தெய்வம், புண்யதீர்த்தம், ப்ராமணன், மந்த்ரங்கள், ஜோதிடர்கள்,
மருத்துவர், குரு இவர்களிடம் ஒருவன் எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறானோ,
நம்பிக்கைக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்
32.दुर्जनः परिहर्तव्यो
विद्ययाऽलंकृतोऽपि सन् ।
मणिना भूषितस्सर्पः किमसौ न भयंकर: ॥
பாம்பிற்கு மணியால்
அலங்கரிக்கப்பட்டாலும் அதன் பயங்கரம் இருக்கும். அதேபோல் கெட்டவர்கள் கல்வியால்
மிளிரினாலும் அவர்களை விட்டு விடவேண்டும்.
33.दुर्जनः प्रियवादी च
नैव विश्वाकारणम् ।
मधु तिष्ठति जिह्वाग्रे हृदये तु हलाहलम् ॥
தீயவர்கள் ப்ரியமாக பேசினாலும் நம்பிக்கையற்றவர்கள்;
நாக்கின்
நுனியில் தேன் இருக்கும் மனதிலோ கொடியவிஷம் உள்ளவர்கள்.
34.दुर्ल्लभं प्रकृतं मित्रं दुर्ल्लभः क्षेमकृत् सुतः ।
दुर्ल्लभा सदृशी भार्या दुर्ल्लभः स्वजनप्रियः ॥
உண்மையான நண்பன் கிடைப்பது
அரிது;
நன்மை செய்யக்கூடிய புத்ரன் கிடைப்பது
அரிது
சிறந்த இணையான மனைவி கிடைப்பது
அரிது
இனிய அன்பான உறவினர்கள்
கிடைப்பது அரிது
35.दृष्टिपूतं न्येसेत्पादं
वस्त्रपूतं जलं पिबेत्।
सत्यपूतम् वदेद्वाचं मनःपूतं
समाचरेत् ॥
கண்களால் நன்கு கவனித்து கால்களை எடுத்து வைக்கவேண்டும்
துணியால் வடிக்கட்டி தூய்மையான ஜலத்தை குடிக்கவேண்டும்
உண்மையுடன் கூடிய வார்த்தைகளயே பேசவேண்டும்
மனதினால் தூய்மையான கார்யங்களயே செய்தல் வேண்டும்
36.धनधान्यप्रयोगेषु
विद्यासंग्रहणेषु च ।
आहारे व्यवहारे च त्यक्तलज्ज सुखी
भवेत् ॥
தனம் தான்யம் உபயோகிக்கும்
போதும், வித்தையை கற்கும் போதும்,
உணவு உண்ணும் போதும், பெரியோர்களிடத்தில் விஷயத்தை
க்ரஹிக்கும் போதும், வெட்கத்தை விட்டவன் சுகம் அடைவான்.
37.धनानि जीवितश्चैव परार्थे प्राज्ञ
उत्सृजेत्
सन्निमित्ते वरं त्यागो विनाशे नियते
सति
ஆகையால் அதனை கைவிடவேண்டும் படித்தவர்கள் .
மற்றவர்களுக்காகவும் நற்காரியங்களுக்கும் த்யாகம்
செய்வதே
சிறந்ததாகும்.
38.धनिकः श्रोत्रियो राज नदी वैद्यस्तु पञ्चमः ।
पञ्च यत्रनविद्यन्ते तत्र वासं न कारयेत् ॥
இந்த ஐவர்கள் எங்கு வசிக்கவில்லையோ அங்கு வசிக்கக்கூடாது
39.धर्म एव हतो जन्ति धर्मो रक्षति
रक्षित:
तस्माद्धर्मो न् जन्तव्यो मा नी धर्मो हथोऽवधीत्
தர்மம் கொல்லப்பட்டால் அது
நம்மை கொன்றுவிடும்.
தர்மமானது காப்பாற்றப்பட்டால் அது நம்மை காக்கும்.
ஆகையால் தர்மம் கொல்லப்படவேண்டாம்.
தர்மம் நம்மை கொல்லவும் வேண்டாம்.
40.धृति: क्षमा दमोऽस्तेयं
शौचमिन्द्रियनिग्रह:
धीर्विद्या सत्यमक्रोधो दशकं धर्मलक्षणम्
தைர்யம், பொறுமை, தன்னடக்கம், திருடாமை, தூய்மை,
புலனடக்கம், அறிவு, கல்வி, உண்மை, கோபமின்மை, என்ற பத்தும் தர்ம லக்ஷணமாகும்.
No comments:
Post a Comment