Sunday, December 7, 2014

Vyasa Depicts Bagawatha to Sukha - a beginning

அங்கு மனோகரமான ஸ்ரீவாஸுதேவனின் கதைகளைக் தினந்தோறும் கேட்டும் கானம் செய்தும் பரிசுத்தமான கீர்த்தியை கலாவதியின் பாலகனான நாரதர் அடைந்தார். எந்த ஞானத்தால் விஷ்ணுபதத்தை ஸாதுக்கள் அடைந்தார்களோ அந்த மார்கத்தை அந்த பாலகன் அடைந்தான். அந்தப் பாலகனின் தாயார் ஒரு நாள் இரவு பாம்பு தீண்டியதால் இறந்தாள். அவளது மரணத்திற்குப் பின் அந்த பாலகன் வடக்குத் திக்கை நோக்கிப் புறப்பட்டான். ஸர்ப்பங்கள், கோட்டான்கள், நரிகள் இவைகளின் இருப்பிடமாக உள்ளதும் மிகக் கோரமான பெருங்காட்டில் ஒரு தடாகத்தில் நீர் அருந்தியபின், அரச மரத்தடியில் உட்கார்ந்து, பரமாத்மாவை மனத்தினால் வேத முறைப்படி த்யானித்தார். அப்பொழுது ஸ்ரீவாஸுதேவன் மெதுவாக அவனது மனத்தினில் அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து அது மறைந்தவுடன் மிகவும் மனம் வருந்தி அந்த பகவானை அழைக்க, அந்தப் பிறவியில் அந்தப் பாலகன் பகவான் வாஸுதேவனைப் பார்க்க இயலாததால் மரண காலமும் தோன்றிற்று.
ப்ரும்ம கல்பத்தின் முடிவில் இந்த மூன்று உலகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு ப்ரளய சமுத்திர ஜலத்தில் ஸ்ரீநாராயணன் படுக்கும் பொழுது துயில் கொள்ள விரும்பிய ஸ்ரீப்ரும்மதேவனின் மூச்சுக் காற்றோடு அந்த பாலகனின் ஆத்மா உள்ளே ப்ரவேசித்தது.
-----------------------------------------------------------------------------------------------------
ஸஹஸ்ரயுக பர்யந்தே உத்தாயேதம் ஸிஸ்ருக்ஷத:
மரீசிமிஸ்ரா ருஷய: ப்ராணேப்யோஹம் ச ஜஜ்ஞ்சிரே 
ஸ்ரீமத்பாகவதம்  1.6.31
----------------------------------------------------------------------------------------------------------------
ப்ரும்மாவின் கணக்குப்படி ஆயிரம் யுகங்களின் முடிவில் எழுந்து இந்த அகில் உலகத்தையும் படைக்க விரும்பிய ப்ரும்மாவினது ப்ராண வாயுக்களிலிருந்து மரீசி முதலிய ஒன்பது மகரிஷிகள் ஜனித்தார்கள். பிறகு நாரதரும் ஜனித்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------
தேவதத்தாமிமாம் வீணாம் ஸ்வர ப்ரஹ்ம விபூஷிதாம்
மூர்ச்சயித்வா ஹரிகதாம் காயமான ஸ்சராம்யஹம்
ஸ்ரீமத்பாகவதம் 1.6.33
----------------------------------------------------------------------------------------------------------------
பகவானால் நேரில் கொடுக்கப்பட்டதும் “நிஷாதம் முதலிய நாத ப்ரும்மத்தால் அலங்கரிக்கபட்டதுமான வீணையை மீட்டிக் கொண்டு ஸ்ரீவாஸுதேவனது சரிதத்தை கானம் பண்ணுகின்றவராய் நாரதர் ஸஞ்சரிக்கத் தொடங்கினார்.
நாரதரது இந்த வ்ருத்தாந்தத்தை கேட்டபின் மனது சஞ்சலம் நீங்கி இலந்தைமர ஸமூகங்களால் அலங்கரிக்கப்பட்ட “சம்யாப்ராஸம்” என சொல்லப்படும் ஆஸ்ரமத்தில் “ஸ்ரீமத் பாகவதம்” என்ற ஸம்ஹிதத்தை செய்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ ஸம்ஹிதாம் வை ஸ்ரூயமாணாயாம் க்ருஷ்ணே பரம் பூருஷே
பக்தி ருத்பத்யதே பும்ஸ: ஸோகமோஹ பயாபஹா
ஸ ஸம்ஹிதாம் பாகவதீம் க்ருத்வானுக்ரம்ய சாத்மஜம்
ஸுகமத்யாபயாமாஸ நிவ்ருத்திநிரதம் முனி:
ஸ்ரீமத்பாகவதம் 1.7.7,8
-------------------------------------------------------------------------------------------------------------
எந்த பாகவதக் கதையானது கேட்டபொழிதினிலேயே ஜனங்களுக்கு க்ருஷ்ண பரமாத்மாவிடத்தில் “துக்கம், மோஹம், பயம்” இவைகள் போகக்கூடிய பக்தி ஏற்படுகிறதோ அந்த ஸம்மிதையை பரிசோதனை செய்தும் முற்றும் துறந்த தனது பிள்ளையான சுகருக்கு கற்பித்தார்.

No comments:

Post a Comment