ராகஸ்ரீ ஸாஹித்யம்
ராகம் சாரமதி தாளம் ஆதி
பல்லவி
உன்னருள் மழை பொழிந்தால் இந்த
உலகெங்கும் மகிழ்ந்தாடுமே – அம்மா
அனுபல்லவி
விண்ணும் மண்ணும் வணங்கும் ஈஸ்வரியே
மின்னும் சுடர் ஒளியே மதுரை மீனாக்ஷியே
சரணம்
அன்பு பயிர் தழைக்க அறமாம் செல்வம் கொழிக்க
இன்பமெனும் தென்றல் என்றும் இசை அளிக்க
புன்னகயோடென்றும் புவியோர் எல்லாம் விளங்க
புத்தம் புதுமை எங்கும் பூத்து குலுங்கவே
சாரமதியில்அழைத்தால் மதுரை மீனாக்ஷியின்
ReplyDeleteஅருள் மழை பொழிவது திண்ணம்
எண்ணத்தில் நிறைந்து வண்ணமயமாய் அமரும் அருமையான பாடல் வரிகள்