சுபாஷிதம் பகுதி - 3
21.कोकिलानां स्वरो रूपं नारी रूपं
पतिव्रताम्
विद्या रूपं कुरूपाणां क्षमा
रूपं तपस्विनाम्
குயில்களுக்கு அதன் குரல் அழகு
பெண்களுக்கு பதிவ்ருதையாக இருப்பது அழகாகும்
அழகற்றவர்களுக்கு அவர்கள் கல்வியே அழகாகும்
தவம் செய்பவர்களுக்கு பொறுமையே அழகு
22.एकेनापि सुवृक्षेण पुष्पितेन सुगन्धिना
22.एकेनापि सुवृक्षेण पुष्पितेन सुगन्धिना
वासितं स्यात्वनं सर्वं सुपुत्रेण कुलं यथा
வாசனை நிறைந்த பூக்களையுடைய ஒரே ஒரு நல்ல மரத்தினால் காடு முழுவதும் நறுமணத்தை உடையது போல
நற்குணம் நிறைந்த மகனால் அக்குலமே சிறப்படையும்.
23.कोऽतिभार: समर्थानां किम् दूरं
व्यवसायिनाम्
को विदेश: सविद्यानां, क: पर:
प्रियवादिनाम्
திறமை உடையவர்களுக்கு கடினமான
காரியம் இல்லை
முயற்சி உடையவர்களுக்கு குறிக்கோள்
தொலைவில் இல்லை
கல்வி அறிவு உடயவர்களுக்கு அயல் நாடு என்று ஒன்று இல்லை
கல்வி அறிவு உடயவர்களுக்கு அயல் நாடு என்று ஒன்று இல்லை
ப்ரியமாக பேசுபவர்க்கு
மற்றவர்கள் அந்நியர்கள் அல்ல.
24.कोऽर्थ: पुत्रेण जातेन यो न
विद्वान् न भक्तिमान्
कानेन चक्षुषा किं वा चक्षु: पीडैव
केवलम्
வித்வானாகவோ பக்திமானாகவோ இல்லாத புத்திரன்
உயிருடன் இருந்தும் என்ன ப்ரயோஜனம்.
கண் இருந்தும் ப்ரயோஜனம் இல்லை.
கண்கள் குருடாய் இருப்பதற்கு சமம்.
உயிருடன் இருந்தும் என்ன ப்ரயோஜனம்.
கண் இருந்தும் ப்ரயோஜனம் இல்லை.
கண்கள் குருடாய் இருப்பதற்கு சமம்.
25.कः कालः कानि मित्राणि को देशः कौ
व्ययागमौ।
कस्याहं का च मे शक्तिरिति चिन्त्यं
मुहुर्मुहु: ॥
எந்தக் காலம், யார் நண்பர்கள், எந்த நாட்டில் இருக்கிறோம்,
வரவு செலவுகள் என்ன, என்னுடைய
சக்தி என்ன,
என்பவைகளை அடிக்கடி எண்ணவேண்டும்.
என்பவைகளை அடிக்கடி எண்ணவேண்டும்.
25.क्वचिद्रुष्ट:
कविचित्तुष्टो रुष्टस्तुष्ट: क्षणे क्षणे |
अव्यवस्थितचित्तस्य प्रसादोऽपि
भयङ्कर:
சில நேரங்களில் கோபமுடையவனாகவும் சில நேரங்களில்
மகிழ்ச்சியுடையவனாகவும் கோபமும்
மகிழ்ச்சியும் மாறி மாறி நிலையற்ற எண்ணங்களை உடையவரின் அருளும் ஆபத்தானவை
26.गुणैरुत्तमतां याति
नोच्चैरासनमास्थितः।
प्रासादशिखरस्थोऽपि काक: किं गरुडायते
?॥
உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் இருப்பதால் காகம் எப்படி
கருடனாகும் ஒருவன் நற்குணங்களினால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைகிறான்;
உயர்ந்த ஆசனத்தில் அமர்வதால் அல்ல.
27.चलन्ति तारा रविच्न्द्रमण्डलं चलेच्च
मेरुविचलेच्च मन्दर: ।
कदादि काले पृथिवि चलेच्च वै चलेन्न
धर्म: सुजनस्य वाचिकम्॥
நக்ஷத்திரங்களும் சூரிய சந்த்ர மண்டலங்களும் நிலை மாறலாம்.
மேரு மலையும் அசையலாம் மந்தர மலை மாறலாம்.
எப்பொழுதாவது பூமியும் மாறலாம்
நல்லோர்களின் தர்மமும் வார்த்தையும் என்றுமே மாறாது
மேரு மலையும் அசையலாம் மந்தர மலை மாறலாம்.
எப்பொழுதாவது பூமியும் மாறலாம்
நல்லோர்களின் தர்மமும் வார்த்தையும் என்றுமே மாறாது
28.ताराणां भूषणं चन्द्रो नारीणाम्
भूषणं पतिः ।
प्रिथिव्या भूषणं राजा विद्या
सर्वस्य भूषणम् ॥
நக்ஷத்திரங்களுக்கு சந்திரன் அணிகலன்
பெண்களுக்கு கணவன் அணிகலன்
பூமிக்கு ராஜா அணிகலன்
கல்வி எல்லோர்க்கும்
அணிகலன்
29.त्यज दुर्जनसंसर्गं भज
साधुसमागमं।
कुरुपुण्यमहोरात्रं स्मर
नित्यमनित्यताम् ॥
தீயவர்களின் சேர்க்கையை விட்டு விடு
நல்லோர்களின் சேர்க்கையை வைத்துக் கொள்
இரவு பகலாக புண்யத்தை
செய்
எப்பொழுதும் நிலையின்மையை நினை॥
30.दानेन पाणिर्नतुकंकणेन स्नानेन
शुद्धिर्नतु चन्दनेन।
मानेन तृप्तिर्नतुभोजनेन ज्ञानेन
मुक्तिर्नतु मुण्डनेन ॥
கைகள் தானம் செய்வதால் அழகு கங்கணம்
அணிவதால் அல்ல
தூய்மை குளிப்பதால் சந்தனம் பூசிக் கொள்வதால் அல்ல
கௌரவத்தினால் த்ருப்தி சாப்பிடுவதால் அல்ல
முக்தி ஞானத்தினால் தலைமுடியை மழிப்பதால் அல்ல
தூய்மை குளிப்பதால் சந்தனம் பூசிக் கொள்வதால் அல்ல
கௌரவத்தினால் த்ருப்தி சாப்பிடுவதால் அல்ல
முக்தி ஞானத்தினால் தலைமுடியை மழிப்பதால் அல்ல
No comments:
Post a Comment