Thursday, February 18, 2010

Sai Inspires

We say and feel that we have utmost faith in God.
But always we doubt and try to do using our intelligence.
We are not allowing things to happen and at times we try to overcome the situations or happenings.
Most of the time we fail and we start complaining God and we lose the faith on him.
See here what Baba says

Tuesday, February 16, 2010

ராகஸ்ரீ ஸாஹித்யம்

ராகஸ்ரீ  ஸாஹித்யம்
ராகம் சாரமதி    தாளம் ஆதி
பல்லவி
உன்னருள் மழை பொழிந்தால் இந்த
உலகெங்கும் மகிழ்ந்தாடுமே – அம்மா
அனுபல்லவி
விண்ணும் மண்ணும் வணங்கும் ஈஸ்வரியே
மின்னும் சுடர் ஒளியே மதுரை மீனாக்ஷியே
சரணம்
அன்பு பயிர் தழைக்க அறமாம் செல்வம் கொழிக்க
இன்பமெனும் தென்றல் என்றும் இசை அளிக்க
புன்னகயோடென்றும் புவியோர் எல்லாம் விளங்க
புத்தம் புதுமை எங்கும் பூத்து குலுங்கவே


Download அவர் அருள்!

Sunday, February 14, 2010

Sayee and Sapthaswara

ஸா ஸா ஸாயீ  ஸத்குரு சச்சிதானந்தா
ரீ ரீ ரிபுகண மோசன முக்தானந்தா
கா கா கான பிரதாதா ப்ரம்மானந்தா
மா மா மாய விலோலா முகாரவிந்தா
பா பா ப்ரேம ஸ்வரூபா பரமா நந்தா
தா தா தீரகம்பீரா அகிலா நந்தா
நீ நீ நிர்மல சரிதா நித்யா நந்தா

தெய்வத்தின் குரல்-சங்கீத பாதை

காஞ்சி மஹா பெரியவாள் காட்டும் சங்கீத பாதை 
தெய்வத்தின் குரல் என்ற தொகுப்பிலிருந்து சில துளிகள்
கலை என்பதற்காகவே பரவட்டும், பரப்பட்டும். சந்தோஷம் தான். ஆனாலும் ஆதியிலிருந்து இந்தக் கலைகளுக்கு எது லக்ஷ்யமாயிருந்ததோ அது மறந்து போகுமாறு விட்டுவிடக்கூடாது. ஈஸ்வரனிடம் கொண்டு நிறுத்துவதற்காகத் தான் இவை ஏற்பட்டிருக்கின்றன என்ற நினைப்பு போகக் கூடாது. சரபோஜி போன்ற ராஜாக்கள் கேட்டு கொண்டால் கூட,  ராஜ ஸதஸில் போய்ப் பாடுவதில்லை, நிதி வேண்டாம்; ஈஸ்வர சன்னதி தான் வேண்டும் என்று வைராக்யமாயிருந்த த்யாகையர்வாள் போன்ற மகான்களின் “ஐடியல்” எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். சாந்த சௌக்யத்தைத் தானும் அடைந்து மற்றவர்களும் அடைவிக்கப்பண்ணுவதாகவே காந்தர்வ வேதத்தை அதற்கான உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துக் காத்துக் கொடுக்க வேண்டும். கானம் பண்ணுவது, நடனம், நாடகம் மூன்றும் சேர்ந்து காந்தர்வ வேதம். இதனால் நமக்குப் பணம் வராது. வயிறு ரொம்பாது. இவற்றை கச்சேரி, ஸதிர் என்று பனண்ணுகிறவர்களுக்கு, நடிக்கிறவர்களுக்கு, நடத்துகிறவர்களுக்குத்தான் வயிறு ரொம்புகிறது. பர்ஸ் ரொம்புகிறது. பார்க்கப் போகிற நாம் நம் வயிற்றுக்காக வைத்துக் கொண்டிருப்பதை அங்கே கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருகிறோம். “யுடிலிடி” என்ற பாயிண்டில் இப்படி நஷ்டப்பட்டாலும் மனஸுக்கு மகிழ்ச்சி, உல்லாசம், உத்ஸாஹம், பொழுதுபோக்கு என்ற லாபம் கிடைப்பதால் இப்படிச் செய்கிறோம். இது மட்டும் “யுடிலிடி” இல்லையா?

சொல்லின் வலிமை

ஆஸ்ரமம் ஒன்றுக்கு விஜயம் செய்த மன்னன ஒருவன் “அரசாங்க காரியங்களைச் செய்யும் ஆற்றல் துறவிகளுக்கு இல்லை” என்று அகந்தையுடன் சொன்னான். அதற்கு அங்கிருந்த தலைமைத் துறவி “கழுதையைப் போல பொதி சுமக்க குதிரைக்கும் சக்தி உண்டு. ஆனால் சுமக்க சம்மதிப்பதில்லை. அதற்கென்று உள்ள முக்கியமான பணிகளை மட்டுமே குதிரைக்கு அளிப்பர். அதே போல் துறவிகளுக்கு அரசாங்க காரியங்களைச் செய்யும் ஆற்றல் உள்ளது. அவர்கள் அதை செய்ய விரும்புவதில்லை.
அவர்களுக்கென்று இதைவிட முக்கியமான பணிகள் அவர்களுக்கு இருப்பதால் அதனைச் தான் செய்வார்கள்” என்றார். 
சொல்லிற்கும் சுவைக்கும் நாவை அடக்கவில்லை என்றால் நாம் அதற்கு அடிமையாக வேண்டும்; அவலமும் பட வேண்டும்.  

Thursday, February 11, 2010

Maha Sivarathri

கௌரங்க ஹர தங்க கங்கா தரங்கே
யோகீ மஹா யோக காரூப ராஜே
பக சால முண்ட மால சசிபால கரதால
தாண்டேக டிமி டிமிக டிமி டமரு பாஜே
அம்பர பகம்பர திகம்பர ஜடாஜூட
பணிதர புஜங்கேச அங்க விபுதி சாஜே
வாணீ விலாஸ தும தாதா விதாதா
யாதா ஸகல துக்க ஸதாசிவ விரஜே
  
Click for Download ?