தி ஸ்ரத்தையுடன் சொல்கிறானோ கஷ்டங்கள்
பலவற்றிலிருந்து விடுதலை அடைகிறான்.