எனது உறவினர் இல்லத்தில் இந்த சித்திரத்தைக் கண்டேன். இது 1940-50 வருடங்களில் வெளி வந்த நாட்காட்டியில் வந்த வண்ணச் சித்திரம். இந்த சித்திரத்தின் பின்னணிக் கதையினை அறிய, வலைத்தளத்தைச் சிறிது ஆராய்ந்ததில் பாரதக் கதையில் சொன்ன ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைப் பற்றிய ஒரு தொகுப்பினைப் படித்தேன்.
இதோ உங்களுடன் இந்த நிகழ்வினை பகிர்கிறேன்.
ஞான் என்பவன் ஒரு கந்தர்வன். பதவி, புகழ், செல்வாக்கு என்பது இருந்தால் யார் தான் செருக்குடன் இருக்கமாட்டார்கள். அதற்கு இந்த கந்தர்வன் விதி விலக்கு இல்லை. ஒரு சமயம் இந்த கந்தர்வன் ஆகாய மார்கமாக துவாரகைக்கு மேல் செருக்குடன் சென்றான். கீழே உள்ளவர் நாராயணன் என்பதை மறந்து, கண்ணன் தானே என்று அலட்சியாமாக தேரை ஓட்டிச் சென்றதோடு அல்லாமல், அவரை கீழே தள்ளும் அளவிற்குச் சென்றான். க்ருஷ்ணரின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்த கந்தர்வன், அவரிடம் மன்னிப்புக் கேட்காமல், நிற்காமல் சென்றான். கோபமுற்ற கண்ணன் அவனை வதம் செய்யப் ப்ரகடனப் படுத்தியதை அறிந்த அவன் பயந்து, இந்திரனிடம் உதவி கோரி சென்றான். மறுத்தவுடன் ப்ரும்மா, பின்பு சிவன் என்று ஒவ்வொருவராக அழைத்தான். எல்லோரும் கண்ணனிடம் மன்னிப்புக் கோர அறிவுரை வழங்கினர்.
நாரதர் இந்த இக்கட்டான சூழ்னிலையை தனது விளையாட்டிற்கு ஒரு காரணியாகக் கொண்டார். அர்ஜுனன் ஒர் அரசன். யார் அபயம் என்று வந்தாலும் காப்பது அரச தர்மம். அந்த தர்மத்தை பயன்படுத்தி, கந்தர்வனை அர்ஜுனனிடம் உதவி கேட்க அனுப்பினார். அர்ஜுனன் கண்ணனிடம் மன்னிப்புக் கேட்க அறிவுரை கூறினான். ஆனால் கந்தர்வனோ, நாரதரின் அறிவுரைப்படி, “அரசனின் போர் தர்மம் அபயம் என்பவரைக் காப்பது” என்ற சாக்கைச் சொல்லி கண்ணனிடம் போர் தொடுக்க உந்துதல் அளித்தான். வேறு வழியின்றி இருவரும் போர் களத்தில் நிற்கின்றனர்.
அர்ஜுனன் பாசுபதாஸ்த்ரத்தை கையில் எடுக்க, க்ருஷ்ணர் சக்ராயுத்தை அழைக்க, ப்ரும்மா பதைபதைக்க ஓடி வருகிறார். அர்ஜுனனிடம் கந்தர்வனை க்ருஷ்ணரிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். க்ருஷ்ணர் அவனை வதம் செய்தவுடன், ப்ரும்மா அவனை உயிர்ப்பித்து நரநாராயணர்களை சமாதானப் படுத்துகிறார். வந்த வேலை முடிந்தது. நாரதர் அடுத்த பயணத்தை தொடர்கிறார்.
இந்த நிகழ்வை மிகவும் அற்புதமாக அந்நாளில் சித்தரித்துள்ளனர்.
No comments:
Post a Comment