மஹாபாரதத்தை நாரதர் சொல்ல வ்யாஸர் எழுத, சுகர்
ஏனைய ரிஷிகளுக்கு அதனைக் கூற, பரீக்ஷித் மஹாராஜன் கேட்கப்பட்டதாக படைக்கப் பட்ட
காவியம். விதுரர் தர்மத்தின் அம்சம். அவருக்கு தெரியாத பாகவதம் இல்லை. இருந்தும்
மைத்ரேயர் சொல்லி அனுபவிக்கிறார். சொல்வதால் கேட்பவரும் சொல்பவரும் பயன் அடைவதால்,
நாமும் அதனை பிறருக்குச் சொல்லி அதன் பலனை நுகருவோம்.
உற்பத்தி, வளர்ச்சி, நாசம் மற்றும் தேஜஸ், ஜலம்,
ப்ருதுவி மேலும் தமஸ், ரஜஸ், ஸத்வம் இவைகளுடைய பூதம், இந்திரியம், தேவதை இவைகள்
எல்லாம் பரமாத்மா. அந்த பரமாத்மா உபதேசித்த பாகவதத்தில் அஸூயை அற்றவர்களாக
இருப்பதும், க்ஷேமத்தை அளிப்பதும், சாஸ்திரங்களால் அறியமுடியாததையும் கூட
அறிவிப்பது. அப்படிப்பட்ட அமிர்தமான பழத்தினை, மகாவிஷ்ணுவின் ப்ரதேசமான நைமிசாரத்தில்
சௌனகர் முதலான மஹரிஷிகள் ப்ராதக் காலத்தில் ஸ்வர்க்கத்தை அடையும் பொருட்டு ஆயிரம்
ஆண்டுகள் அனுஷ்டிக்கத்தக்க ஸத்ர யாகத்தை அனுஷ்டித்தும் பிறகு சுகர் என்ற கிளி,
ரஸமான பாகவதம் என்ற கனியை ருசித்து அதன் ரஸத்தைச் சொல்ல அதனை அனுபவித்தும்
மோக்ஷத்தை அடைந்ததாகக் கூறுவர்.
நிகம கல்பதரோர் களிதம் பலம்
சுகமுகாதம்ருதத்ரவ ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம்
முஹுரஹோ ரசிகா: புவி பாவுகா
இந்தக் கலியில் ஜனங்கள் சோம்பல் மிகுந்தவராகவும்,
அற்ப ஆயுள் உள்ளவர்களாகவும், தீவினைப் பயன் உடையவர்களாகவும், வ்யாதியால்
பீடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். முறையான அனுஷ்டிக்க வேண்டிய அனேக
கர்மாக்களை அனுஷ்டிக்காவிட்டாலும் பரவாயில்லை பகவன் நாமாவை பஜித்தாலே
பரிசுத்தமடைவார்கள் என்று சுகர் கூற ஏனைய மகரிஷிக்கள் ஸ்ரவணம் செய்ய அந்த பாகவதம்
என்ற இதிஹாஸத்தை நாமும் கேட்டு பயனடைவோம்.
த்வம் ந: ஸந்தர்ஸிதோ தாத்ரா துஸ்தரம்
நிஸ்திதீர்ஷதாம்
கலிம் ஸத்வ ஹரம் பும்ஸாம் கர்ணதார இவார்கணம்.
மக்களின் சக்தியை அபஹரிக்கக் கூடியதும்,
கடக்கமுடியாததுமான கலியுகமாகிய கடலை கடக்க முயலுகின்றவர்களான நம் போன்றவர்களுக்கு
ப்ரும்மாவினால் படகோட்டி போல் சுகர் இருந்து காட்டுவதாக ஐதீகம்.
.............................இனி வரும்
அஞ்சல்கள் மூலமாக படகில் அமர்ந்து ஏனைய காட்சிகளை ரசிக்கலாம்.
நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்
No comments:
Post a Comment