பாவத்யேஷ ஸத்வேன லோகான் வை
லோகபாவன:
லீலாவதாரானுரதோ தேவ
திர்யங் நராதிஷு
இந்த உலகரக்ஷகனான வாஸுதேவன் தனது சக்தியால் தேவன்,
நரன், மிருகம் முதலியனவாகக் கொண்ட லீலாவதாரங்களில் பற்று கொண்டு உலகம் அனைத்தயும்
ரக்ஷிக்கின்றார். அவர்
வாஸுதேவபரா வேதா
வாஸுதேவபரா மகா:
வாஸுதேவபரா யோகா
வாஸுதேவபரா: க்ரியா:
வாஸுதேவபரம் ஞானம்
வாஸுதேவரம் தப:
வாஸுதேவபரோ தர்மோ வாஸுதேவ பராகதி:
இப்படிப்பட்ட வாஸுதேவனை பூஜிப்பதை விட்டு ரஜோகுணம், தமோகுணம், இவற்றை உடையவர்களும்,
இதற்கு சமமான குண்ங்களை உடையவர்களும் லக்ஷ்மீ, சந்தானம், ஐஸ்வர்யம் இவைகளை விரும்பி
பித்ருக்கள், பூதங்கள், யமன் முதலியர்களையே சேவிக்கின்றனர். ஆனால் மோட்சத்தை அடைய
விரும்புவர்கள் பயங்கர உருவத்தை உடைய மற்ற க்ஷூத்ர தேவதைகளை விட்டு மற்ற தேவதைகளிடத்தில்
அசூயை அற்றவராய் ஸ்ரீமன் நாராயணனை பூஜிக்கின்றனர்.
ஸத்வம், ரஜஸ், தமஸ் என்று சொல்லக்கூடிய மூன்று குணங்கள் உலகின் ஆக்கல்,
அளித்தல், அழித்தல் இவைகளின் பொருட்டு அதற்கான ஸ்ரேஷ்டர்களான ப்ரும்மா, நாராயணன்,
சிவன் என்ற பெயர்களைத் தருகிறார்கள். அவைகளில் மத்தியில் ஸத்வகுணரூபியான வாஸுதேவனாலேயே
உலகிற்கு மங்களம் உண்டாகிறது.
விறகிலிருந்து புகையும், அப்புகையிலிருந்து கார்ஹபத்யம் ஆஹவனீயம் தக்ஷிணாக்னி
என்ற மூன்றான அக்னி உண்டாகிறது. தமோ குணத்திலிருந்து ரஜஸ் என்ற குணமும், அந்த
ரஜஸிலிருந்து பரப் பிருஹ்ம்ம ஞான ஹேதுவான ஸத்வ குணம் உண்டாகிறது. இக் காரணத்தால்
மகரிஷிகளும் அக்காலத்தில், பகவான வாஸுதேவனையே சரணமாக அடைந்தனர்.
வதந்தி தத்தத்வ விதஸ்தத்வம் யஜ்ஞான மத்வயம்
ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவாநிதி ஸப்த்யதே
என்று ஸுதர் கூறினார். வாஸுதேவனே ப்ரும்மம், பரமாத்மா. அந்த உண்மையே ஞானம்
என்றும் கூறினார்.
பின் பகவானின் அவதாரங்களை வர்ணிக்கிறார். எவ்வாறு?.................
(இதி ஸ்ரீமத் பாகவதே மகாபுராணே ப்ரதமஸ்கந்தே
நைமீஷீபாக்யானே த்விதீயோத்யாய)
No comments:
Post a Comment