Monday, August 29, 2016

FAITH - HTIAF


Faith is like WIFI
IT IS INVISIBLE
BUT IT HAS THE POWER
TO CONNECT YOU
TO WHAT YOU NEED

31.देवे तीर्थे द्विजे मन्त्रे देवज्ञे भेषजे गुरो
यादृशी भावना यस्य सिध्दिर्भवति तदृशी

தெய்வம், புண்யதீர்த்தம், ப்ராமணன், மந்த்ரங்கள், ஜோதிடர்கள், மருத்துவர், குரு இவர்களிடம் ஒருவன் எப்படிப்பட்ட நம்பிக்கை வைக்கிறானோ, நம்பிக்கைக்கு ஏற்ற  வெற்றி கிடைக்கும்.


கடவுளிடம் நம்பிக்கை என்பதற்கு ஒரு நிகழ்வு ஒன்று இன்று நடந்தது. எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாதமுனி நாராயணன் ஸ்வாமிகள் பல ஆண்டுகளாக பூஜித்து வந்த “வேல் பிள்ளையார் செய்த அதிசயம், நம்பிக்கை பலனை அளிக்கும் என்ற பழம் சொல்லுக்கு இலக்கணமாக வழிவகுத்தது.

நாங்கள் வசிக்கும் அடுக்கு மனைகளில், ஒரு மனையில் குடியிருப்பவர்; ஒரு நடுத்தர வயதினர்; பொருளாதார ரீதியில் சற்று பின் தங்கியவர்; கடவுள் அளித்ததை நிறைவாகக் கொண்டு வாழ்ந்து வருகையில், அவருக்கு கடவுள் ஒரு சிறிய சோதனையை முன் வைத்தார். திடீரென்று நோய்வாய்ப்பட அவரை நகரத்திலுள்ள ஒரு பெரிய வைத்தியசாலையில் சேர்த்தனர். மூளையில் ஒரு இரத்த அடைப்புள்ளதென்று மருத்துவர்கள் சொல்ல, கவலையில் ஆழ்ந்தனர்.


எங்களுக்குத் தெரிந்த வைத்தியம் “வேல் பிள்ளையார் ஒருவர் தான். அந்த தம்பதியினரும் “வேல் பிள்ளையாரின் விபூதியை உள்ளும் வெளியிலும் உட்கொள்ள, மருத்துவ செலவையும் குறைத்து, நோயின் தன்மையையும் குறைத்து அவர்கள் வாழ்வில் மறுபடியும் ஒரு நல்ல வசந்தம் வந்தார்ப் போல செய்தார் எங்கள் “வேல் பிள்ளையார். பிள்ளையார் சதுர்த்தி இதோ வருகிறது. நாமும் அவரை துதிப்போம்.

No comments:

Post a Comment