Sunday, September 25, 2016

Thiru Venkatapathy Iyengar - Centenary Celebrations

எங்களது குருநாதர் பூஜ்யஸ்ரீ நாதமுனி நாரயண ஐயங்காரைப் பார்த்து அளவாளாவ, மற்றும் அவரது ஆசி பெற, பலர், நாங்கள் முன்பு வசித்த வெங்கடரங்கம் பிள்ளைத் தெரு இல்லத்திற்கு வந்ததுண்டு. 1956ம் ஆண்டிலிருந்து அவர் ஸம்ப்ரதாய பஜனையை நடத்தி வந்தார். நாம ஸங்கீதத்தில் பங்குகொள்ளவும் பலர் வந்துள்ளனர். விதவிதமாய் அனுபவங்கள். அவரது ஆகர்ஷண சக்தியால் அவரைக் காண வந்த பலர் அவரை குருவாக ஏற்றுக் கொண்டனர். எங்கள் இல்லத்தில் இருந்தவர்களுக்கு இத்தகைய தொடர்பால் பல அதிசய ஆனந்த அனுபவங்கள்.
எங்கள் குருநாதரின் ப்ரதம சிஷ்யரான (தொலைக்காட்சி முன்னாள் உதவி இயக்குனர்) கலைமாமணி ராமக்ருஷ்ணன் பலரை எங்களது குருநாதருக்கு அறிமுகம் செய்வித்துள்ளார். அவ்வாறு ஒரு நாள், திரு வெங்கடபதி ஐயங்காரை எங்களது இல்ல நாமசங்கீர்த்தனத்தில்  அறிமுகப்படுத்தினார். அவரது கணீர் என்ற குரலும், பாடல்களை கையாள்வதின் லாவகமும் எங்களை ப்ரமிப்பூட்ட வைத்தது. பின்பு அறிந்தோம் அவரைப்பற்றி.  
ஸ்ரீ SPS வேங்கடபதி ஐயங்கார்
(1916 – 2016)
 இன்று திரு வெங்கடபதி ஐயங்காரின் நூற்றாண்டு விழா தக்கர் பாபா பள்ளி அரங்கில் நடந்தது.  Dr.Col. கிருஷ்ணன், ஸ்ரீ.சுப்ரமணியன், Dr.சடகோபன், ஸ்ரீ கண்ணன், ஸ்ரீ.விப்ர நாராயணன் மற்றும் சங்கீத ரசிகர்கள் முன்னிலையில்  திரு ராமக்ருஷ்ணன், திரு வெங்கடபதி ஐயங்காரப் பற்றியும், ஸத்குரு த்யாகராஜர் கீர்த்தனைகளின் சங்கீத பொருள் கலவை பற்றியும், சங்கீதமாக வெளிப்படுத்தினார். ஒர் அருமையான அனுபவம்.

திரு வெங்கடபதி ஐயங்காரைப் பற்றி மின் வலையில் சிக்கிய ஒரு கற்கண்டு.  இவரது மகள் வழி பேரன் திரு விஜை ஆனந்த் ராமானுஜத்தின் ஒரு தொகுப்பு மிகவும் சுவையாகவும், செய்திகள் நிறைந்ததாகவும் உள்ளது.


No comments:

Post a Comment